Saturday, September 21, 2024
HomeFree softwareஉங்கள் கணினித் திரையை சுலபமாக வீடியோவாக மாற்ற video making softwares

உங்கள் கணினித் திரையை சுலபமாக வீடியோவாக மாற்ற video making softwares

கேமரா இல்லாமலேயே உங்கள் கணினித் திரையில் நடப்பதை வீடியோவாக்கலாம்!

நண்பர்களே..! நாம் இணையத்தில் நிறைய வீடியோ டுடோரியல்களைப் பார்த்திருக்கலாம்.. அப்படிப்பட்ட வீடியோ டுடோரியல்களை எப்படி எடுக்கிறார்கள் என்று தெரியுமா?

கணினித்திரையின் முன்னால் வீடியோ கேமாரவை வைத்து வீடியோ எடுக்கிறார்கள் என்றால் அதுதான் இல்லை..

இதற்காகவே மென்பொருட்கள் இருக்கிறது. அவற்றில் முக்கியமானதும், பயன்படுத்த எளிதாக இருப்பவை மட்டும் இங்கு தருகிறேன். இதனைப் பயன்படுத்தி கேமரா இல்லாமலேயே நமது கணினித்திரையில் நடப்பவைகளை அப்படியே வீடியவாக மாற்றலாம்.

இணையத்தில் இணைந்திருக்கும்போது கூட படம் பிடிக்கலாம்.. அவற்றிற்கு உதவுபவை இந்த தளங்கள்..

http://screencastle.com/ – ஸ்கிரீன்கேசில்
http://www.screentoaster.com/ – ஸ்கீரீன்டோஸ்டர்
http://goview.com/- கோவியூ

கணினித் திரையை படம்பிடிக்க உபயோகப்படும் மென்பொருட்கள் இவை.. ஒவ்வொன்றாக பார்ப்போம்..

விண்டோஸ் மீடியா என்கோடர் (Windows Media Encoder)

இந்த மென்பொருள் அதிகம் திறன்வாய்ந்தது.. துல்லியமான படத்துடன், நல்ல ஒலியையும் கொடுக்கும்.. இந்த மென்பொருளை தரவிறக்க இங்கு செல்லுங்கள்..

இணைப்பு(link): http://www.microsoft.com/windows/windowsmedia/forpros/encoder/default.mspx

II. Webinaria (வெப்இன்ஏரியா)

இதுவும் பயன்படுத்த எளிதான ஒரு ஸ்கீரீன் வீடியோ மேக்கிங் மென்பொருள்.. இதற்குரிய சுட்டி..
இணைப்பு(link): http://www.webinaria.com/

III. JING

இதில் உங்கள் விருப்பத்திற்கேற்ப சில ஆப்சன்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.தேவை என்றால் அதையும் சேர்த்துக்கொள்ளலாம்..
இணைப்பு(link): http://www.jingproject.com/

IV. Cam Studio (கேம் ஸ்டூடியோ)

இந்த மென்பொருள் பலராலும் பயன்படுத்தப்படுகிறது.. நல்ல வீடியோ குவாலிட்டி மற்றும் உபயோகபடுத்துவதில் எளிமை. இது ஓபன் சோர்ஸ் வகை மென்பொருள் ஆகும்..இதில் ஒரு சில பார்மட்களில் மாற்றியும் நமது வீடியோ கோப்பைகளை பதிவு செய்து சேமித்துக்கொள்ளலாம்.

இணைப்பு(link): http://camstudio.org/

V. Utipu Tipcam
இந்த மென்பொருளும் அவ்வகைச் சார்ந்ததே.. தரவிறக்கம் செய்து கொள்ள கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
இணைப்பு(link): http://www.utipu.com/

மற்ற சில மென்பொருள்களையும் இங்கு சென்று பார்த்து , பிடித்ததிருந்தால் உபயோகப்படுத்திக்கொள்ளல்லாம்.. பதிவின் நீளம் கருத்தியே இதனை விளக்கவில்லை..

இணைப்பு(link): 1. http://krut.sourceforge.net/
2. http://www.advancity.net/eng/products/capturefox.html (ஃபையர்பாக்ஸ் )
3. http://www.bbsoftware.co.uk/BBFlashBack_FreePlayer.aspx
4. http://www.uvnc.com/screenrecorder/

பயன்பாடு மிக்க இந்த மென்பொருள்களை இணைப்புகளை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்..

மேலும் இந்த மென்பொருளைக் கொண்டு வீடியோவாக மாற்றுவதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தெரிவிக்கவும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments