Sunday, November 10, 2024
HomeFree softwareகம்ப்யூட்டருக்குத் தேவையான அனைத்து மென்பொருள்கள் ஒரே இடத்தில் டவுன்லோட் செய்ய

கம்ப்யூட்டருக்குத் தேவையான அனைத்து மென்பொருள்கள் ஒரே இடத்தில் டவுன்லோட் செய்ய

Updated: 02-02-2017

கம்ப்யூட்டருக்குத் தேவையான அடிப்படை மென்பொருட்கள் அனைத்தும் ஒரே தளத்திலிருந்து டவுன்லோட் செய்துகொள்ளும் வசதியை தருகிறது நினைட் இணையதளம்.

இந்த இணையதளத்தில் கம்ப்யூட்டருக்குத் தேவையான  அனைத்து மென்பொருள்களும் உள்ளன.  உதாரணமாக,

Web Browsers என்ற தலைப்பில் முக்கிய உலவிகளான google chrome, safari , opera மற்றும் Firefox போன்றவைகள் இடம்பெற்றிருக்கின்றன.

Messaging என்னும் தலைப்பில்  தகவல்கள் அனுப்பி பரிமாற பயன்படும் Skype, messenger, pidgin, digsby, google talk, thunderbird, trillan, aim, yahoo புரோகிராம்களும் உள்ளன.

Media என்னும் தலைப்பில் itunes, songbird, hulu, vlc, kmplayer, aimp, foobar200, Winamp, audacity, k-lite codecs, GOM, Spotify, CCCP, MediaMonkey, Quick Time, போன்ற மீடியா தொடர்பான மென்பொருள்களும் இடம்பெற்றிருக்கின்றன.

Runtimes என்னும் தலைப்பில் ஃப்ளாஸ்(Flash), ஃப்ளாஸ் (IE), JAVA, .NET, Silverlight, Air, Shockwave, போன்ற மென்பொருள்களும் காணப்படுகின்றன.

இதேபோல் Documents, Security, File Sharing, Other, Utilities, Compression, Developer Tools என்னும் தலைப்பின் கீழ் அது தொடர்பான மென்பொருள்களும் இடம்பெற்றிருக்கின்றன.

Pick the apps you want

இவற்றில் வேண்டிய மென்பொருள்களின் அருகே உள்ள Check Box ல் டிக் செய்து இறுதியில் இருக்கும் Get Installer என்பதைச் சொடுக்கினால் உங்களுக்குத் வேண்டி மென்பொருள்களனைத்தும் தரவிறங்கி உங்கள் கணினியில் நிறுவப்பட்டுவிடும்.

தளத்திற்கான சுட்டி: http://ninite.com/

Tags: Useful Website, Free software installer, Web installer for PC Software, Ninite Free software downloader.

RELATED ARTICLES

1 COMMENT

Comments are closed.

Most Popular

Recent Comments