Monday, December 23, 2024
Homeblogger tipsபிளாக்கரில் ரீட்மோர் பட்டன் வைக்க | How to Put Read More Button in...

பிளாக்கரில் ரீட்மோர் பட்டன் வைக்க | How to Put Read More Button in Blogger Blog

read more button in blogger


Update: 2018 ம் ஆண்டிலிருந்து ப்ளாக்கர் பல வசதிகளை கொண்டு வந்துள்ளது. அதில் ரீட்மோர் – Read More வசதியும் ஒன்று. தற்பொழுது Read More பட்டன் வசதி கொண்ட  டெம்ப்ளேட் ப்ளாகரிலேயே உள்ளன. 

அவற்றைப் பயன்படுத்திடலாம். அதற்கென எந்த ஒரு நிரல் வரிகளை தனியாக சேர்த்திட தேவையில்லை. மேலும் ப்ளாகர் டெம்ப்ளேட்களிலேயே Responsive Blogger Templates கள் வழங்குகின்றனர். 

“ரெஸ்பான்சிவ்” டெம்ப்ளேட்களை பயன்படுத்துவதன் மூலம், கம்ப்யூட்டர் /மொபைல்களின் திரையளவிற்கு ஏற்ப ப்ளாக்கர் வலைத்தளம் மாறிவிடும்.

இந்த வசதிகளைப் பெறுவதற்கு, Blogger -ல் லாகின் செய்துகொண்டு, theme => customize கிளிக் செய்த பிறகு தோன்றும் Blogger Theme Designer ல் உள்ள டெம்ப்ளேட்களில் ஏதேனும் ஒன்றை (உங்களுக்கு விருப்பமானதை) தேர்ந்தெடுத்து Apply கொடுக்கலாம். 

theme - customise



குறிப்பு: Blogger Template களில் மாற்றம் செய்வதற்கு முன்பு கட்டாயம் அந்த டெம்ப்ளேட்டை Backup எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். 

இதனால் டெம்ப்ளேட் மாற்றத்தின் போது ஏதேனும் பிழை ஏற்படின், உடனே இதற்கு முன்பு பயன்படுத்திய டெம்ப்ளேட்டை Upload செய்து முந்தைய டிசைனுக்கு வந்துவிடலாம்.  

(டெம்ப்ளேட் பேக்கப் எடுக்க, Theme கிளிக் செய்து வரும் பக்கத்தில், வலது மேல் மூலையில் Backup/Restore என்ற பட்டனை அமுக்கி, Download Theme என்ற பொத்தானை அமுக்குவதன் மூலம் டெம்ப்ளேட்டினை “பேக்கப்” எடுத்திடலாம்.) 

நமது பிளாக்கரில் Read more பட்டன் வைப்பது எப்படி என்பதைப் பார்ப்போம்.. இது எதற்காக என்றால் முகப்பு பக்கத்தில் நிறைய பதிவுகளைத் தோன்றச் செய்யத்தான். அவ்வாறு பதிவுகளை சுருக்கி காட்டும்போது நம்முடை வலைப்பூவின் முகப்புப் பக்கத்தில் நிறைய பதிவுகளை காட்டலாம். நிறைய பதிவுகளை முகப்பு பக்கத்தில் காட்டுவதால் நம் தளத்திற்கு வரும் வாசகர்கள் நிறைய நேரம் நம் வலைப்பூவில் இருப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.

பதிவுகளை சுருக்கி காட்டுவதால் முகப்பு பக்கம் விரைவாக திறக்கும்.

ஒரு சில வலைப்பதிவுகளில் பயனுள்ள நல்ல பதிவுகள் அதிகம் இருக்கும். ஆனால் அவை முகப்பு பக்கத்தில் முழுப்பதிவையும் கொண்டிருக்கும். இப்படி முகப்பு பக்கத்தில் முழுப்பதிவும் இருப்பதால், வலைப்பூ திறக்க அதிகம் நேரம் எடுத்துக்கொள்ளும்.

இதனால் வலைப்பூவை படிக்க வரும் வாசகர்கள் தளம் திறக்க நேரமாகிறதே என்று சலிப்படைந்து நம் வலைப்பூவை மூடிவிட்டு அடுத்த வேறொரு வலைப்பூவுக்கு செல்ல நேரிடலாம். இதை தவிர்க்கவே இந்த ரீட்மோர் வசதியை அவசியம் நாம் நம் வலைப்பூவில் வைக்க வேண்டும்.

Read more button அல்லது மேலும் வாசிக்க என்பதை இடுகைகளில் தோன்றச் செய்வது மிகவும் சுலபம்.

உங்களது பிளாக்கரில் create new post என்பதை கிளிக் செய்தால், அதில் தோன்றும் விண்டோவில் html /compose என்று இரண்டு இருக்கும். .நீங்கள் compose மோடில் உங்களது இடுகைகளை டைப்செய்து முடித்துவிட்டு,   முகப்பு பக்கத்தில் எத்தனை வரிகள் தோன்றச்செய்ய வேண்டிமோ அத்தனை வரிகளை விட்டு இந்த ரீட்மோர் பட்டனை (insert jump Break) கிளிக் செய்ய வேண்டும்.

(மேலே உள்ள பேப்பர் இரண்டு துண்டுகளாக கிழிந்து இருப்பதைப் போன்ற பட்டனை கிளிக் செய்தால் குறுக்கு கோடு வந்துவிடும். இதையே Edit Html என்ற பட்டனை கிளிக் செய்தால் <!–more–> என்ற கோடிங் வந்திருக்கும்..)

கிளிக் செய்தவுடனே ஒரு கோடு வரும். அந்த கோட்டிற்கு  மேலே இருக்கும் பகுதிதான் நமது வலைப்பூவின் முகப்புப் பக்கத்தில் தெரியும். அதற்கு கீழ் Read more என்ற எழுத்துக்கள் தெரியும். அதை கிளிக் செய்தால் முழு பதிவும் தெரியும்.

இந்த Read more என்பது ஆங்கிலத்தில் உள்ளது. நமக்கு தமிழில் வேண்டும் என்றாலும் அதை நாம் மாற்றிக்கொள்ளலாம்..அதற்கும் ஒரு எளிய வழி உள்ளது.

உங்கள் dashboard சென்று design==>page Element==> செல்லுங்கள்..அங்கு blog post என்று ஒரு கேட்கெட் இருக்கும்.. அதன் வலது மூளையில் Edit என்ற பட்டன் இருக்கும்..


அதை கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் படத்தில் காட்டியபடி தோன்றும் அதில் Post page link text: என்பதற்க்கு நேராக உள்ள கட்டத்தில் மேலும் வாசிக்க என்று டைப் செய்து save செய்து கொள்ளுங்கள்..


இப்போது முகப்பு(Home) பக்கத்தை கிளிக் செய்து பார்த்தால் read more என்பதற்கு பதிலாக மேலும் வாசிக்க என்று வந்திருக்கும்.

இனி உங்கள் பிளாக்கரில் முகப்பு பக்கத்தில் இடுகைகள் முதல் பத்தியோடு சுருக்கப்பட்டு அழகாக காட்சியளிக்கும்.


குறிப்பு: நாம் தேர்வு செய்யும் டெம்ப்ளேட்டைப் பொறுத்து Read more என்பது பல்வேறு வகைகளில் கொடுத்திருப்பார்கள்.. ஒரு சில டெம்ப்ளேட்க்களில் Read rest of entry என்றும் கொடுத்திருப்பார்கள்.. அல்லது read full story.. என்றும் கொடுத்திருப்பார்கள்.. இதனால் குழப்பமடையத் தேவையில்லை. அனைத்தும் ஒன்றேதான். 

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்ததா?


பதிவைப் பற்றிய சந்தேகங்கள் இருந்தால் கேட்கவும்.. மேலும் பதிவு பிடித்திருந்தால் அங்கள் அபிமான திரட்டிகளில் பதிவை இணையுங்கள்.. கண்டிப்பாக பின்னூட்டம் இடுங்கள். நன்றி நண்பர்களே!! அடுத்த பதிவில் சந்திப்போம்..!!

Tags: Blogger Tips, Blogger Tutorial, Read More Button. 

RELATED ARTICLES

1 COMMENT

Comments are closed.

Most Popular

Recent Comments