நாள்தோறும் நம்முடைய வலைப்பூவிற்கு வருகை தரும் வாசகர்கள் பதிவுகள் பிடித்திருந்தால் தங்களின் கருத்தை அளிக்கும் வகையில் பதிவிற்கு கீழ் கருத்துப் பெட்டி வைத்திருப்போம்.
கருத்துப் பெட்டியின் கீழாக வேர்ட் வெரிபிகேஷன் என்னும் பெட்டி இருக்கும். பெட்டிக்கு மேலே இருக்கும் எழுத்துக்களை பெட்டியில் தட்டச்சு செய்துவிட்டு பிறகுதான் Post comment என்ற பட்டனை சொடுக்கும்படி இருக்கும்.
நமது வலைப்பூவிற்கு வருகை தரும் வாசகர்கள் அந்தளவுக்கு பொறுமையாக ஒவ்வொரு கமெண்டுக்கும் வேர்ட் வெரிபேகஷனை தட்டச்சு செய்யும் அளவுக்கு அவர்களுக்கு நேரம் இருக்காது. அது ஒரு தொந்தரவாகவும் இருக்கும்.
உங்கள் பிளாக்கரில் Settings==>comments==> என்ற ரீதியில் போனால் , அதாவது செட்டிங்ஸ்ல் உள்ள comments என்பதை சொடுக்குங்கள்..
அந்த பக்கத்தின் இறுதியில் பார்த்தால் இவ்வாறு படத்தில் காட்டியபடி இருக்கும்.
அதில் Yes என்பதை எடுத்துவிட்டு, படத்தில் காட்டியுள்ளபடி No என்பதை தேர்வு செய்யவும்.
பின்பு கீழிருக்கும் Save settings என்பதை கிளிக் செய்த நீங்கள் செய்த மாற்றத்தை சேமித்துவிடுங்கள்.
அவ்வளவுதான். இனி வேர்ட் வெரிபிகேஷன் உங்கள் கருத்துப் பெட்டியின் கீழ் தோன்றாது.
இதனால் வாசகர்களுக்கு ஏற்படும் தொல்லையும் தவிர்க்கப்படும். விரைவாக கருத்துரை அளிக்க வசதியாகவும் இருக்கும்.
இப்பதிவு நண்பர் ஒருவர் கேட்டதற்கிணங்க பதிவேற்றப்பட்டது. பதிவில் ஏதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்கவும். பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் பின்னூட்டமிடுங்கள். நன்றி நண்பர்களே..!!
நன்றி ! அன்புடன்:கோவீந்தராஜ்
இப்பதிவு நண்பர் ஒருவர் கேட்டதற்கிணங்க பதிவேற்றப்பட்டது. பதிவில் ஏதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்கவும். பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்.
This comment has been removed by the author.
super,thanks
நன்றி@ கஜன், கோவிந்தராஜ்
உங்கள் பதிவு அருமை…நன்றி…
எனது வலைப் பக்கதிர்க்கு வரவேற்கிறேன்..
http://ennavazhkai.blogspot.com/
தங்கம் பழனிக்குதான் முதலில் நன்றி! அவர்தான் இந்த தகவலை எனக்கு சொன்னவர். இரண்டாவது தங்களுக்கும் நன்றி! புரியாததை புரிய வைத்தற்கு நன்றி! நன்றி!!!!!