Friday, November 15, 2024
HomeFree softwareVLC பிளேயரில் உள்ள ரகசிய வசதிகள் | Secret Options in VLC Media Playeer

VLC பிளேயரில் உள்ள ரகசிய வசதிகள் | Secret Options in VLC Media Playeer

கம்ப்யூட்டரில் வீடியோ பார்க்க,  பாடல்கள் கேட்க உதவிடும் ஒரு அற்புதமான “மீடியா பிளேயர்” VLC. இதில் பொதுவான வசதிகளை தவிர, சில ரகிசய வசதிகள் உண்டு.  அவை என்னென்ன? அவற்றால் என்ன பயன்? அதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.

ஒவ்வொன்றையும் அதில் கொடுக்கப்பட்டுள்ள டேபை(tab) கிளிக் செய்து பார்த்தாலே தெரியும்.

உதாரணத்திற்கு vlc media player பெரிதுபடுத்திவிட்டு, டூல்ஸ்(Tools) -கிளிக் செய்து பார்த்தால் அதன் கீழ் வரும் மெனுவில் Adjustments and Effects என்ற ஒரு ஆப்சன் இருக்கும். அதை கிளிச் செய்தால் audio effect, video effect, synchronization என்று இருக்கும்.

VLC player audio-video effect

“>VLC mediaplayer

இதில் முக்கியமாக நாம் கவனிக்கப்போவது வீடியோ எஃபக்ட்..

அதில் பேஸிக். கிராப், ஜியோமெட்ரி, கலர் ஃபன், இமேஜ் மாடிபிகேஷன்.. இப்படி இருக்கும். இதிலுள்ள ஒவ்வொரு ஆப்சனுக்குத் தகுந்த மாதிரி நம்முடைய வீடியோவை நாம் மாற்றிப் பார்க்கலாம்.

மாற்றியதை சேமித்தும் வைக்கலாம். இதில் எடிட்டிங்கும்(Video editing) செய்யலாம்..

இதில் கிராப் என்பதை உபயோகித்து நமது வீடியோபடத்தை தேவையான அளவு வெட்டலாம். அதேபோல ஜியோமெட்ரி தேவையான கோணத்திற்கு மாற்றிப் பார்ப்பதற்கும்,  கலர்ஃபன் (colorfun) என்பது வீடியோவை பல நிறங்களில் மாற்றி பார்ப்பதற்கும் பயன்படுகிறது.

இவ்வாறு இதில் உள்ள ஒவ்வொரு ஆப்சனுக்கும் சென்று நீங்கள் விரும்பிய படி வீடியோவை மாற்றி அமைத்துப் பார்க்கலாம்..

இதில் snap shot -ம் எடுக்கலாம். online radio கேட்கலாம்.., Video -வை ஒரு பார்மட்டிலிருந்து மற்றொரு பார்மட்டிற்கு மாற்றலாம்.. streaming செய்யலாம்.. இன்னும் எத்தனையோ வித்தைகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது இந்த வி.எல்.சி மீடியா பிளேயர்.

பதிவின் நீளம் கருதி இத்தோட முடித்துக்கொள்கிறேன்.

இத்தகைய சிறப்புமிக்க VLC media player தரவிறக்க download VLC media player – கிளிக் செய்து தரவிறக்கிக்கொள்ளுங்கள்..

மேலும் இதுபோன்ற இலவச மென்பொருள்களின்(Free softwares) சீரியல் எண்களை இலவசமாக பெற இந்தப் பதிவை பார்க்கவும்.
சந்தேகம் இருப்பின் கேட்கவும்.. முடிந்த அளவு நிவர்த்தி செய்கிறேன்..

தொடர்புடைய பதிவு:

VLC media player -ல் உள்ளிருக்கும் ரகசியங்கள்…!!

நன்றி நண்பர்களே.. மற்றுமொரு பயனுள்ள பதிவில் சந்திப்போம்..!!

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments