Friday, September 20, 2024
HomeFree softwareஒரே மென்பொருளில் பலவகையான கோப்புகளைத் திறக்க(One application so many formats)

ஒரே மென்பொருளில் பலவகையான கோப்புகளைத் திறக்க(One application so many formats)

open many types file for freeஉங்களைச் சந்தித்து நீண்ட நாட்களாகவிட்டது அல்லவா? அதனால ஒரு எமோஷனல் பீலிங்..சரி. விடுங்க.பதிவுக்கு வந்துடுவோம்.

நம்ம ரஜினி சார் பாட்சா படத்துல சொன்னமாதிரி “நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவ சொன்னமாதிரி” ன்னு சொல்வாரு இல்லையா?
அதுமாதிரிதான்.. இந்த சாப்ட்வேரும்.. இந்த ஒரு சாப்ட்வேரை வச்சு நூறுக்கும் மேற்பட்ட வகையான கோப்புகளை திறக்கலாம் அப்படின்னா பார்த்துக்கங்க…

அட அப்படி என்னதான் சாப்ட்வேர்..?இந்த சாப்ட்வேரோட பேரு Free Opener ன்னு பேரு.இது எந்தெந்த மாதிரியான கோப்புகளை திறக்கும்? பாருங்க லிஸ்ட் பண்ணியிருக்கேன்..நிறைய ஆச்சரியமிகுந்த விஷயங்கள் இருக்கு.

1… அதுவும் Ms-office அதாவது (வேர்ட் பிராசசர்) தொகுப்பு நம்மிடம் இல்லாமலேயே DOC/DOCX, XLS/XLSX, CSV இந்த வகை கோப்புகளை திறக்கவும், எடிட் செய்து பார்க்கலாம்.

2. அடுத்துப் பார்த்தீங்கன்னா நம்ம மீடியா பைல்ஸ்(Media files) இருக்கு இல்லீங்களா? அதாவது video player.  இந்த மாதிரியான கோப்புகளையும் திறந்து பார்க்கலாம்.  உதாரணத்துக்கு AVI, WMV, FLV, MPG, MOV அப்புறம் MP4. இதுமாதிரியான வகைகளை சப்போர்ட் செய்யும்.

3. அதே மாதிரிப் பார்த்தீங்கன்னா ஆடியோ கோப்பு(audio files) வகைகள்.. அதாவது சப்தம்.. இதில நிறைய வித்தியாசமான கோப்பு வகைகள் (Format of audio) இருக்குங்க.. கிட்டதட்ட எல்லாவித ஆடியோ கோப்புகளையும் சப்போர்ட் செய்யுது.. உதாரணத்துக்கு சொல்லணும்னா MP3, WMV, MID, WAV plus இப்படி இன்னும் நிறைய கோப்பு வகைகளை சப்போர்ட் செய்யுது.

4. அப்புறம் படங்கள்.. அதாங்க images ன்னு ஆங்கிலத்தில் சொல்றோம் இல்ல.. அதுதான்.. இதில கூட நிறைய வகைங்க இருக்கு.. அதாவதுPNG, JPEG, BMP, GIF, TIFF, ICO, RAW இந்த மாதிரி நிறைய வகைகளை சப்போர்ட் செய்யுது. சாதாரணமா நாம பிச்சர் பார்க்கறதுக்கு Image viwer ன்னு நம்ம கம்ப்யூட்டர்ல இருக்கும். அதைவச்சுத்தான் பார்ப்போம்.. ஆனால் இந்த சாப்ட்வேரோ நிறைய வகையான  பைல்களை(open many types files) திறந்து பார்க்ககூடிய வகையில அமைச்சிருக்காங்க..

இன்னும் நிறைய இருக்கு. இதுக்கு மேல எழுதினா பதிவு நீளமா போயிடும்..சுருக்கமா சொல்லனும்னா இன்னும் 80 க்கும் மேற்பட்ட இதுபோன்ற கோப்புவகைகளை இந்த சாப்ட்வேர் மூலமா திறக்கலாம்..

இந்த மென்பொருள் தரவிறக்க சுட்டி

தளத்தைப்பற்றி அறிய சுட்டி

ஆமாங்க.. இப்போ ஒவ்வொரு பைலும் திறக்கனும்னா அதற்கான மென்பொருள் இல்லாம ஒன்னும் பண்ண முடியாது இல்லிங்களா?

ஒரே சாப்ட்வேரை வச்சுட்டு,

  1. (Video)வீடியோ பார்க்கலாம். வீடியோ கோப்புகளை திறந்து பார்க்கலாம்.
  2. டாகுமெண்ட் எடிட் செய்யலாம். டாகுமெண்ட் திறந்து பார்க்கலாம்.
  3. Image viewer ஆகவும் பயன்படுது.
  4. PDF reader ஆக கூட பயன்படுது.
  5. இப்படி நிறைய வகையான கோப்புகளைத் திறக்கலாம். 
  6. இதெல்லாம் ஒரே சாப்ட்வேர் வச்சு செய்யமுடியும்ங்கிறது ஆச்சரியமான விஷயம்தானே..!

இப்ப உங்களுக்குப் புரியுதா?  இந்த Software ரை ஏன் உங்களுக்கு ரெக்மெண்ட் பன்றேன்னு?

பேச்சு வழக்கில் ஒரு வித்தியாசமான நடையில் இப்பதிவை எழுதியிருக்கிறேன். வாசித்துவிட்டு கருத்துகளை எம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.


மற்றுமொரு பயனுள்ள இலவச மென்பொருளை அறிமுகம் செய்யும் பதிவில் சந்திப்போம். நன்றி நண்பர்களே..!! 

RELATED ARTICLES

4 COMMENTS

Comments are closed.

Most Popular

Recent Comments