Sunday, December 22, 2024
Homecomputer tipsகம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் !!

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் !!

நாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும்.

அல்லது ஒரு குறிப்பிட நேர ஓய்விற்கு பிறகு மீண்டும் தொடர வேண்டும் என்றால் கணினியை shutdown செய்யாமல் அப்படியே விட்டுவிடுவோம்.

அது போன்ற சந்தர்ப்பங்களில் கம்ப்யூட்டர் இயங்கி கொண்டே இருக்கும். அப்பொழுது வீணாகும் மின் சக்தியை சேமிக்க இப்பதிவு. அப்படி சேமிப்பதன் மூலம் மின்சார செலவும் குறையும்.

கம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை

நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 / 8 என்றால் sleepmode அல்லது standby எனும் நிலையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மின்சக்தியை குறைக்கலாம்.

ஆனால் இதில் குறைந்த அளவு மின்சக்தியை மட்டுமே சேமிக்க முடியும். இதைவிட அதிகமாக மின்சக்தியை சேமிக்க ஒரு வழி இருக்கிறது.. அது கணினியை ‘hibernation‘ நிலைக்கு கொண்டு வருவது. இந்நிலையில் கம்ப்யூட்டர் அதிகளவு மின்சக்தி சேமிக்கப்படுகிறது.

sleep mode-ல் மின்சக்தி குறைக்கப்பட்டாலும் கணினி இயக்கநிலையில் இருப்பதால் விண்டோஸ் சிஸ்டம் இயங்கிக்கொண்டேதான் இருக்கும். Programs அனைத்தும் RAM மெமரியில் இருக்கும்.

இதனால் நாம் திறந்து வைத்து பணியாற்றிக்கொண்டிருந்த கோப்புகளும் உயிர்த்துடிப்புடன் இருக்க மின்சக்தி தேவைப்பட்டுக்கொண்டிருக்கும்.

ஆனால் ஒரு personal computer- “hibernation” நிலையில் வைக்கப்படும்போது சிஸ்டமானது ராம் மெமரியில் உள்ள அனைத்தையும் ஒரு கோப்பில் காப்பி செய்து ஹார்ட் ட்ரைவில் வைக்கிறது.

பிறகு நமது கணினியை முழுவதும் ஷட்டவுன் செய்துவிடும். இதனால் கூடுதலாக மின்சக்தி சேமித்து வைக்கப்படுகிறது.

hibernation நிலைக்குக்கு கம்ப்யூட்டரை கொண்டுவருவது எப்படி?

விண்டோஸ் 7, விண்டோஸ் விஸ்டா(windows vista) பயன்படுத்துபவராக இருந்தால் Start பட்டனை கிளிக் செய்து அதில் power என டைப் செய்தாலே அங்கு பவர் ஆப்சன்(power option) என்று காட்டும். அந்த power option- ஐ தேர்ந்தெடுக்கவும்.

அதில் இடதுபுறம் தோன்றும் option-ல் ‘Choose when to turn off the display’ என்பதை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் Sleep Option இருப்பதைப் பார்க்கலாம். ஹைபர்னேசன் பற்றி எதுவும் இருக்காது.

 இதைப்பெற Change advanced power settings -ஐ கிளிக் செய்யவும். இதில் sleep option தேர்ந்தெடுத்தால் அங்கு sleep after மற்றும் Hibernate after ஆகிய பிரிவுகள் இருக்கும்.

நீங்கள் விண்டோஸ் xp சிஸ்டம் பயன்படுத்துபவராக இருந்தால் 

டெஸ்ட்டாப்பில் ரைட் கிளிக் செய்து அங்கு தோன்றும் மெனுவில் properties செலக்ட் செய்யவும். கிடைக்கும் விண்டோவில் Screen Saver என்பதை கிளிக் செய்து power என்பதை தேர்ந்தெடுக்கவும்.

 அடுத்து hibernate tab-ல் கிளிக் செய்து Enable Hibernation என்றிருக்கும் இடத்தில் டிக் மார்க்கை ஏற்படுத்தவும்.

அதற்கடுத்து அப்ளை(Apply) என்பதில் சொடுக்கினால், அங்கு Power Schemes தேர்ந்தெடுக்கும்போது அங்கு நமக்குத் தேவையான standby மற்றும் hibernate ஆகிய ஆப்சன்களைப் பெறலாம்.

இதில் உங்கள் விருப்பப்படி setting-ஐ மாற்றம் ஏற்படுத்தி உங்கள் மின்சக்தியை வெகுவாக குறைக்கலாம்.

செய்து பாருங்கள் நண்பர்களே..! இனி வீணாகும் மின்சக்தியை இந்த முறையின் மூலம் குறைக்க முயற்சி செய்யுங்கள்.. !! உங்கள் மின்கட்டணம் குறைவதோடு உங்கள் கணினிக்கும் அதிக தீங்கு ஏற்படாது.

என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா? அப்படியெனில் கண்டிப்பாக பின்னூட்டமிடுங்கள்.. சமூக வலைத்தளங்களில் பகிர மறக்காதீர்கள் !

Tags: Compute Tips, Hibernation, PC Power Saving Method.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments