Sunday, January 26, 2025
HomeFree softwareautorun.inf கோப்பை நீக்க, கணினியின் வேகத்தை அதிகரிக்க இலவச மென்பொருள்

autorun.inf கோப்பை நீக்க, கணினியின் வேகத்தை அதிகரிக்க இலவச மென்பொருள்

முதலில் autorun.inf கோப்பு என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம் நண்பர்களே..!. இந்த வகை கோப்புகள் நாம் பயன்படுத்தும் pendrive, CD, மற்றும் DVD போன்றவைகள் தானாகவே இயங்க எழுதப்பட்டுள்ள கோப்புகள் ஆகும்.
உதாரணத்துக்கு நாம் பென் டிரைவை கணினியில் செருகியவுடனேயே ஆட்டோ ரன் ஆகிறது அல்லவா? அதற்கான கோப்புதான் இவை. இது ஆட்டோமேட்டிக்காகவே APPLICATION அல்லது exe  கோப்புகளை இயக்கிவிடும் வல்லமைப் பெற்ற  ஒரு கோப்பு ஆகும்.

இதன் நிரல் வரிகள் இப்படி இருக்கும்.

[autorun]
open=autorun.exe
icon=autorun.ico

இது ஒரு வைரஸ் கோப்பும் அல்ல. ஆனால் வைரஸ்கள் இந்த கோப்புகளின் வழியேதான் மற்ற டிரைவர்களுக்கும் விரைவில் பரவுகின்றன. பிறகு வைரஸ் நமது கணினியில் பலமடங்கு பெருகி கணினியின் வேகத்தை தன் கட்டுப்பாட்டில் வைக்கும்.. இதனால் கணினி மிகவும் மந்தமாக செயல்படும். அல்லது சில வேளைகளில் முடங்கிவிடும்.

இந்த பிரச்னையை தீர்க்க ஒரு எளிய இலவசமான மென்பொருள் உள்ளது.

இதன் சிறப்புகள்:
அ. Autorun.inf கோப்புகள் அனைத்தையும் நீக்குகிறது.
ஆ. விண்டோஸின் Attributes திரும்பவும் மீட்டெடுக்கிறது.
இ. Registry Disabled
ஈ. ஆட்டோ பிளே (Autoplay)ஆவதை தடுக்கிறது.
உ. பென்டிரைவில் உள்ள அனைத்து வைரஸ்களையும் நீக்குகிறது.
5. write protect (பென்டிரைவில் எந்த ஒரு வைரஸ் கோப்புகளையும் எழுதாமல் தடுக்க உதவுகிறது.
Enable Folders options
Task manager Disabled,
Enable command prompt
Enable run

இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இந்த மென்பொருளை தரவிறக்கு உங்களின் கணினியின் வேகத்தை அதிகரியுங்கள்..!!

மென்பொருளுக்கான தரவிறக்கச் சுட்டி :http://www.technize.com/?dl_id=6

RELATED ARTICLES

2 COMMENTS

  1. நன்றி நண்பரே. இப்போது சரியான url ஐ கொடுத்திருக்கிறேன். தவறுக்கு வருந்துகிறோம்.!! இணைப்புச் சுட்டி இப்போது சரியாக வேலை செய்கிறது.

Comments are closed.

Most Popular

Recent Comments