Monday, December 23, 2024
HomeFree softwareமால்வேர் தாக்குதலிலிருந்து உங்கள் கணினியை சுலபமாக பாதுகாத்திட உதவும் மென்பொருள்

மால்வேர் தாக்குதலிலிருந்து உங்கள் கணினியை சுலபமாக பாதுகாத்திட உதவும் மென்பொருள்

Malware என்பது ஒரு வகை கணினி வைரஸ். இந்த வைரசின் வேலை கணினியிலிருந்து கொண்டு மற்றவர்களுக்கு தகவல்களை திருடி அனுப்பிக்கொண்டே இருக்கும். இந்த செயல்பாட்டால் கணினியின் வேகம் குறையும்.

free antivirus

கணினி மால்வாரால் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

உங்கள் கணினி இயங்கிக்கொண்டிருந்தால், அதில் இயங்கி கொண்டிருக்கும் புரோகிராம்கள் அனைத்தையும் மூடிவிட்டு ரீஸ்டார்ட் (Restart) செய்திடவும்.

திரும்ப கணினி தொடங்குகையில் விசைப் பலகையில் உள்ள F8 விசையை அழுத்தவும். 

அப்பொழுது தோன்றும் விண்டோவில்  Safe Mode with Networking என்பதை தேர்ந்தெடுத்து Enter விசையை அழுத்தவும்.

பிறகு, வலை உலவியைத் (Browser) திறந்து  முன்பிருந்ததை விட  இணையம் வேகமாக திறந்தால், நிச்சயம் உங்கள் கணினி மால்வேர் வைரசால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறியலாம்.

இந்த மால்வேரை எப்படி அழிப்பது?

இதற்கென உள்ள மென்பொருளைக் (Malwarebytes‘ Anti-Malware ) கொண்டு உங்கள் கணினியில் உள்ள மால்வேரை எளிதாக நீக்க முடியும். மால்வேர்பைட்ஸ்  மென்பொருள் முற்றிலும் இலவசம். கட்டணம் செலுத்தி பெறும் வசதியும் உண்டு.

தரவிறக்கச் சுட்டி:

மால்வேர்  பைட்ஸ் எப்படி பயன்படுத்துவது?

how to use malwarebytes in tamil
  • முதலில் குறிப்பிட்ட இணைய இணைப்பில் சென்று அங்குள்ள Free Download என்ற பொத்தானை அமுக்கவும்.
  • உடனே மால்வேர்பைட்ஸ் உங்கள் கணினியில் தரவிறங்கத் தொடங்கும்.
  • தரவிறக்கம் முடிந்தவுடன், அதை வழக்கம் போல மென்பொருள் நிறுவும் முறையில் நிறுவிக்கொள்க.
  • நிறுவியவுடன் அதைத் துவக்கவும். மால்வேர் பைட்ஸ் துவக்கப் பக்கத்தில் Scan Now என்ற பட்டனை அழுத்தவும்.
  • தொடர்ந்து உங்களது கணினியில் ஏதேனும் வைரஸ் உள்ளதா என ஆய்ந்து முடிவுகளைக் காட்டும். 
  • அதுபோன்ற தீங்கிழைக்கும் வைரஸ் இருப்பின், அவற்றை அழிப்பதற்கான வசதியைப் பயன்படுத்தி அவற்றை அழித்துவிடலாம். 

இறுதியாக உங்களுக்கு இப்படி காட்டும்.

இதுகுறித்த சந்தேகம் ஏதேனும் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments