Friday, January 24, 2025
HomeFree softwareஉங்கள் Folder ன் நிறம்(many colors) மாற்ற colorizer

உங்கள் Folder ன் நிறம்(many colors) மாற்ற colorizer


நீங்கள் பணியாற்றுக்கொண்டிருக்கும் விண்டோசில் போல்டர்களின் நிறம் மஞ்சள் நிறத்திலேயே பார்த்து உங்களுக்கு போர் அடித்து இருக்கும்.

ஒரு மாறுதலுக்கா ஒவ்வொரு போல்டருக்கும் ஒவ்வொரு நிறம் இருந்தால்.. எப்போதாவது இப்படி நீங்கள் சிந்தித்ததுண்டா? ஆம். நண்பர்களே கணினியின் மூலம் எதுவும் சாத்தியமே..

இப்படி உங்கள் folderகளை வண்ணமயமாக்குவதால், குறிப்பிட்ட Folder-ஐ உடனே கண்டுபிடிக்க வசதியாக இருக்கும்.

உங்கள் போல்டரின் நிறங்களை வண்ணங்களாக மாற்ற இச்சிறு மென்பொருள் துணைசெய்கிறது.

மென்பொருளின் பெயர்: Folder Colorizer
தரவிறக்கச் சுட்டி:  Folder Colorizer

குறைந்த கொள்ளளவு கொண்ட இம்மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்(Install).

முடிவில் இதுபோல் ஒரு விண்டோ வரும். அதில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரி கொடுத்து, கீழுள்ளதைப் போல டிக் மார்க் அடையாளத்தை எடுத்துவிட்டு Free Activation என்பதை கிளிக் செய்யவும்.

பிறகு நீங்கள் உள்ளிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு வெரிபிகேஷன் இணைப்பு வந்திருக்கும். அதைக் கிளிக் செய்து verification செய்துகொள்ளுங்கள்.

அவ்வாறு மின்னஞ்சல் வராவிட்டாலும் பிரச்னை இல்லை..

இம் மென்பொருளைப் பயன்படுத்துவது எப்படி?

நிறம் மாற்றவேண்டிய போல்டரின் மீது ரைட் கிளிக் செய்து colorize என்பதைச் சொடுக்கினாலே அதில் எட்டுவித நிறங்கள் கொண்ட போல்டர்கள் காட்டும்.

அதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து உங்கள் போல்டருக்கு வண்ணம் கொடுக்கலாம்.

அதில் உள்ள நிறங்கள் பிடிக்கவில்லை எனில் கீழே இருக்கும் colors என்ற விருப்பத்தை சொடுக்கி உங்களுக்குப் பிடித்தமான நிறத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த நிறத்தில் உங்கள் போல்டர் ஜொலிக்கும். இது ஒரு வித்தியாசமான பயனுள்ள மென்பொருள். நீங்க என்ன நினைக்கறீங்க..???!!


நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்ததா? யாராவது இப்படி போல்டரின் நிறம் மாற்றியிருந்தால் பிரதியுபகாரமாக பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். உங்கள் நண்பர்களுக்கும் சமூக தளங்களில் பகிர்வதன் மூலமாக தெரிவிக்கலாம். நன்றி நண்பர்களே.. மீண்டும் ஒரு பயனுள்ள மென்பொருள் அறிமுக இடுகையில் வழி சந்திப்போம். 

RELATED ARTICLES

1 COMMENT

Comments are closed.

Most Popular

Recent Comments