Monday, December 23, 2024
Homebrowser tipsஉலகின் மிகச்சிறந்த Maxthon Browser சிறப்பம்சங்கள் மற்றும் டவுன்லோட் லிங்க்

உலகின் மிகச்சிறந்த Maxthon Browser சிறப்பம்சங்கள் மற்றும் டவுன்லோட் லிங்க்

கம்ப்யூட்டரிலிருந்து இணையத்தை அணுக உருவாக்கப்பட்ட ஒப்பற்ற ஒரு புரோகிராம் தான் BROWSER. பிரௌசர்கள் பல வகை உண்டு.

அவற்றில் சிறந்தாக கருதபடுபவை Chrome மற்றும் Firefox.  ஆனால் பிரௌசர்களில் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட சிறப்பியல்களைப் (Features) பெற்றுள்ளன.

அந்த வகையில் மற்ற பிரவுசர்களைக் காட்டிலும் அரிய வசதிகளை கொண்ட ஒரு முதன்மையான வலை உலவி Maxthon Browser. இதன் தாரக மந்திரமாக இணையதளத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன.

Super-Fast
Dual Rendering Engines,
Displaying pages in no time
Smart switch between Webkit & Trident,
balance both read speed and multi-element page content

Super-Clean
Web with no ads,
no more annoying disturbing.
Kill floating window, banner, and pop-up ads.
Give you a smooth browsing experience

Super-Clean
Web with no ads,
no more annoying disturbing.
Kill floating window, banner, and pop-up ads.
Give you a smooth browsing experience

மேக்ஸ்தான் பிரௌசரில் அப்படி என்ன சிறப்பு வசதிகள் உள்ளன? எந்த வகையில் இது சிறந்த பிரௌசராக உள்ளது என்பது போன்ற தகவல்களை இங்கு விரிவாக தெரிந்துகொள்வோம்.

மேக்ஸ்தான் பிரௌசர் வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் (Specs & Features)

  • உலகில் 6 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த பிரௌசரை தங்களது கணினியில் இயல்பிருப்பு உலவியாக (Default) வைத்து பயன்படுத்துகின்றனர்.
  • Maxthon இல் இரட்டை படத்திரை பொறி (dual display engines) எனப்படும் Ultra Mode மற்றும் Retro Mode என்பவைகளை கொண்டது.
  • Auto -completes நினைவகத்தை கொண்ட Smart address bar உள்ளடக்கப்பட்டுள்ளது.
  • Magic Fill Manager எனும் வசதியால் நாம் அடிக்கடி செல்லும் websites களுக்கான கடவுச்சொற்களை சேமித்துகொள்ள முடியும்.
  • Popup ads மற்றும் சில தேவையற்ற windows களை Maxthon 3.0 மூலம் நிறுத்தி வைக்க முடியும்.
  • Ad Hunter எனும் சேவையின் வழியாக எந்த தளங்களின் ads எதிர்காலங்களில் காட்ட வேண்டுமோ அவற்றை சேமித்து வைத்துகொள்ளலாம்.
  • Mouse Gesture எனப்படும் புதிய வசதியின் மூலம் நீங்கள் திறந்துள்ள தளத்தை refresh செய்ய வேண்டுமானால் எந்தவித refresh பட்டன் அல்லது shortcutபடடன்களை பயன்படுத்தாமலேயே Mouse​ஐ right click செய்து L வடிவில் வரைந்து விட்டால் மிக விரைவாக refresh ஆகிவிடுகிறது.
  • 6. மற்றுமொரு சிறப்பு என்னவெனில் Online Notepad, Feed Reader, Safe mode(which detects safe sites), Page mute இப்படிப்பட்ட வசதிகளைக் கொண்டுள்ளதுதான்.
  • Drag and Drop Search எனும் வசதியைப் பயன்படுத்தி , வலைப்பக்கத்திலுள்ள சொற்கள் அல்லது வரிகளை தேர்வு செய்து நகர்த்தி Search box ல் விட்டால் போதும். ஒரு சில நொடிகளிலேயே முடிவுளை Search செய்து நமக்கு கொடுக்கும்.
  • வலைப்பக்கங்களை எளிதாக பிரின்ட் மற்றும் சேவ் (print and save) செய்துகொள்ள Snap Button ஒன்று தரப்பட்டுள்ளது. மேலும் Redo Page, Home, Recently viewed pages, back போன்ற பட்டன்கள் கண்ணைக் கவரும் விதம் இருக்கிறது.
  • Maxthon 3.0ஆனது இலவச user accountகளை வழங்குவது மட்டுமல்லாது credits மற்றும் bonus களை பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளையும் வழங்குகின்றது. இவற்றை வெவ்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும். 
  • மேலும் Opera மற்றும் Chrome களில் இருப்பதைப் போன்றே உங்கள் விருப்பதளங்களை புக்மார் செய்து கொள்ளவும், சேமித்துக்கொள்ளவும் முடியும். மேலும் Speed Dial வசதிகளையும் கொண்டுள்ளதுடன் Tab வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
  • இதன் தோற்றத்தை skins மாற்றிகொள்ள add-ons வசதியையும் தருகிறது.

கூடுதல் வசதிகள் மற்றும் சிறப்புகள்:

  • வீடியோ டவுன்லோட் செய்யும் வசதி..
  • எந்த ஒரு விளம்பர தொந்தவும் இல்லாமல் இருப்பது
  • ஆன்ட்ராய்ட், ஆப்பிள் போன்களுக்கென பிரத்யேகமான பிரௌசர் (Special Browser)

கூகுள் குரோம், ஃபயர்பாக்ஸ் போன்ற முதன்மை வரிசையில் இருக்க கூடிய தரமான பிரௌசர் இது என்பதால் இதை தராளமாக டவுன்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்கலாம்.

மேக்ஸ்தான் பிரௌசர் தரவிறக்கச் சுட்டி: Download Maxthon Browser for Free

 தொடர்புடைய பதிவு: குரோம் பிரௌசர் சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகள்

Tags: free browser, Free software, Free software, new browser, new Maxthon browser, Useful sites.

அனைவரும் தெரிந்துகொள்ள இதை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்திடுங்கள்.

RELATED ARTICLES

2 COMMENTS

Comments are closed.

Most Popular

Recent Comments