தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் செல்போன் Battery ல் மெர்குரி(Mercury), ஜின்க்(zink), மக்னீசியம், போன்ற வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளன . இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
அதை தவிர்க்கும்பொருட்டு புதிய Paper Battery -களை கண்டுபிடித்து அதை சந்தைப்படுத்தும் முயற்சிகளிலும் இறங்கியுள்ளனர். முழுமுழுக்க பேப்பரைப் பயன்படுத்தியே இந்த வகை பேட்டரிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக இதை தயாரித்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதனை ஸ்வீடனில் உள்ள உப்சலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி திரு.மரியா ஸ்ட்ரோம் தான் கண்டுபிடித்து உள்ளார்..இந்த பேட்டரி சுற்றுச்சூழலுக்கு 100 சதவிகிதம் பாதுகாப்பானவை.
இந்த பேட்டரியை மிகச் சுலபமாக உருவாக்கி விடலாம். இது ஒரு கடல் வாழ் உயிரினமான க்ளாடோபோரா என்ற கடல் வாழ் அல்கேவினால் உருவாக்கப்பட்டிருக்கிறது. கடலில் உருவாவதால் இதன் விலையும் மிக மலிவாக இருக்கும்.
இது பாலிமர் (Polimer) பேட்டரி வகையை சார்ந்ததாக இருக்கிறது. தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் பேட்டரிகளை விட 200 மடங்கு அதிக மின்சாரத்தை தேக்கி வைத்து கொள்ளக் கூடிய சக்தி இதற்கு உண்டு.
இப்பொழுது பயன்பாட்டில் இருக்கின்ற லித்தியம் பேட்டரிகளை விட வேகமாக சார்ஜ் ஆகக் கூடிய தன்மை உடையது.
தற்பொழுது தொடக்க நிலையில் இருக்கும் இத்தகைய பேட்டரிகள் விரைவில் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.