Wednesday, January 22, 2025
Homefreeஇணைய தளங்களில் தமிழில் தட்டச்சிட இலவச மென்பொருள் தமிழ்99 (Tamil99)

இணைய தளங்களில் தமிழில் தட்டச்சிட இலவச மென்பொருள் தமிழ்99 (Tamil99)

எளிய தமிழில் ஒருங்குறி(Unicode) முறையில் தட்டச்சிட பயன்படும் சிறந்த இலவச மென்பொருள்  இ-கலப்பை. இந்த மென்பொருள் டவுன்லோட் செய்து நிறுவிகொண்டால் வேர்ட் ப்ராசசர், இணைய பக்கங்கள், சமூக வலைத்தளங்கள் என எதில் வேண்டுமானாலும் தமிழ் எளிதாக டைப் செய்ய முடியும். பயன்படுத்துவதும் எளிது.

டைப்ரைட்டிங் தெரியாதவர்கள் கூட இதைப் பயன்படுத்த முடியும். ஒலி பெயர்ப்பு முறையில் தமிழ் டைப் செய்திடலாம்.

முதலில் தரவிறக்கிக்கொண்டு, உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

தமிழா ! இ-கலப்பை பயன்படுத்தும் விதம்: 

  • முதலில் தமிழ் 99 மென்பொருளை டவுன்லோட் செய்துகொள்ளவும்.
  • சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்தபிறகு,  வேர்ட் பேட் (wordpad) திறந்துக்கொள்ளுங்கள்.
  • பிறகு தமிழ்99 திறப்பதற்கான குறுக்கு விசை Alt+2 அழுத்துங்கள்.
  • இப்போது நீங்கள் தமிழில் எளிதாக தட்டச்சிட தொடங்கலாம்.

keyman99 தட்டச்சு முறைகளுக்கான தமிழில் விசைப்பலகை..

கீபோர்டில் தமிழ் எழுத்துகள் அமைந்துள்ள விதத்தை அறிந்துகொள்ள உதவும் படம்.

tamil99 keyboard

இந்த மென்பொருளில் ‘அம்மா’ என தட்டச்சிட

1. ‘அ’ விற்கு a வையும்,
2 ‘ம்’ என தட்டச்சிட ‘k’ ஐயும் அழுத்திவிட்டு புள்ளி வைக்க f என்ற விசையை அழுத்தவும்.

ஒவ்வொரு புள்ளிவைத்த எழுத்தை உள்ளிட  முதலில் எழுத்தை  உள்ளிட்டுவிட்டு பிறகு புள்ளிக்கான விசை f ஐ உள்ளிட வேண்டும். (ஆனால் பாமினி முறையில் டைப் செய்ய முதலில் புள்ளியை உள்ளிட்டுவிட்டு பிறகுதான் எழுத்தை உள்ளிடுவோம்.)

3. ‘மா’ என தட்டச்சிட ‘K’ வை ஒரு முறை அழுத்திவிட்டு ‘q’ என்ற விசையை உள்ளிட வேண்டும்.

இங்கு ‘மா’ என்பது ம+ஆ=மா என மாறும்.

a+k+f+k+q=அம்மா என நமக்கு வெளியீடு கிடைக்கும்.

மேலும் ஒரு உதாரணம்,  வா என் தட்டச்சிட வ+ஆ=வா என உள்ளிட வேண்டும். ஒவ்வொரு கூட்டெழுத்திற்கு  இதுபோலவே வரும்.

தமிழ் 99 (இ-கலப்பை) மென்பொருள் டவுன்லோட் செய்ய சுட்டி: 

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். பதிவு பிடித்திருந்தால் பின்னூட்டம் இட மறக்காதீர்கள். நன்றி நண்பர்களே..!!

RELATED ARTICLES

Most Popular

Recent Comments