ஜிமெயில் என்றால் என்ன?
ஜிமெயில் என்பது கூகிள் வழங்கும் மின்னஞ்சல் சேவை ஆகும். எப்படி நமக்கு அஞ்சல் வழியில் கடிதங்கள் கிடைக்கிறதோ, அப்படி தான் இதுவும். அங்கு தபால்கார ர் தபால்களைக் கொண்டு வந்து கொடுக்கிறார். இங்கு கணினி வழியாக தகவல்களை நாம் பெற்றுக்கொள்கிறோம். அவ்வளவுதான் வித்தியாசம்.
இன்னும் விளக்கமாக சொல்வதென்றால் அங்கு நமக்கு ஒருவர் கடிதம் எழுதி , நமது முகவரி இட்ட கவரை போஸ்ட் பாக்சில் போட்டு விடுவார். அதை தபால்கார ர் அஞ்சல் அலுவலகம், தபால் பெட்டிகள் மூலம் சேகரித்துக்கொண்டு, உரிய விலாசத்திற்கு பஸ், வேன், சைக்கிள் போன்ற வாகனங்களின் வழியாக பயணித்து, உரிய முகவரிக்கு வந்தடைந்து தபால்களை கொடுப்பார்.
அதைப்போலவே, எங்கோ ஓரிடத்திலிருக்கும் கணினி/ ஸ்மார்ட் போன் மூலம் மின்னஞ்சல் சேவை வழியாக நம்முடைய மின்னஞ்சல் முகவரிக்கு கடித த்தை/ தகவல்களை டைப் செய்து அனுப்புவது மின்னஞ்சல் செயல்பாடாகும். போஸ்ட் மேனுக்கு பதிலாக, நண்பர்கள் உறவினர்கள் கணினியும், போக்குவரத்துக்கு உதவும் வாகனங்களுக்குப் பதிலாக இங்கு இணையம் என்று சொல்லப்படுகிற இன்டர்நெட்டும் செயலாற்றுகிறது.
அதை கொண்டு வந்து கொடுக்கும்/ காண்பிக்கும் போஸ்ட் மேனாக கணினி செயல்படுகிறது. அவ்வளவுதான் நண்பர்கள்.
காகித தாட்களுக்குப் பதிலாக செய்திகள் மின்னணு முறையில் வந்து சேர்வதால் அதற்கு மின்னஞ்சல் (E-Mail) என பெயரிட்டனர். இந்த சேவையினை கூகிள் கம்பெனி/நிறுவனம் வழங்குவதால் அந்த சேவைக்குப் பெயராக கூகிள் நிறுவனத்தின் முதல் எழுத்தான G- என்பதை இணைத்து
Gmail என பெயரிட்டனர்.
அவ்வாறு உருவாக்கப்பட்ட ஒரு மின்னஞ்சல் கணக்கு ஒன்று இருந்தால் போதும். உலகத்தின் எந்த மூலைக்கும் உள்ள நபர்களுக்கு, நிறுவனங்களுக்கு அவர்களின் மின்னஞ்சலுக்கு தகவல்களை ஒரு சில விநாடிகளில் அனுப்பிவிடலாம்.
இன்று ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தால் போதும். அந்தளவிற்கு அது மிக மதிப்பு மிக்கதாக பயன்மிக்கதாக உள்ளது. அந்த சேவையை நிறுத்திவிட்டால், உலகில் பல அலுவலகங்கள் தகவல்களை அனுப்புவதற்கு தடுமாறிவிடும்.
தகவல்களை அனுப்பி, பரிமாறிக் கொள்வதோடு நின்று விடாமல், ஒரு GMAIL ACCOUNT மூலம், கூகிள் வழங்கும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த முடியும்.
கூகிள் போட்டோஸ், கூகிள் ட்ரைவ் கூகிள் மேப், என கூகிள் நிறைய இலவச வசதிகளை தன்னுடைய பயனர்களுக்கு அளித்து வருகிறது.
மேலும் BLOGGER என்ற வலைத்தள பதிவு வசதியை இலவசமாக அளித்து, இன்று உலகில் பலரை எழுத்தாளராக, கதை ஆசிரியராக, கட்டுரையாளராக, போட்டோகிராபராக, வீடியோ கிராபராக, தொழில் முனைவோராக, மருத்துவராக ஆக்கியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
மேலும் கூகிள் வழங்கும் ADSENSE என்ற விளம்பர வழங்கி வசதியின் மூலம் பணம் சம்பாதிக்கவும் முடியும். உங்களுடைய வலைத்தளத்தின் மூலம் கணிசமான அளவு வருவாய் ஈட்டிட முடியும். இது பற்றி விரிவாக வேறு ஒரு பதிவில் தெரிந்துகொள்வோம்.
எல்லாம் சரி. எப்படி ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் உருவாக்குவது?
Gmail Account கிரியேட் செய்யும் வழிமுறை:
ஜிமெயில் உருவாக்குவது மிக சுலபம். கம்ப்யூட்டர் அல்லது மொபைல் இருந்தால் போதும். இன்டர்நெட் கனெக்சன் கட்டாயம் இருக்க வேண்டும். கூகிள் குரோம் அல்லது ஏதாவது ஒரு பிரௌசரை திறந்து கொள்ளுங்கள்.
அட்ரஸ் பாரில் www.gmail.com என டைப் செய்யவும். அங்கு கேட்க்கபடும் விபரங்களை உள்ளிட்டால், அடுத்த பக்கத்திற்கு செல்லும். தொடர்ந்து வரும் பக்கங்களில் உரிய தகவல்களை உள்ளிட்டு, இறுதியாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை எளிதாக உருவாக்கிவிடலாம்.
செய்முறை: .
இப்படித்தான் ஒரு ஜிமெயில் ஐடி உருவாக்க வேண்டும். இந்த ஜிமெயில் ஐடி ஒன்றை வைத்து கூகிள் தளத்தில் சைன் இன் செய்து கொண்டு, அதில் இருக்கும் பல வசதிகளைப் பயன்படுத்தலாம். இதில் காட்டப்படும் ஆப்ஸ்களை பற்றி எழுத நிறைய இருக்கிறது. அது பற்றி வேறு ஒரு பதிவில் பார்க்கலாம்.
இந்த பதிவு பொறுத்தவரை,
GMAIL ACCOUNT உருவாக்குவது எப்படி என்பதை கற்றுக்கொண்டோம். பயனுள்ளதாக்க இருந்தால், சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து, மேலும் பலர் தெரிந்துகொள்ள உதவுங்கள்.