Sunday, January 26, 2025
Homeblogger tipsஉங்கள் பிளாக்கரை விரைவாக திறக்க - CSS drive!!

உங்கள் பிளாக்கரை விரைவாக திறக்க – CSS drive!!


 பிளாக் திறக்கும் வேகத்தை அதிகப்படுத்த..
 பிளாக்கின் load ஆகும் நேரத்தை குறைக்க பயனுள்ள தளம்..!!

நம்முடைய பிளாக் சில வேளைகளில் லோட் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதிகளவு பதிவுகள், அதிக படங்கள், மற்றும் அதிகளவு கோடிங்கள்(codings), ஸ்கிரிப்ட்s (Scripts) போன்ற காரணங்களால் நம்முடைய பிளாக் லோட் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். மேலும் தேவையில்லாத விட்ஜெட்களை சேர்ப்பதன் மூலமும் லோட் ஆகும் நேரம் அதிகரிக்கும்.

நம்முடைய தளத்தில் பல பயனுள்ள தகவல்கள் இருந்தாலும், இந்த லோடிங் பிரச்னையால் வரும் வாசகர்கள் லோட் ஆகி முடிப்பதற்குள் வெறுத்து, தளம் திறப்பதற்கு முன்பே வாசகர்கள் திரும்பிவிடவும் வாய்ப்புள்ளது. இதனால் நாம் பல வாசகர்களை இழக்க நேரிடும்.

இந்த slow லோடிங்கை(slow loading) எப்படி சரி செய்யவது? அதற்கு உதவுகிறது இந்த தளம்.
தளத்தின் பெயர் சி.எஸ்.டிரைவ். காம்.

தளத்திற்கான இணைப்பு: http://www.cssdrive.com/index.php/main/csscompressor/

1. இணைப்பை சொடுக்கி தளத்திற்குள் செல்லுங்கள்.
2. கீழ்கண்டவாறு செட்டிங் செய்திடுங்கள்.

3. Don’t strip any comment என்பதையும் தெரிவு செய்துகொள்ளுங்கள்(கமெண்ட்தேவைப்படின்)

பிளாக்கரில் நாம் செய்ய வேண்டியது:

  1. முதலில் download full Template என்பதை கிளிக் செய்து உங்கள் பிளாக்கரின் டெம்ப்ளேட்டை தரவிறக்கிக் கொள்ளுங்கள் பேக்அப் வைத்துக்கொள்ளுங்கள். அது திரும்பவும் நம்முடைய பிளாக்கை மீட்க உதவும்.
  2. அடுத்து,  வழமைபோல Dashboard==>Edit Html==>Expand widget template என்பதை கிளிக் செய்துகொள்ளுங்கள்.
  3. பின்பு டெம்ப்ளேட் கோடிங்கை ரைட் கிளிக் செய்து செலக்ட் ஆல் கொடுத்து கோடிங்கை காப்பி செய்துகொள்ளவும். 
  1. காப்பி செய்த கோடிங்கை நான் முன்பே குறிப்பிட்ட தளத்திற்குச் சென்று படத்தில் உள்ளவாறு செட்டிங் செய்து அங்கு நாம் காப்பி செய்த கோடிங்கை உள்ளிடுங்கள்.
  1. கோடிங் உள்ளிட்ட பெட்டியின் கீழே compress it என்ற பொத்தானைச் சொடுக்குங்கள்.
  1. உங்கள் பிளாக்கரின் கோடிங் சுருக்கப்பட்டு கீழே பெட்டியில் கிடைக்கும். கிடைக்கும் கோடிங்கை select all ==>copy செய்துகொண்டு மீண்டும் பிளாக்கரின் டெம்ப்ளேட் பகுதியில் உள்ள கோடிங்கை replace செய்யவும்.
  2. replace செய்ய டெம்ப்ளேட் கோடிங் உள்ள விண்டோவில் select all  கொடுத்து paste செய்யவும்.
  3.  paste செய்து முடித்தவுடன் கீழே SAVE TEMPLATE என்பதை சொடுக்குங்கள். 

அவ்வளவுதான். சுருக்கப்பட்ட கோடிங் இப்பொழுது உங்கள் டெம்ப்ளேட்டில் இருக்கும்.

புதிதாக ஒரு விண்டோவில் உங்கள் தளத்தை திறந்து பாருங்கள். தளம் திறக்கும் வேகம் அதிகரித்துள்ளதா? நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

முக்கியக் குறிப்புகள்: 

1. நாம் மற்ற தளத்தில் இருந்து பல்வேறு விட்ஜெட்களை நமது தளத்தில் சேர்ந்திருப்போம். அத்தகைய விட்ஜெட்களை நாமாகவே நீக்கிவிடவேண்டும்.


2. உதாரணமாக காலண்டர் விட்ஜெட், கடிகாரம் போன்றவை. 


3. ஒன்றுக்கு மேற்பட்ட வாசகர்களின் எண்ணிக்கைக் காட்டக்கூடிய விட்ஜெட்களை வைத்திருப்போம். அவற்றையும் எடுத்துவிடுவது நல்லது. 


4. வாசகர்களுக்கு பயனுள்ள விட்ஜெட்களை மட்டும் நமது பிளாக்கரில் இணைப்பதால் மட்டுமே வாசகர்களை நீண்ட நேரம் நமது தளத்தில் இருக்க வைக்க முடியும். 


5. தேவையில்லாத அனிமேட்டட்(animated ) விட்ஜெட்களை வைப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் நமது தளம் லோட் ஆக நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும். 

பதிவில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தயங்காமல் பின்னூட்டத்தில் கேட்கவும்.

இந்தப் பதிவு பிடித்திருந்தால் நிச்சயம் பின்னூட்டமிடுங்கள். உங்கள் பின்னூட்டம் எமது முன்னேற்றம்! நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவில் சந்திப்போம். வாழ்த்துக்கள்!

RELATED ARTICLES

4 COMMENTS

  1. அன்பரே நீங்கள் லிங்க் உள்ளிடும் போது open in new window செக் பாக்ஸ்இல் டிக் செய்து பின்பு பதிவை publish செய்யவும்..ஒவ்வொரு முறையும் அதே விண்டோவில் ஓபன் ஆகும் போது உங்கள் ப்ளாக்ஐ விட்டு அந்த external link செல்வது சிலருக்கு பிடிக்காமல் போகலாம்…:)

Comments are closed.

Most Popular

Recent Comments