Monday, December 23, 2024
HomeFree softwareபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்

போல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்

மொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. 

நமது பெரும்பாலான  இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hindi ,Bengali,Tamil,Kannada,Gurmukhi, Gujarati,Malayalam,Oriya,Telugu  இப்படி..!

போல்ட் பிரவுசரில் தமிழை எப்படி நிறுவுவது?

Menu ==> Preferences ==> Install Font என்பதை தேர்ந்தெடுக்கவும்
அதில் உங்களுக்குப் பிடித்தமான Tamil Font – ஐ Install செய்யவும்.

முடித்தும், புதிதாக ஒரு தமிழ் வலைப்பக்கத்தை திறந்து பாருங்கள்.. உங்கள் கண்ணெதிரிலேயே உங்கள் தாய்மொழியில் வலைப்பக்கங்கள் வலம்வரும்.. நீங்களும் மகிழ்ச்சியாக உலா வரலாம்.!! இணைய பக்கங்கள்  கணினியில் காட்சி அளிப்பதுபோல் தெரியும். இதை மொபைலுக்குத் தகுந்தாவறு காட்சிப்படுத்த கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.

நீங்கள் மொபைல் பார்மேட்டுக்கு மாற்ற வேண்டுமானால்…

 Menu==>Preference==>Mobile content தேர்வுசெய்ய வேண்டும்.  இப்போது மொபைலுக்கான பார்மேட்டில் வலைப்பக்கங்கள் காட்சி அளிக்கும்.

தமிழில் எழுத வேண்டுமா? அப்படியாயின் கீழ்க்கண்டவாறு செய்யுங்கள்.

நீங்கள் தமிழில் எழுத விரும்பினால் Indic Fonts-பயன்படுத்தி எழுதலாம்.

படத்தில் உள்ளது போல செய்துகொள்ளலாம். படத்தை பெரிதாக காண அதன் மீது சொடுக்கவும்.

எழுத /key board  மாற்றி அமைக்க “#” யை அழுத்தவும்.

 # கீயை அழுத்துவதன் மூலம் நீங்கள் நிறுவியுள்ள பல்வேறு மொழிகளில்  ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

நீங்கள் உங்கள் மொழியைத் தேர்ந்தெடுத்து எழுதலாம்.

குறியீடு “#”  மூன்று முறை அழுத்துவது மூலம் தமிழைத் தேர்ந்தெடுக்கலாம்.

எண் 4  முறை அழுத்துவது மூலம்

எண்  9  ஐ நான்கு முறை அழுத்துவது மூலம்

எண் “2” ஐ இரண்டு முறை அழுத்துவது மூலம்

முக்கிய குறிப்பு: இந்த Bolt Indic Brower அனைத்து Java மொபைலிலும் செயல்படும் விதம் அமைக்கப்பட்டுள்ளது.  .jad Format வகையைச் சார்ந்தது.

தறவிறக்க சுட்டிகள்:

Dual Signed Version: http://boltbrowser.com/in/bolts2.jad

VeriSign Signed Version: http://boltbrowser.com/in/boltvs.jad

Thawte Signed Version: http://boltbrowser.com/in/boltts.jad

Unsigned Version: http://boltbrowser.com/in/bolt.jad

பதிவைப் பற்றிய சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.. உங்கள் பின்னூட்டமே எமது முன்னேற்றம்.. மீண்டும் மற்றுமொரு பயனுள்ள பதிவில் சந்திப்போம்..நன்றி நண்பர்களே..!!

RELATED ARTICLES

Most Popular

Recent Comments