Ram பயன்பாடு
ஒவ்வொரு முறையும் கம்ப்யூட்டர் தொடங்குகையில் Hard Disk சென்று தகவலைப்பெற நேரம் அதிகம் எடுத்துக்கொள்ளும். இதைத் தவிர்க்கவும், விரைவாக கணினியில் தகவலைப் பெற்றுத் தர இந்த RAM பயன்படுகிறது.
கம்ப்யூட்டர் செயல்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது RAM ஆனது Hard disc லிருந்து குறிப்பிட்ட அளவு தகவல்களை பெற்று தன்னுள் இருத்தி விரைவாக தகவல்களை அளிக்கிறது. மிக விரைவாக தகவல்களைப் பெற்றி உதவுவதால் சில கம்ப்யூட்டர்களில் இரண்டு RAM கள் இணைந்திருப்பர்.
இதனால் கம்ப்யூட்டர் செயல்படும் வேகம் அதிகரிக்கும். நமக்குத் தேவையான தகவல்களும் உடனுக்குடன் கிடைக்கும்.
சில நேரங்களில் கம்ப்யூட்டர் வேகம் குறைந்ததென்றால்
ஹார்ட் டிஸ்க் Space ஐ RAM போல மாற்றி கம்ப்யூட்டர் வேகத்தை அதிகப்படுத்த முடியும்.
செய்முறை:-
1. முதலில் XP யின் My computer செல்லவும்.
2. properties கிளிக் செய்திடவும். அதில்
3. system properties தேர்வு செய்யுங்கள்.
நீங்கள் விண்டோஸ் விஸ்டா (Windows vista) உபயோகிப்பாளராக இருந்தால் Control panel==>Properties==> Performance Option ==>Advance system setting==> Setting ==> setting==>Advanced தேர்வு செய்யவேண்டும்.
பிறகு
Virtual memory ==> Automatically manage paging file size for all drives தேர்வு செய்யுங்கள். அங்குள்ள Check box கண்டிப்பாக டிக் செய்யுங்கள்.
பிறகு, எந்த டிரைவில் உங்களுக்கு அதிக ஸ்பேஸ்(sapce) இருக்கிறதோ அந்த டிரைவை தேர்வு செய்யவும். உதாரணமாக நம் கணினியில் C drive, D drive, E drive என்ற நேமிங் இருக்கும். அதில் உங்களுக்கு அதிக காலியிடம் உள்ள டிரைவ்-ஐ தேர்வு செய்யவும். எடுத்துக்காட்டாக C, அல்லது D அல்லது E தேர்வு செய்யவும்.
நீங்கள் C drive தேர்வு செய்திருந்தால் System managed Size தேர்வு செய்யுங்கள் recommended size , currently allocated size போன்றவற்றை காட்டும் . .
அங்கு custom managed size என்பதை செலக்ட் செய்து Initial Size மற்றும் Maximum Size ஆகியவைகளை MB அளவுகளில் கொடுத்துவிட்டு “Set” என்பதை கிளிக் செய்யவும். முடிந்தது.
இதன் மூலம் உங்களது கம்ப்யூட்டரின் virtual memory அதிகரித்து கம்ப்யூட்டர் வேகம் அதிகரித்திருக்கும்.
there is no option in vista as you said please revise once again.
where can i find properties on control panel?
please explain as easy way!
எளிதான வழிதான். உங்கள் கம்ப்யூட்டர் டெஸ்ட்டாப்பில் இருக்கும் mycomputer – ஐகான் மீது ரைட் கிளிக் செய்யுங்கள். அதன் கீழ் விரியும் மெனுவில் கீழே பார்த்தீர்களானால் properties என்றிருக்கும் அதை தேர்வு செய்யுங்கள்..!!
நீங்கள் விண்டோஸ் விஸ்டா உபயோகிப்பாளராக இருந்தால் கண்ட்ரோல் பேனலை கிளிக் செய்து அதனூடே Properties – ஐக் காணலாம்.
very useful
எத்தனை எம் பி போட வேண்டும்
is it possible for windows xp?