Saturday, November 23, 2024
Homedellசோனி - டெல் டேப்லெட்டுகள் ஒப்பீட்டு பார்வை | Sony - Dell Tablet Comparison

சோனி – டெல் டேப்லெட்டுகள் ஒப்பீட்டு பார்வை | Sony – Dell Tablet Comparison

Cell Phone ஒரு காதிலும் , கையில் ஒரு லேப்டாப்புமாக அலைந்த காலம் மலையேறி வருகிறது. இந்த இரண்டு வசதிகளையும் ஒருங்கே தரக்கூடிய டேப்லெட்டுகளின் யுகம் (Eon of tablet pc) துவங்கிவிட்டது. இதனால், டேப்லெட் (Tablet) தயாரிப்பில் பல முன்னணி நிறுவனங்கள் அடுத்தடுத்து காலடி பதித்து வருகின்றன.

Sony - Dell Tablet Comparison

அந்த வகையில் மின்னணு சாதன தயாரிப்பில் புகழ்பெற்ற சோனி நிறுவனம் (Sony) சமீபத்தில் எஸ்-1 (S1)என்ற குறியீட்டு பெயரில் அறிமுகம் செய்துள்ள டேப்லெட் போனையும் (Tablet Phone), கம்ப்யூட்டர் தயாரிப்பில் பிரபலமான டெல்(Dell) அறிமுகம் செய்துள்ள ஸ்ட்ரீக்-10 டேப்லெட் போனின் (streak-10)சிறப்பம்சங்களின் ஒப்பீட்டைப் பார்ப்போம்.

முதலில் டிஸ்பிளே(Display) மற்றும் வடிவமைப்பை(Design) பார்க்கலாம். டெல் ஸ்ட்ரீக்-10 டேப்லெட் 5 இஞ்ச் எல்சிடி டிஸ்பிளேவுடனும்(5 Inch LCD Display), சோனி எஸ்-1 டேப்லெட் 9.4 இஞ்ச் டிஎப்டி டிஸ்பிளேவுடனும்(9.4 TFT Display) வந்துள்ளது. இதில், சோனி எஸ்-1 டிஸ்பிளே பெரிதாக இருந்தாலும், எல்சிடி டிஸ்பிளே இல்லாதது ஒரு பெரிய குறையாக தெரிகிறது.

இரண்டு டேப்லெட் போன்களும் ஆன்ட்ராய்டு இயங்கு(Android operating system) தளத்தை கொண்டது. இதில், டெல் ஸ்ட்ரீக் வி-2.2 ப்ரேயோ வெர்ஷனையும், சோனி எஸ்-1 ஆன்ட்ராய்டு 10.3 ஹனிகோம்ப் இயங்கு தளத்தையும் கொண்டிருக்கிறது.

சோனி எஸ்-1 டேப்லெட்டில் என்விடிஐஏ டெக்ரா-250 டியூவல் கோர் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. அதே டெல் ஸ்ட்ரீக்-10 போனில் க்யூவல்காம் 1 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்நாப்டிராகன் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதில், சோனி எஸ்-1 விஞ்சுகிறது.

சோனி எஸ்-1 டேப்லெட்டில் சோனி கிரையோசிட்டி பிளாட்பார்ம் இணைந்த மியூசிக் சாப்ட்வேரை கொண்டுள்ளதால் இசை மழையில் உங்களை நனைக்கும். ஆனால், டெல் ஸ்டீரிக் ஆடியோ பார்மெட்டில்(Audio Formar) சிறப்பாக இயக்கினாலும், சோனி எஸ்-1 அளவுக்கு இல்லை.

மற்ற எந்த டேப்லெட் போன்களிலும் இல்லாத வகையில் ப்ளேஸ்டேஷன்-1 மற்றும் ப்ளேஸ்டேஷன்-2 ஆகிய வசதியை கொண்டிருக்கும் சோனி எஸ்-1ல் வீடியோ கேம்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளதால், வாங்கியவுடனே வீடியோ கேம்களை ஆடலாம்.

புளூடூத்(Blue Tooth), யுஎஸ்பி போர்ட்(USB port) மற்றும் வைஃபை(WiFi) வசதிகள் இருக்கின்றன. ஒரே நேரத்தில் இரண்டு பக்கங்களை திறக்கும் வசதியும் சோனி எஸ்-1ல் இருக்கிறது. இந்த வசதி டெல் ஸ்ட்ரீக்கில் இல்லவே இல்லை.

டெல் ஸ்டீரீக் டேப்லெட்(Dell Streak Tablet Pc) போன் ரூ.20.250 விலையில் இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகிறது. ஆனால், சோனி எஸ்-1(Sony) மார்க்கெட்டில் விற்பனைக்கு வரவில்லை. அதேவேளை இந்த போன் ரூ.27,000 விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Tags: Sony Tablet, Dell Tablet, Tablet Comparison.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments