கடந்து போன வாரத்தில் தான் இந்த டேப்ளட் பிசியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். விலை.. ஜூஜூபி.. ரொம்ப ரொம்ப கம்மி விலைங்க.. இந்தியாவிலே.. ஏன்.. உலகத்துலேயே இதுதான் குறைந்த விலை டேப்ளட் பிசி யாக இருக்கும். பெயர் ஆகாஷ்..!!
விலை? ரொம்ப ரொம்ப குறைவான விலை.. வெறும் 2,276 ரூபாய்தான்..!
இன்னொரு மகிழ்ச்சியான விஷயம்! மத்திய அரசின் (Central Government) திட்டங்களில் இந்த டேப்ளட் பிசியை மாணவர்களுக்கு இலவசமாக கொடுக்கப்போவதும் ஒன்று என அறிவித்திருக்கிறார்கள்.
இந்த விலையிலேயே எல்லா வரிகளும் அடக்கம். அதனால டபுள் சந்தோஷம். அதைவிட இன்னொரு சந்தோஷமான செய்தி கல்விநிலையங்களுக்கு மிகக் குறைந்த விலையில் இதை விநோயகம் செய்யவிருப்பதுதான். விலை என்னன்னு தெரியுமா? வெறும் 1100 ரூபாய்க்கு கொடுக்கிறார்களாம்.
இதிலுள்ள ஒவ்வொரு நுட்ப திறன்களை கொஞ்சம் பார்க்கலாம்.
1. கிராபிஃக்ஸ் அக்சிலேட்டர்
2. எச்.டி. வீடியோ ப்ராச்சர் & 366 Mhz prosser
3. 800×450 ரெசல்யூசன் கூடிய 7 அங்குல திரை ரெசிஸ்டிவ் தொடு திரை
4. ஆண்ட்ராய்ட் 2.2 (ப்ரையோ) ஆப்பரேட்டிங் சிஸ்டம்
5. 256 எம்பி ராம் நினைவகம்
6. 2ஜிபி பிளாஷ் மெமரி, ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் வை-பி இணைப்பு
7. மைக், ஸ்டீரியோ ஹெட்செட் இணைப்புக்கான 3.5 மிமீ ஆடியோ ஜாக்
8. இரண்டு யு.எஸ்.பி. போர்ட், DOC, DOCX, PPT, PPTX, XLS, XLSX, ODT, ODP ஆகிய பார்மட் டாகுமெண்ட்களுக்கான சப்போர்ட்
9. பி.டி.எப். ரீடர்
10. டெக்ஸ் எடிட்டர்
11. மல்ட்டிமீடியா மற்றும் இமேஜ் இயக்கம்
12. PNG, JPG, BMP மற்றும் GIF ஆகிய இமேஜ் பார்மட்டுக்களுக்கான சப்போர்ட்
செய்யும் திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
ஆடியோ சர்போர்ட்:
1. MP3
2. AAC
3. AC3
4.WAV
5. WMA
ஆகிய பார்மட்டுக்களை சப்போர் செய்கிறது.
வீடியோ சப்போர்ட்:
1. MPEG2
2. MPEG4
3. AVI
4. FLV
ஆகிய பார்மட்டுகளை(Format) சப்போர்ட் செய்கிறது. எடை 350 கிராம். கூடுதலாக 32 ஜிபி வரை இதன் மெமரியை அதிகப்படுத்த யு.எஸ்.பி. போர்ட் தரப்பட்டுள்ளது.
மிகவும் பயன்னுள்ள தகவல்!…
தொடர்ந்து எழுதுங்கள்…..
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com