Monday, December 23, 2024
HomeMAKE MONEY ONLINEPTC தளங்கள் பற்றிய ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்.

PTC தளங்கள் பற்றிய ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்.

paid to click - PTC

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க என்று பல பி.டி.சி. தளங்கள் உள்ளது. இந்த P.T.C இவர்கள் நேரடியாக நமக்கு பணத்தை அளிப்பதில்லை. இவர்கள் ஒரு இடைத்தரகு வேலை செய்பவர்கள்தான். அதாவது விளம்பரம் தரும் கம்பெனிகளில் விளம்பரங்களை வாங்கி, தங்களுடைய தளங்களில் போட்டு நம்மை பார்க்க வைப்பார்கள். இத்தளங்களில் நாம் கணக்கு வைத்துக்கொண்டு அவர்கள் கொடுக்கும் விளம்பரங்களைப் பார்த்தால் அதற்கு குறிப்பிட்டதொகை தருவார்கள்.

அவர்களின் ஆரம்பத் தொகையே 0.00001 $ என்று இருக்கும். குறைந்தபட்சம் 20$ டாலர்கள் வரை சேர்ந்தால்தான் நம்முடைய கணக்கிற்கு மாற்ற முடியும் என்ற நிபந்தனையோடு நமக்கு கணக்கு கொடுக்கப்படும்.

நாமும் தினமும் அந்த தளத்திற்கு சென்று ஒரு விளம்பரத்தை குறைந்த பட்சம் 30 செகண்டுகளாவது பார்க்க வேண்டும். இப்படிப் பார்க்கும் விளம்பரங்களுக்கு நமக்கு அவர்கள் தரும் தொகை 0.00001 $ லிருந்து ஆரம்பிக்கும்.

ஆனால் அவர்கள் தங்களின் விளம்பரங்களில் மாதம் 1000$ டாலர்கள் சம்பாதிக்க முடியும் என்று சொல்லயிருப்பார்கள்.. ஆனால் அது உண்மையல்ல. வெறும் 20 டாலர்கள் வருவதற்கே வருடக்கணக்காகிவிடும்.

அப்படி இருபது டாலர்களை நெருங்கினால் அவர்களே நம் கணக்கை முடக்கி அந்தத் தொகையை எடுத்துக்கொள்வார்கள்.

அதனால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட நிறுவனங்கள்(company)இந்தியா போன்ற அதிக மக்கள் தொகைகொண்ட நாடுகளையே தேர்ந்தெடுக்கிறது.ஏனெனில் அங்குதான் அதிகம் விளம்பரங்களைப் பார்க்க ஆட்கள் கிடைப்பார்கள் என்ற வியாபார நோக்கம்.

இதானல் இவர்களின் தளங்களுக்குத்தான் மதிப்பு கூடுமே தவிர நமக்கு வருமானம் ஒன்றும் வரப்போவதில்லை. நமக்கு நேரம்தான் விரயம் ஆகும்.

இப்படிப்பட்ட பல ஏமாற்றுக்கார்கள் தான் இத்தகைய தளங்களை நடத்தி வருகின்றனர். எனவே நண்பர்களே இத்தகைய தளங்களில் உங்கள் நேரத்தை வீணாக்காமல், முறையாக நிரந்தர வருமானம் தரக்கூடிய ஒரு சில தளங்களை அடையாளம் கண்டு அதில் சேர்ந்து பயன்பெறுங்கள்.

அப்படி ஏமாற்றமல் விளம்பரங்களைக் கொடுத்து நமது வருமானத்தை பெருக்க வைப்பதில் முதன்மையாக கூகுள்(google adsense) ஒன்றுதான்.

அப்படி கூகுள் ஆட்ஸ் பெற என்ன செய்ய வேண்டும்? அதற்குரிய தகுதிகள் என்ன? அடுத்த பதிவில் பார்ப்போம்.

RELATED ARTICLES

4 COMMENTS

Comments are closed.

Most Popular

Recent Comments