Friday, January 24, 2025
HomeFree softwareஇணையத்தில் தரவிறக்கும் வேகத்தை அதிகரிக்க Free Download Manager 3.8 RC1

இணையத்தில் தரவிறக்கும் வேகத்தை அதிகரிக்க Free Download Manager 3.8 RC1

Free_download_managerஆம். அன்பு நெஞ்சங்களே.. நாம் இணையத்தில்  வீடியோ, மென்பொருள், இப்படி ஏதாவது ஒன்றை டவுன்லோட் செய்துகொண்டிருப்போம்.  டவுன்லோட் செய்துகொண்டிருக்கும்போது இடையில் ஏதேனும் மின்தடையோ, அல்லது பயன்படுத்தும் இணைய இணைப்பில் ஏதேனும் தடங்கல் இருந்தாலோ,  அந்த  தரவிறக்கம் பாதியிலேயே நின்று விடும்.  அவ்வாறு தடை ஏற்பட்டால் மீண்டும் அந்த தரவிறக்கத்தை புதிதாக தொடங்கவேண்டும். இத்தகைய பிரச்னைகளிலிருந்து விடுபட உங்களுக்கென ஒரு சூப்பர் மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Download Manager 3.8 RC1

மென்பொருளிலுள்ள பயன்கள்:

1. விரைவான தரவிறக்கம்
2. சரசாரி தரவிறக்க வேகத்தை விட ஆறு மடங்கு வேகம்.
3. ஜிப்(zip,rar) போன்ற பைல்களை தரவிறக்கும் முன் அதில் எந்த் வகையான பைல்கள் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளக்கூடிய சிறப்பு வசதி
3. Vedio Preview வசதியுள்ளதால் நீங்கள் தரவிறக்கும் வீடியோவை முன்னோட்டம் பார்த்துவிட்டு தரவிறக்கலாம்.
4. torront கோப்புகளை டவுன் செய்ய
5. கட்டண மென்பொருள்களுக்கிணையான பல சிறப்பு வசதிகளையும் கொண்டிருக்கிறது.
6. பெரும்பாலான முக்கிய உலவிகளில் (IE, Opera, Epic, Firefox, ) போன்றவைகளில் அருமையான செயல்பாடு.
7. குறைந்த கொள்ளளவு கொண்ட மென்பொருள். 6MB மட்டுமே.

மென்பொருளை உபயோகிக்க

முதலில் கீழே சுட்டியை சுட்டி தரவிறக்கம் செய்துகொண்டு உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

நிறுவியவுடன் இந்த மென்பொருளைத் திறந்தால் போதும் இந்த மென்பொருளுக்கான ஐகானை நீங்கள் டாஸ்பாரில் பார்க்கலாம்.

இனி நீங்கள் புதிதாக டவுன்லோட் செய்ய ஏதேனும் சுட்டியை சொடுக்கும்போது புதியதாக ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.

அதில் நாம் தரவிறக்கம் செய்யும் மென்பொருளில் ஏதேனும் தீங்கு செய்யும் நச்சுப் பொருள் இருக்கிறதா என்பதை சோதித்தறிய Malcious என்பதை சொடுக்கி சோதித்துப் பார்த்துக்கொள்ளலாம்.

Add to Download manager

எந்த ஒரு பிழை செய்தியும் காட்டவில்லை எனில் நீங்கள் தாராளமாக ok பட்டனை கிளிக் செய்து உங்கள் தரவிறக்கத்தை தொடங்கலாம்.

Free download manager

பல்வேறுபட்ட வசதிகளடங்கிய இம்மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் தரவிறக்கும் வேகத்தை உபயோகித்துப் பார்த்தால் மட்டுமே தெரிந்துகொள்ளலாம்.

மென்பொருள் தரவிறக்க சுட்டி  Free download Manager 3.8(http://download.freewarefiles.com/files/fdm38inst.exe)

RELATED ARTICLES

3 COMMENTS

Comments are closed.

Most Popular

Recent Comments