Monday, December 23, 2024
HomeFree softwareஉங்கள் கணினியைப் பாதுகாக்க ADVANCED SYSTEM CARE Free 5 (100-வது பதிவு..)

உங்கள் கணினியைப் பாதுகாக்க ADVANCED SYSTEM CARE Free 5 (100-வது பதிவு..)

இது நூறாவது பதிவு…

வணக்கம் நண்பர்களே.. இப்போதெல்லாம் தொடர்ந்து பதிவுகள் எழுத முடியவில்லை. நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கும் முடிந்த வரை பதிலளித்துக்கொண்டிருக்கிறேன்(Question and answer). இடைவிடாத அலுவல் காரணமாகவே இத்தகைய சிக்கல்கள். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

பதிவிற்கு வருவோம். நமது தளம் மென்பொருள் கடைக்கூடம்.. அதாங்க Software shops-ல் பயனுள்ள மென்பொருட்களைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறேன். பெரும்பாலானவை இலவச மென்பொருள்களே..

அதிலும் தீங்கிழைக்காத மென்பொருள்களை(Good and usefull softwares)
தேடித்தருவதையே குறிக்கோளுடன் செயல்பட்டுக்கொண்டிருப்பதால் ஒரு சில பதிவுகள் வெளிவர நீண்ட இடைவெளி ஏற்பட்டுவிடுகிறது என்பது உண்மைதான்.

இனி வரும்நாட்களில் அத்தகைய தாமதம் ஏற்படாத வண்ணம் நண்பரின் உதவியுடன் தினம்தோறும் உங்களுக்குப் பயனுள்ள மென்பொருள்களை தேடித்தருவதில் முனைப்புடன் செயல்படும் என்பதை இப்பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

பதிவிற்கு வருவோம்.


உங்கள் கணினியைப் பாதுகாக்க, ADVANCED SYSTEM CARE மென்பொருள் பயனுள்ளதாக அமையும். பாதுகாக்க மட்டுமல்ல கணினியின் செயல்திறனையும்(Performance) மேம்படுத்துகிறது.

உங்கள் கணினியில் உள்ள தேவையற்ற குப்பைப் போன்ற கோப்புகளை நீக்கி(Remove unwanted files, dirty files), உங்கள் கணினியின் செயல்திறனை அதிகரிக்கலாம்.

28MB அளவுக்கு இம்மென்பொருளை தரவிறக்க: http://www.iobit.com/ascdownload.html

மென்பொருளைப் பற்றிய சந்தேகங்களுக்கு பின்னூட்டத்தில்(Comment) தொடர்பு கொள்ளவும். நன்றி நண்பர்களே..!!

RELATED ARTICLES

4 COMMENTS

Comments are closed.

Most Popular

Recent Comments