இத்தளத்தில் துறைவாரியாக படங்களை பிரித்து நம் கண்ணுக்கும் காதுக்கும் விருந்தளித்து வருகிறார்கள்.. இத்தளத்தில் உள்ள நம்மை கவர்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய எத்தனையோ மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கிறது.
அதைத் தரவிறக்கி அப்படியே கணினியில் உள்ள Video Player மூலம் பார்த்துக்கொண்டிருப்போம்.
ஆனால் அதையே கணினி அல்லாத DVD Player -ல் பார்ப்பதற்கு அதற்குத் தகுந்த பார்மட்டிற்கு மாற்ற வேண்டும்.
உங்களிடம் உள்ள யூடியூப் வீடியோக்களை DVD ஆக மாற்றுவதற்கென்றே ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
மென்பொருளின் பெயர்: Wondershare DVD creator
மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி:
இதில் கட்டண மென்பொரும் உண்டு.
கட்டண மென்பொருளுக்கான சுட்டி
DVDயாக மாற்ற செய்முறை:
உங்கள் விரும்பிய யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
பிறகு இந்த மென்பொருளில் உள்ள Import என்ற விருப்பத்தினைப் பயன்படுத்தி உங்களுக்குத் தேவையான youtube வீடியோக்களை ஏற்றிகொள்ளுங்கள்.
வீடியோவை தேர்வு செய்த்தும் உங்களுக்கு கீழ்கண்டவாறு ஒரு பெட்டித் தோன்றும்.
உங்கள் வீடியோபடம் தேர்வானதும் கீழிருக்கும் பட்டையில் வீடியோபடத்திற்கான அளவினைக் காணலாம். மேலும் DVD-யின் கொள்ளளவையும் எத்தனை ஜி.பி. என நிர்ணயித்துக்கொள்ளலாம்.
Menu -வில் எட்டுவித slide-களில் எதையாவது உங்களுக்கு பிடித்தமானதை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
தேர்வு செய்த்தை Preview பார்க்கும் வசதி இருப்பதால் ஒரு முறை முன்னோட்டம் பார்த்துக்கொள்ளலாம்.
உங்கள் டிவிடிக்கு பெயர் ஒன்றையும் கொடுத்துக்கொள்ளுங்கள்.
இறுதியாக Burn என்பதைச் சொடுக்கவும்.
சற்று நேரத்தில் நீங்கள் தேர்வு செய்த சாதாரண, SD, HD வடிவ வீடியோக்கள் DVD ஆக மாற்றம் பெற்று இருக்கும். இப்போது உங்கள் DVD தயார்!
உங்கள் டிவிடி யை ஒரு முறை இயக்கிப் பார்த்து சோதனை செய்துகொள்ளுங்கள்.
நண்பர்களே பதிவு பயனுள்ளதாக இருந்ததா? சந்தேகம் இருப்பின் பின்னூட்டம் வழியாக கேட்கவும். பதிவைப் பற்றி உங்கள் பின்னூட்டங்களையும் எழுதுங்க.நன்றி!
இததானப்பூ தேடிக்கிட்டிருந்தேன் , ஆனால் ட்ரையல் வெர்ஷன் என்கிறார்கள்.
ஆனாலும் நன்றிப்பூ .
நன்றி eepojed! இணையத்தில் தேடிப்பாருங்கள். இதில் உண்மையான மென்பொருளை கிராக் செய்தும் தரவிறக்கும் வகையில் கொடுத்திருப்பார்கள். அங்கும் இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்யலாம். ஆனால் அதனால் வரும் விளைவுகளுக்கு சாப்ட்வேர் சாப்ஸ் தளம் பொறுப்பேற்காது.
ரொம்ப நன்றி நண்பரே !