Tuesday, December 24, 2024
HomeFree softwareமுகம் பார்த்து பேச ஒரு அழகிய இலவச மென்பொருள்..(Video chating software)

முகம் பார்த்து பேச ஒரு அழகிய இலவச மென்பொருள்..(Video chating software)

உலகில் புத்தம் புதிய டிஜிட்டல் சமாச்சாரங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இதில் வீடியோ சாட்டிங் என்பது இப்போது பிரபலம் ஆகிக்கொண்டிருக்கிறது.. கணினியிலிருந்து மொபைல் வரைக்கும் நேரடியாகவே பார்த்துபேசுவது போன்ற பிரமையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது..

இதில் தொட்டுப் பார்ப்பது மட்டும் தான் முடியாது.  ஆனால் மற்ற முகபாவங்களை நாம் கவனித்து உரையாடலாம்.. அத்தகைய வாய்ப்பை இந்த சாப்ட்வேர் ஏற்படுத்தி தருகிறது..

இந்த இலவச மென்பொருளின் பெயர்  ஓ..வூ… !

ஆங்கிலத்தில் OOVOO..! பெயரே வித்தியாசமாக இருக்கிறது. இதன் பயன்பாடும் அப்படித்தான்..!!

இந்த இணைப்பில் சென்று இந்த மென்பொருளைத் தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

http://www.oovoo.com

மென்பொருள் நிறுவுவதற்கான மாதிரிப் படங்கள்..

Oovoo video software
install Oovoo video software

oovoo-video-software short cut

எந்த மூலையில் உங்களுக்கு பிடித்தவர்கள் இருந்தால் உலகெங்கும் உள்ள உங்கள் நண்பர்களை இந்த மென்பொருளைப் பயன்படுத்தி வீடியோ சாட்டிங் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவியதும் இதில் முந்தைய பயனபாட்டாளர்களுடன் தொடர்பை ஏற்படுததிக்கொள்ளலாம்.. நமக்கு வேண்டியவர்களுக்கு நம்முடைய அக்கவுண்ட் லிங்கை இமெயில் மூலம் அனுப்பி அவர்களையும் இதில் பங்குபெற செய்யலாம். இதில் அவர்கள் கணக்குத் தொடங்க வேண்டிய அவசியமில்லை.

இதன் சைட்பாரில் sidebar view கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ சாட்டிங் செய்தவாறே இணையப்பக்கங்கள் பார்வையிடலாம்.

நம்மை அழைப்பவர்களுக்கு கணினியில் பதில் அளிக்கும் வசதியும், அவர் இணைப்பில் இல்லாதபோது  அனுப்பும் செய்தியும், அவர் இணைந்தவுடன் அவருக்கு காட்டப்படும்.

மென்பொருளை தரவிறக்கி பயன்படுத்திப் பாருங்கள்..

Windows க்கான வீடியோ சாட்டிங் மென்பொருள் Version 3.0.7.21 for Windows
மேலும் App Store, Android Market அனைத்திற்கும் தனித் தனியாக கிடைக்கிறது..

நிச்சயம் இம் மென்பொருள்  உங்களுக்கு பிடித்திருக்கும். மென்பொருள் பயன்படுத்துவதில் சிரமம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments