Monday, December 23, 2024
Homeblogger tipsஉங்கள் பிளாக்கரில் Template மாற்றுவது எப்படி?

உங்கள் பிளாக்கரில் Template மாற்றுவது எப்படி?

How to Change Blogger Template [Tamil Tutorial]

இது முற்றிலும் புதிய பதிவர்களுகான பதிவு.

Google வழங்கம் இலவச சேவை பிளாக்கர். இந்த தளத்தின் மூலம் லட்சக்கணக்கோர் இலவச வலைப்பூக்களை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர்.

பிளாக்கர் தளங்களை தளங்களை அழகாக காட்சியளிக்கச் செய்வது Templates என்ற அழைக்கப்படும் வார்ப்புருக்கள். இவைகளை பிளாக்கர் தளத்திலேயே பெறலாம்.

இயல்பிருப்பாக உள்ள பிளாக்கர் வார்ப்புருக்களில் அதிகபட்ச வசதிகள் இருக்காது. அடிப்படை வசதிகள் மட்டுமே அதிலுண்டு.

ஆனால் இணையத்தில் பிளாக்கர் பிளாக் தளங்களுக்குத் தேவையான அற்புதமான வார்ப்புருக்கள் கொட்டிக்கிடக்கின்றன.

அவற்றை டவுன்லோட் செய்து, பிளாக்கிர் அப்லோட் செய்வதன் மூலம், வலைப்பூவிற்கு ஒரு வெப்சைட் போன்ற தோற்றத்தினை கொடுக்கலாம்.

ஒரு பிளாக்கர் பிளாக்கிற்கு டெம்ப்ளேட்டை மாற்றுவது எப்படி என்பதை இப்பதிவில் கற்றுக்கொள்ளலாம்.

கூகிளில் தேடலில் Blogger Template 

உங்களுக்குத் தேவையான வார்ப்புருவை Blogger Template -ஐ இணையத்தில் தேடி எடுத்துக்கொள்ளலாம்.

Google Search -ல்  ‘Free Template for Blogger’ என்று தேடினால் நிறைய தளங்கள் கிடைக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பிளாக்கர் டெம்ப்ளேட்களை வழங்குகின்றன.

Google Image Search – ல் தேடினால் அழகான வார்ப்புருக்கள் படமாக காட்டப்படும். அதில் பிடித்தமான படத்தின் மீது கிளிக் செய்து, அந்த தளத்திற்குச் சென்று, அங்குள்ள Download Link – ஐ கிளிக் செய்து, Blogger Template – ஐ தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

(டெம்ப்ளேட்டை கிளிக் செய்வேண்டிய ஒன்றை தேர்ந்தெடுக்க அந்த படங்களின் மீது கிளிக் செய்தால் அந்த வலைதளத்திற்கு செல்லும். அதில் view demo/download என்று கொடுத்திருப்பார்கள்.

நீங்கள் அந்த வலைப்பூவின் மாதிரியை வியூ டெமோ என்பதை கிளிக் செய்து பார்த்துவிட்டு பிடித்திருந்தால் டவுன்லோட் செய்து கொள்ளலாம். அவ்வாறு டவுன்லோட் செய்யப்பட்ட வார்ப்புரு உங்கள் கணினியில் Xml கோப்பாக சேமிக்கப்படும்.)

பிளாக்கரில் வார்ப்புரு (Template) மாற்ற

  • blogger.com -ல் உங்களுடைய யூசர் நேம் பாஸ்வேர்ட் கொடுத்து லாகின் செய்யவும்.
  • படத்தில் உள்ளதுபோல More Options என்ற சிறு அம்புகுறியின் மீது கிளிக் செய்தால் இவ்வாறு டிராப்டவுன் மெனு தோன்றும். அதில் இருக்கும் Template என்பதன தேர்ந்தெடுக்கவும். 
    How to Change Blogger Template [Tamil Tutorial]
  • தோன்றும் பக்கத்தில் வலது மேல்மூலையில் Backup/Restore என்ற பட்டனை அழுத்தவும்.
  • பிறகு அங்கிருக்கும் Download full template என்பதை சொடுக்கி உங்கள் பிளாக்கரை பேக்அப் எடுத்துக்கொள்ளுங்கள்.

  • பிறகு அதற்கு கீழ் இருக்கும் Choose File என்பதை சொடுக்கி நீங்கள் டவுன்லோட் செய்து வைத்திருக்கும் Blogger Template -ஐ தேந்தெடுத்து Open கொடுக்கவும். 
  • பிறகு Upload என்பதை தேர்தெடுத்தால் உங்கள் டெம்ப்ளேட் பதிவேற்றபடும்.
    • Template தரவேற்றம் முடிந்த பிறகு, Save Template என்பதை சொடுக்கி, தரவேற்றியதை சேமித்துவிடவும்.
    • இப்போது view blog என்பதை கிளிக் செய்வதன் மூலம் புதிய மாற்றம் செய்யப்பட்ட வார்ப்புருவின் ( Blogger Template)வடிவத்தில் ,  உங்கள் வலைப்பூ காட்சியளிக்கும்.

    குறிப்பு:- பிளாக்கரில் உள்ள டெம்ப்ளேட்களையும் (Default Templates) பயன்படுத்தலாம்.அதற்கு Customize எனும் பட்டனை அழுத்தி, தோன்றும் வார்ப்புருக்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தப் பிறகு, Apply to Blog என்பதை சொடுக்கி, டெம்ப்ளேட் மாற்றலாம்.

    பதிவைப்பற்றி சந்தேகங்கள் இருப்பின் உடனியாக தெரிவிக்கவும். இப்பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்தால் நிச்சயம் உங்கள் கருத்துகளை பின்னூட்ட மிட மறக்காதீர்கள்.. மற்றுமொரு பயனுள்ள பதிவில் சந்திப்போம்..நன்றி நண்பர்களே..!!

    RELATED ARTICLES

    1 COMMENT

    Comments are closed.

    Most Popular

    Recent Comments