Saturday, January 25, 2025
Homeblogger tricksபிளாக்கரில் Indli தளத்தின் ஃபாலோவர் விட்ஜெட்(Followers widget) இணைக்க..!!

பிளாக்கரில் Indli தளத்தின் ஃபாலோவர் விட்ஜெட்(Followers widget) இணைக்க..!!

Update: இன்ட்லி இணையதளம் தற்பொழுது செயல்படுவதில்லை. 🙁

நாம் அறிந்த பிரபல திரட்டிகளில் முதன்மையான ஒன்று இந்த இன்ட்லி தளம். இன்று புதியதாய் ஒரு மாற்றத்தைக் கண்டேன் இன்ட்லியில். இன்ட்லி தரும் மகத்தான சேவையில் இதுவும் ஒன்று என்று கருதலாம்.  இன்ட்லி தனது தளத்தில் பல புதிய மேம்படுத்தல்களையும், யுக்திகளையும் இப்போது கையாண்டு வருகிறது. அந்த வகையில் இந்தப் பதிவில் நாம் காணப்போகும் இந்த ஃபாலோவர் விட்ஜெட்டும் ஒன்று.




Indli Follower Widget -ஐ நம் பிளாக்கில் எப்படி இணைப்பது.?

கீழுள்ள படங்களைப் பார்த்தாலே எளிதில் புரிந்துவிடும்.

 ஒரே ஒரு கன்டிஷன்.  நீங்கள் இன்ட்லியில் ஒரு உறுப்பினராக(பயனராக) இருக்க வேண்டும்.

பயனர் கணக்கு இல்லாதவர்கள் இங்கு சென்று கணக்கை உருவாக்கிக்கொள்ளவும்.

முதலில் இன்ட்லி தளத்தில் உங்களுடைய கணக்கில் நுழைந்துகொண்டு வலது பக்கம் தொடர்பவர்கள் பெட்டி என்ற தலைப்பின் கீழ் இந்த ஃபாலோவர் விட்ஜெட் இருக்கும்.

1. உங்கள் பயனர் பெயரை குறிப்பிடுங்கள்.
2. விட்ஜெட்டிற்கான அகலத்தை குறிப்பிடுங்கள்.
3. விட்ஜெட்டில் எத்தனை படங்கள் வேண்டும் என்பதை குறிப்பிடுங்கள்.
4. தலைப்பு வேண்டும் என்றால் டிக் இருக்க வேண்டும். தேவையில்லை என்றால் டிக்கை எடுத்துவிடவும்.
இதை செய்து முடித்தவுடன் கீழே நிரல் வரிகள் தோன்றும். இந்த நிரல் வரிகளை காப்பி செய்து வழமைபோலவே நம்முடைய Design==>Page Element==>Add gaget==>Html/Java Script==>  தேர்ந்தெடுங்கள். தோன்று விண்டோவில்  இந்த கோடிங்கை பேஸ்ட் செய்து Save செய்து கொள்ளலாம்.
சேமித்தவுடன் புதிதாக ஒரு விண்டோவில் உங்கள் தளத்தை திறந்து பார்த்து இன்ட்லி விட்ஜெட் இணைந்திருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

2. நிரல் வரிக்கு கீழே இருக்கும் Add to Blogger என்பதை சுட்டுவதன் மூலமும் நேரடியாகவும் நம்முடைய பிளாக்கில் இந்த விட்ஜெட்டை சேர்க்க முடியும்.

எமது தளத்தில் வலது பக்கத்தில் இருப்பதைப் போன்று உங்கள் தளத்திலும் இன்ட்லியின் ஃபாலோவர் விட்ஜெட் இணைந்திருக்கும்.

 இவ்வாறு விட்ஜெட்டை நமது தளத்திலேயே இணைப்பதால் இன்ட்லி தளம் செல்லாமலேயே, நம்முடைய தளத்திற்கு வரும் வாசகர்கள் நம்முடைய
ஃபாலோவராக இனைந்துகொள்ள முடியும். இதனால் நமக்கு பாலோவர்கள் அதிகமாகவதுடன் நம்முடைய பதிவுகளும் இன்லியின் முகப்பு பக்கத்திலும்-பரிந்துரை பகுதியிலும் தோன்றக் கூடிய வாய்ப்புகள் உருவாகும்.  இதனால் நம்முடைய தளத்திற்கு டிராபிக்கும் அதிகரிக்கும்.

என்ன நண்பர்களே இந்தப் பதிவு பயனுடையதாக இருந்ததா? பிடித்திருந்தால் நிச்சயம் பின்னூட்டம் இடுங்கள். உங்கள் பின்னூட்டம் எம்முடைய முன்னேற்றம். நன்றி நண்பர்களே.. ! வேறொரு நல்ல அருமையான பதிவுடன் சந்திப்போம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.!!

RELATED ARTICLES

2 COMMENTS

Comments are closed.

Most Popular

Recent Comments