கம்ப்யூட்டர் கீபோர்டில் உள்ள எழுத்துகள் ஏறுமாறாய் இருக்கும். டைப் ரைட்டிங் கற்றுக்கொண்டவர்களுக்கு கீபோர்ட் பயன்படுத்துவது எளிதாக இருக்கும். ஆனால் புதியவர்கள் கீபோர்டில் உள்ள எழுத்ததுகளை டைப் செய்வதற்கு மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள்.
ஒவ்வொரு எழுத்தாக தேடிப் பிடித்து ஒரு வாசகத்தை டைப் செய்திட 10 , 20 நிமிடங்கள் கூட ஆகிவிடும்.
இதுபோன்ற சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு பயன்படும் விதமாக ஒரு மென்பொருளை வடிமைத்துள்ளனர். அதன் பெயர் KeyTweak
இதன் மூலம் உங்களுக்குத் தேவையான எழுத்துகளை வரிசை கிரம மாக மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.
Free keyboard re maper |
- இதன் மூலம் விசைப்பலகையில் எழுத்துக்குரிய விசைகளை நமக்குப் பிடித்த எழுத்துக்களின் விசைகளாக மாற்றிக்கொள்ளலாம்.
- Q,W, E, R, T, Y என்று தொடரும் வரிசையை A,B, C,D, E, என்ற வரிசை
- ஆக மாற்றலாம்.
- உதாரணத்திற்கு Q -க்கு பதிலாக A வையும், W -க்கு பதிலாக B வையும் சேர்க்கலாம்.
- இதேபோல் அனைத்தை எழுத்துக்களையும் (A -Z) வரிசையாக மாற்றி அமைத்துக்கொண்டு எளிதாக விசைப்பலகையை பயன்படுத்தலாம்
- இம்மென்பொருளின் முக்கிய பயனே நாம் எழுத்துக்களை தேடித் தேடி அடிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் செய்வதுதான்
- மேலும் தேவையில்லாத பயன்படுத்தாத எழுத்துக்குரிய விசைகளை செயல்படாத வண்ணம் முடக்கலாம்.
- அதாவது அந்த விசையை அழுத்தினால் எந்த வித எழுத்தும் விழாமல் செட் செய்யலாம்.
- இது எவ்வாறு செயல்படுகிறது என்றால் நம்முடைய கணினியின் மைக்ரோசாப்ட் Scan code map Registry யின் செட்டிங்ஸ்களை மாற்றியமைத்து விசைப்பலகையை நம் விருப்பத்திற்கேற்ப மாற்றிவிடுகிறது.
- இதில் இருக்கும் மற்றொரு வசதி நாம் ஏற்படுத்திய மாற்றங்கள் பிடிக்கவில்லை எனில் reset என்ற பட்டனை அழுத்தி மீண்டும் பழைய நிலைக்கே கொண்டுவந்துவிடலாம்.
- தனிப்பட்ட ஒவ்வொரு விசையையும் செயல்படுத்த/செயலிழக்கச் (enable or disable)செய்யும் வழிமுறையும் இதில் இருக்கிறது.
- அதோபோல் இம்மென்பொருளில் நமக்குத் தெரிந்த விசைப்பலகை அமைப்புக்கும் மாற்றிக்கொள்ளக் கூடிய வசதிகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
- அதாவது நாம் பாமினி, வானவில் போன்ற விசைப்பலகை கொண்டு தட்டச்சிட வேண்டுமானால் அதை இம்மென்பொருள் கொண்டு மாற்றம் தட்டச்சிடலாம்.
செய்முறை:
இம்மென்பொருளை நிறுவியவுடன், இதில் விசைப்பலகையின் அமைப்பு காட்டப்படும்.
இதில் நாம் வேண்டிய மாற்றங்களை செய்துகொள்ள Choose New Remapping என்பதில் பிடித்தமான புதிய விசையைத் தேர்வு செய்தகொண்டு Remap key என்ற பட்டனைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் Apply என்ற பட்டனைக் கிளிக் செய்து கணினியை ஒருமுறை Restart செய்துகொள்ளுங்கள்.
பிறகு நீங்கள் தட்டச்சிடும்போது விசைப்பலகையில் நீங்கள் மாற்றிய அமைப்பு வேலை செய்யும்.
குறிப்பு: அனைத்து மாற்றங்களையும் செய்துவிட்டு ரீஸ்டார்ட் செய்வது முக்கியம். இல்லை யென்றால் நீங்கள் மாற்றிய விசைப்பலகையின் அமைப்பு செயல்படாது.
டவுன்லோட் செய்ய சுட்டி:
Tags and Search Terms: KeyTweak Software, Free software, Keyboard Letter, keytweak review, how to use keytweak, keytweak cnet, keytweak filehippo, is keytweak safe, keytweak majorgeeks, keytweak vs sharpkeys,
keytweak portable
உங்க பேர் நல்லா இருக்கு சார்! ..:))