Friday, November 22, 2024
Homefree antivirus site1000 க்கும் மேற்பட்ட Anti-Virus Software ஒரே இடத்தில் டவுன்லோட் செய்ய

1000 க்கும் மேற்பட்ட Anti-Virus Software ஒரே இடத்தில் டவுன்லோட் செய்ய

scan_with_virus_software_shopsகம்ப்யூட்டரை வைரஸ் தாக்குதல்களிலிருந்து காப்பவை Anti-Virus Software. இது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆன்ட்டி-வைரஸ் மென்பொருட்கள் பல உண்டு. ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு வகையில் தனிச்சிறப்பு (Specification) பெற்றிருக்கும். ஒரு கம்ப்யூட்டரை பாதுகாத்திட ஒரு Anti-virus Program இருந்தாலே போதுமானது.

 இதுவரைக்கும் உருவாக்கப்பட்ட 1000 க்கும் மேற்பட்ட ஆன்ட்டிவைரஸ் மென்பொருட்கள் அனைத்தும்  ஒரே இணையதளத்தில் டவுன்லோன் செய்ய கிடைக்கின்றன.  அந்த இணையதளத்தைப் பற்றிதான் இங்கு தெரிந்துகொள்ள போகிறோம். அதற்கு முன்பு , SoftwareShops இணையதளத்தைப் பற்றி சில தகவல்கள் உங்களுக்காக.

நமது software shops வலைப்பூவில் கம்ப்யூட்டர் டிப்ஸ், ப்ளாக்கர் டிப்ஸ், சமூக வலைத்தளங்கள் பற்றியத் தகவல்கள், ஸ்மார்ட்போன், ஆன்ட்ராய்ட் ஆப்ஸ்  போன்ற தகவல்களை கதம்பமாக எழுதி வருகிறோம். குறிப்பாக “இலவச மென்பொருட்கள்” குறித்த பதிவுகள் அதிகமாக எழுதி வருகிறோம்.

இன்னும் தொடர்ந்து ஆயிரக்கணக்கில் தகவல்கள் இந்த வலைத்தளத்தின் வழியாக பதிவேற்றிக் கொண்டே வருவோம்.

உங்களுக்குத் தேவையான மென்பொருட்களை SoftwareShops.Net இணையதளத்தில் உள்ள தேடு பெட்டியின் (Search Box) மூலம் தேடி, அது குறித்த பதிவு (Article) மற்றும் தரவிறக்கச் சுட்டியை (Download Link) கண்டறியலாம்.

வளர் பருவத்தில் இருக்கும் நமது ‘சாப்ட்வேர் சாப்ஸ்‘ (தமிழில் சொன்னால் ‘மென்பொருள் கடை’) இந்த கடையில் கிடைக்கும் தகவல் அனைத்தும் இலவசம் என்பதை இப்பதிவின் ஊடாக நினைவூட்டுகிறோம்.

நம்முடைய வலைப்பூவைப் போன்றே, SCAN WITH என்ற இணையதளத்திலும் பல இலவச மென்பொருட்கள் டவுன்லோட் செய்திட கிடைக்கின்றன.

அதில் இருக்கும் ஒவ்வொரு anti virus software- ம் கம்ப்யூட்டருக்கு நல்ல தகவல் பாதுகாப்பினை வழங்க வல்லவை.

Anti Virus Software  மட்டுமல்ல.. கணினிக்குத் தேவையான அனைத்து மென்பொருட்களும் இங்கு கிடைக்கிறது.

எனவேதான் இத்தளத்தைப் பற்றிய தகவல்களை இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

SCANWITH இணையதளத்தைப் பற்றிய கூடுதல் தகவல்கள்: 

ஒவ்வொரு சாப்ட்வேரைப் பற்றியும், தலைப்பின் கீழே எளிய முறையில் விளக்கியிருக்கிறார்கள். அதைப் படித்துப் பார்த்த பிறகு உங்களுக்குப் பிடித்திருந்தால் அருகே உள்ள சுட்டியை சொடுக்கி தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

வெவ்வேறு இணையத்தளங்களில் பல்வேறு மென்பொருட்கள் தரவிறக்கம் செய்ய கிடைத்தாலும், இவ்விணையதளத்தின் மென்பொருளின்
1. தரம், 2. வகை, 3. பயனர் மதிப்பீடு என அது பற்றிய தரவுகளை பட்டியலிட்டு கொடுப்பதால், வேண்டிய மென்பொருளை தரவிறக்கம் செய்வதா வேண்டாமா என முடிவெடுக்க உதவுகிறது.

இம் மென்பொருட்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.  .. தளத்திற்கு சென்று பாருங்கள் உங்களுக்குத் தேவாயனதை (free software) அள்ளிக்கொள்ளுங்கள்… அதுவும் இலவசமாக..!!

தளத்திற்கான சுட்டி. http://www.scanwith.com/

பதிவு பயன்மிக்கதாக இருந்தால் பின்னூட்டம் இட மறக்க வேண்டாம்.. மற்றவர்களும் பயன்பெற FACEBOOK, TWITTER, GOOGLE + போன்ற சமூக இணையதளங்களில் பகிர்ந்திட (SHARE) மறவாதீர்கள். 

Tags: Free Software, 1000 Software in one Place, Scanwith Free Software Website.

RELATED ARTICLES

2 COMMENTS

  1. வருகை தந்தமைக்கு நன்றி சின்னமலை.. உங்கள் நண்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகப்படுத்தவும்.!!!

Comments are closed.

Most Popular

Recent Comments