Text to Audio Converter for Language Tamil |
வணக்கம் அன்பு நெஞ்சங்களே..! வலைப்பக்கம் வந்து நாட்கள் பல ஆகிவிட்டது. இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்ப வசதியில் எதுவும் சாத்தியமே..! அந்த வகையில் நாம் இன்று பார்க்கப்போவது ஒரு அருமையான தளத்தைப் பற்றி. அதில் உள்ள ஒரு பயன்மிக்க மென்பொருளைப் பற்றியதுதான் இந்த பதிவு. ஆம். நண்பர்களே.. நாம் ஆங்கிலத்தில் எழுதியதை ஒலி வடிவமாக மாற்றித்தரும் மென்பொருள்களை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆங்கிலத்தில் தட்டச்சிட்டதை வாசிக்க செய்யும் இத்தகைய மென்பொருள்களை நம்மில் ஒரு சிலர் பயன்படுத்தியும் இருக்கலாம்.
அதுபோலவே நம் தமிழ்மொழிக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழில் தட்டச்சிட்டதை வாசித்துக்காட்டுகிறது இந்த மென்பொருள். இந்த மென்பொருளை பெங்களுரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியர்.ஏ.ஜி.ராமகிருஷ்ணன் என்பவர் உருவாக்கி இருக்கிறார்.
மேற்காணும் இணைப்பைச்சொடுக்கி இந்த தளத்திற்கு செல்லவும். தமிழில் யுனிக்கோட் முறையில் எழுதப்பட்ட வரிகளை, கட்டுரைகளை, இங்கு இருக்கும் பெட்டியில் உள்ளிட்டு Submit என்பதை சொடுக்கினால் போதும். (அல்லது இணையத்தில் உள்ள ஏதேனும் தங்களுக்கு விருப்பப்பட்ட தமிழ் தளத்தில் உள்ள கட்டுரைகளை காப்பி செய்து இங்கு பேஸ்ட் செய்தும் பயன்படுத்தலாம்.)
நம் தமிழ்மொழிக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழில் தட்டச்சிட்டதை வாசித்துக்காட்டுகிறது இந்த மென்பொருள். இந்த மென்பொருளை பெங்களுரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியர்.ஏ.ஜி.ராமகிருஷ்ணன் என்பவர் உருவாக்கி இருக்கிறார். இந்த வரிகளைத்தான் கீழே கேட்கப்போகிறீர்கள்.
பயனுள்ள மிகச்சிறந்த மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது உங்கள் பதிவு. நன்றி
நன்றி தமிழ்மலர் அவர்களே..!!
பயனுள்ள பதிவு மிக்க நன்றி….
க்ளிக்கினால் எரர் காட்டுகிறதே…
க்ளிக்கினால் எரர் காட்டுகிறதே….
எரர் வருது நண்பா..கொஞ்சம் சரி செய்ங்க…
சொத்துகளுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்
நல்ல பதிவு சசி. நன்றி!
விரிவான விளக்கம் ! பயனுள்ள பதிவு ! நன்றி நண்பரே !
ஆகா.. அருமையான மென்பொருள்!!
விரைவில் பேசுவதை எழுதவும் ஒன்று வரட்டும்!
This comment has been removed by the author.
அருமை.. அந்த தளம் அருமையாக தமிழை வாசித்துகாட்டுகிறது. நான் சோதித்துப் பார்த்துவிட்டேன். அறிய தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி..!