Wednesday, January 22, 2025
Homeblogger tipsபிளாக்கரின் Lightbox Image Effect நீக்க ஓர் எளிய வழி!!

பிளாக்கரின் Lightbox Image Effect நீக்க ஓர் எளிய வழி!!

பிளாக்கரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வசதிகளில் பல வசதிகள் பயனுடையதாக இருந்தாலும், சிறிது பின்னடைவை ஏற்படுத்திய புதிய அறிமுகம் ஒன்று தான் பிளாக்கரின் லைட்பாக்ஸ்(light box effect) எபக்ட். இதன்மூலம் நமது வலைப்பூவில் இடம்பெற்றிருக்கும் அனைத்து படங்களையும் ஒரே விண்டோவில் காணமுடியும். இது ஒருபக்கம் பிளஸ் ஆக இருந்தாலும், பெரும்பாலானவர்கள் இதை விரும்பாததற்கு முக்கிய  காரணம்  அனைத்துப் பதிவுகளின் படங்களையும் ஒரே இடத்தில் பார்க்கும் வசதியால் – பதிவுகளை வாசகர்கள் படிக்க முடியாமல் வெறும் படங்களை மட்டுமே பார்த்து சென்று விடும் அபாயம் உள்ளது.

இதனால் பலரும் இந்த லைட்பாக்ஸ் வசதியை விரும்பத்தகாத ஒன்றாகவே கருதுகிறார்கள்.  நண்பர் ஒருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த லைட்பாக்ஸ் வசதியை எப்படி செயலிழக்க வைப்பது என்பதைப் பார்ப்போம்.
முதலில்,

Dashboard==>Design==>add page element==>add a gadget ==> கிளிக் செய்துகொள்ளுங்கள். தோன்றும் விண்டோவில் HTML/JavaScript  என்ற கேட்கெட்டைத்  தெரிவு செய்துகொண்டு அங்கு தோன்றும் விண்டோவில் கீழ்காணும் கோடிங்கை சேருங்கள்..

script type=”text/javascript”> //<![CDATA[ var lightboxIsDead = false; function killLightboxundefined) { if undefinedlightboxIsDead) return; lightboxIsDead = true; var images = document.getElementsByTagNameundefined’img’); for undefinedvar i = 0 ; i < images.length ; ++i) { images[i].parentNode.innerHTML = images[i].parentNode.innerHTML; } } if undefineddocument.addEventListener) { document.addEventListenerundefined’DOMContentLoaded’, killLightbox, false); } else { document.attachEventundefined’onDOMContentLoaded’, killLightbox); window.attachEventundefined’onload’, killLightbox); } //]]> </script>

புரியவில்லை என்றால் இந்தப் படங்களை கிளிக் செய்து பெரிதுப்படுத்தி பார்த்துக்கொண்டு அதன்படி செய்யுங்கள்..!!


how to add gadget
html javascript gadget
html javascript window

இனி லைட்பாக்ஸ் எஃபக்ட்-லிருந்து விடுபடுங்கள். உங்கள் பதிவுகளை பெருமளவு வாசகர்கள் படிக்க இது ஒரு வாய்ப்பாக அமையும்.

அவ்வளவுதான்.  உங்கள் பிளாக்கரில் வலைப்பதிவுகளிலுள்ள படங்கள் இனி லைட்பாக்ஸ் எஃபக்ட் – தோன்றாது.. இதற்கு முந்தைய பழைய பிளாக்கரில் படங்கள் எப்படி தோன்றினவோ அப்படியே தோற்றமளிக்கும்..இனி லைட்பாக்ஸ்-ன் தொல்லை இல்லை..!! பயன்படுத்திப் பாருங்கள் நண்பர்களே..! இதில் ஏதேனும் சந்தேகம் தோன்றினால் பின்னூட்டத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பதிவு பிடித்திருந்தால் பின்னூட்டம் அளிக்க மறக்காதீர்கள்.. உங்கள் பின்னூட்டம் எனது முன்னேற்றம்.. !! நன்றி நண்பர்களே..!!

RELATED ARTICLES

Most Popular

Recent Comments