Monday, December 23, 2024
Homeblogger basicஉங்கள் பிளாக்கரில் add to circle widget இணைப்பது எப்படி?

உங்கள் பிளாக்கரில் add to circle widget இணைப்பது எப்படி?

வணக்கம் அன்பு நண்பர்களே. இன்று ஒரு புதிய உபயோகமுள்ள பதிவைப் பார்க்கப் போகிறோம். உங்கள் பிளாக்கில் add to circle widget பட்டன் இணைப்பது எப்படி? என்று பார்ப்போம்.

இந்த ஆட் டூ சர்க்கிள் விட்ஜெட்டை உங்கள் தளத்தில் வைப்பதால் உங்கள் வலைதளத்திற்கு வருகை தரும் நண்பர்கள் அவர்களின் சர்க்கிளில் சேர்க்க ஒரு வாய்ப்பை அமைத்துக்கொடுக்கிறோம். இதனால் உங்களுடைய நண்பர்களின் வட்டம் அதிகமாவதோடு உங்களுடைய தளத்திற்கு வருகை தரும் வாசகர்களும் அதிகமாவார்கள்.

ADD ME ON GOOGLE + விட்ஜெட்டை சேர்க்க

1. முதலில் கூகுள் ப்ளஸ் விட்ஜெட் தளத்திற்கு செல்லுங்கள். இங்கு கிளிக் செய்யவும்.

2. இங்கு இருப்பதைப் போன்ற Get Widget என்ற பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்யவும்.

3. நீங்கள் உங்கள் விட்ஜெட் இதிலிருக்கும்  டேப் கிளிக் செய்து உங்களுக்கு வேண்டிய மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

 இங்கு விட்ஜெட் வித் என்பதை நான் 320 என்பதை வைத்திருக்கிறேன். உங்களுடைய சைட்பார் அகலத்திற்கு தகுந்தாற் போல் அதை மாற்றிக்கொள்ளவும்.

4. கீழிருக்கும் GOOGLE +ID என்பதில் உங்களுடைய கூகுள் ப்ளஸ் ஐ.டியைக் கொடுக்கவும்.

5. google + ஐ.டி பெற உங்கள் கூகுள் ப்ளஸ் சென்று புரொஃபைல் என்ற ஐகானைக் கிளிக் செய்து பெறலாம். படத்தைப் பார்க்க.

6. புரொபைலை கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் அட்ரஸ் பாரில் பாருங்கள். அங்கு இருக்கும் /post என்பதற்கு முன் இருக்கும் எண்களை காப்பி செய்துகொள்ளுங்கள்.

7. google + ID கொடுத்தவுடனேயே get code என்று பட்டன் ஆரஞ்சு நிறத்தில் மாறிவிடும்.

  

8 . அதை கிளிக் செய்தவுடன் வரும் கோடிங்களை காப்பி செய்து உங்களுடைய பிளாக்கரில் desing==>add gadget==>html/javascript==> சென்று பேஸ்ட் செய்து சேமித்துக்கொள்ளவும்.

உங்களுடைய கூகுள் பிளசின் ஆட் டூ சர்க்கிள் இப்போது பிளாக்கரில் இணைந்திருக்கும்.

பதிவு பயனுடையதாக இருந்தால் பாராட்டுங்கள்.. பாராட்டுக்களை விரும்பாத மனிதர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். குறைகள் ஏதேனும் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். நன்றி நண்பர்களே..!!

RELATED ARTICLES

6 COMMENTS

Comments are closed.

Most Popular

Recent Comments