Monday, December 23, 2024
Homefree antivirus softwareஇலவசமாக VIPRE ஆன்ட்டி வைரஸ் டவுன்லோட் செய்ய

இலவசமாக VIPRE ஆன்ட்டி வைரஸ் டவுன்லோட் செய்ய

இணைய உலகில் எத்தனையோ இலவச மென்பொருட்கள் (Free softwares) கிடைக்கின்றன. அவற்றை விரும்புவதை விட, கட்டண மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கதா என பலரும் இணையத்தில் தேடி பெற முயற்சிக்கின்றனர்.

இலவச மென்பொருள்:

இலவச மென்பொருள் என கூறப்படும் Trail Version Software களில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். அந்த மென்பொருள் தரும் குறிப்பிட்ட அடிப்படை வசதிகள் மட்டும் அதில் இடம்பெற்றிருக்கும். அவ்வாறான மென்பொருட்களில் இருக்கும் வசதியே வாடிக்கையாளர்களை கவர போதுமானதாகவும், கணினிக்கு 80% பாதுகாப்பு அளிக்க கூடியதாகவும் இருப்பதால் “இலவச மென்பொருள்” பெரும்பாலானோரால் விரும்ப படுகிறது.

கட்டண மென்பொருள்: 

100% முழுமையான பாதுகாப்பினை வழங்கிட கட்டண மென்பொருள் சிறந்தது. சிறிய கட்டணம் செலுத்தி பெறும் அந்த மென்பொருளில் வசதிகள் போதுமானவையாக இருக்கும்.

ஆனால், அந்த குறிப்பிட்ட சிறிய அளவு கட்டணத்தயும் செலுத்த முடியாத பலர்,  அதே மென்பொருள் கட்டணமின்றி பெற முயற்சித்த தன் விளைவு “கிராக்ட் சாப்ட்வேர்”.

இதில் 10 சதவிகிதம் மட்டுமே நம்பகத்தன்மை இருக்கும். பெரும்பாலான cracked software களில் வைரஸ், மால்வேர் புரோகிராம்களை தாங்கியவனாகவே கிடைக்கிறது.

அந்த பத்து சதவிகித உண்மையான கிராக் செய்யப்பட்ட மென்பொருட்களை இணையத்தில் தேடி பிடிப்பது கடினமான செயல்.

VIPRE Premium Antivirus

கணினி தகவல் பாதுகாப்பு மற்றும் இணையத்தினூடாக பரவும் வைரஸ் தொல்லைகளிலிருந்த பாதுகாப்பு அளித்திடும் ஒரு அருமையான “செக்யூரிட்டி” மென்பொருள் VIPRE Premium Antivirus. 

இது இலவசமாக கிடைக்கிறது. 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து, கணினியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்திடும்பொழுது இதனுடைய சிறப்பம்சங்களை அனுபவித்து உணரலாம்.

ட்ரையல் பீரியட் முடிந்ததும், அதனுடய முக்கியத்துவம் தெரிந்துவிடும். அதனால் யோசிக்காமல் கட்டண மென்பொருளை வாங்கி விடுவர் என்பதில் சந்தேகமில்லை.

மற்ற மென்பொருட்களில் உள்ள வசதிகளை காட்டிலும் VIPRE ஆன்ட்டி வைரஸ் சாப்ட்வேரில் அதிக வசதிகள் உள்ளன. கீழுள்ள படம் அதிலுள்ள வசதிகளை மற்ற ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்களில் உள்ள வசதிகளுடன் ஒப்பிட்டுக் காட்டுகிறது.

மிகச் சிறந்த இந்த “வைரஸ் எதிர்ப்பு” மென்பொருளை டவுன்லோட் செய்திட சுட்டி:

Download VIPRE Antivius Software

இந்த இணைப்பில் கிளிக் செய்து, அங்கு உள்ள பெட்டியில் இமெயில் முகவரி கொடுத்து, Free Trial Version ஐ டவுன்லோட் செய்திடலாம்.

RELATED ARTICLES

1 COMMENT

Comments are closed.

Most Popular

Recent Comments