கூகுள் குரோம் உலவிக்கான பயனுள்ள நீட்சி இது. நாம் வலையில் பார்க்கும் சிறிய படங்களைக் கூட பெரிதாக காட்டக்கூடிய நீட்சி இது..
நாம் வலையில் பார்க்கும் ப்ரொபைல் படங்கள் முதற்கொண்டு வலையில் இடம்பெற்றிருக்கும் அனைத்துப் படங்களை கிளிக் செய்து பெரிதாக காண முயற்சிப்போம். அவ்வாறு கிளிக் செய்யும் போது படமானது வேறொரு விண்டோவில் திறக்கும்.. அல்லது அதே பக்கத்திலேயே திறக்கும். பெரிய படமாக இருந்தால் திறக்கும் நேரம் அதிகரிக்கும்.
இதைத் தவிர்க்கவும். வேறொரு விண்டோவில் திறக்காமல் அதே விண்டோவில் படத்தின் மீது சுட்டெலியை வைக்கும்போது அந்தப் படம் பெரிதாக உடனேயே காட்சியளிக்ககூடிய வகையில் இந்த (Plugin) நீட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த பிளக் இன் இணைக்க இங்கு செல்லவும்.
- உங்கள் கூகுள் குரோம் பிரௌசரில் இந்த இணைப்பின் வழியாக செல்லவும்.
- அங்கிருக்கும் Add to Chrome என்பதை கிளிக் செய்யுங்கள்..
- Confirm Installation என்றொரு பெட்டி தோன்றும்.
- அதில் Install என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அவ்வளவுதான். இனி உங்கள் பிரௌசரில் இந்த நீட்சி சேர்ந்துவிடும்.
சோதனை செய்து பார்க்க புதிதாக தளம் ஒன்றைத் திறந்து அதில் இருக்கும் படத்தின் மீது கர்சரை வைத்துப் பார்க்கவும். படம் தானாக அதே பக்கத்தில் பெரிதாக தோற்றமளிக்கும்.
கர்சரை படத்தின் மீது வைத்த பின்பு |
பதிவைப் பற்றிய தங்களுடைய கருத்துகளை எழுதவும்.. நன்றி..!! அதற்கு முன்பு நீங்கள் குரோம் யூசர் எனில் இந்த நீட்சியை இணைத்துவிட்டு சோதனை செய்து விடுங்களேன். ஏதாவது சந்தேகம் இருப்பின் தெரிவிக்கவும். நன்றி நண்பர்களே!!