இந்த தேடல் இயந்திரம் அல்லது தேடுபொறியில் முதல் இடத்தைப் பெறுவது சந்தேகமே இல்லாமல் கூகிள் சர்ச் என்ஜின்தான்(Google Search Engine). உலகின் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் தேடு இயந்திரம் இது..
இதைப் போன்றே சில முக்கிய தேடிபொறித் தளங்களும் இருக்கின்றன. அவை Yahoo, ASk, மற்றும் Bing ஆகியவை.. இதனுடன் போட்டிப்போட்டு முன்னேற முயற்சி செய்துகொண்டிருக்கின்றன உலகின் மற்ற தேடுபொறிகள்.
இவ்வாறு தொழில்நுட்ப ரீதியாக போட்டிபோட்டுக்கொண்டிருக்கும் தளங்களின் முடிவுகளனைத்தையும் ஒரே தளத்தில் கிடைக்கச் செய்கிறது http://www.soovle.com/ என்ற இந்தத் தளம்.
இந்தத் தளத்தில் Google, yahoo, Wikipedia, YouTube, Answers.com, Bing, Amazon போன்ற தேடுபொறிகளின் முடிவுகளனைத்தையும் ஒரே பக்கத்தில் ஒருங்கிணைத்துக் காட்டுகிறது. நமக்கு வேண்டிய தேடுபொறிகளின் முடிவுகளை கிளிக் செய்து வேண்டிய தளங்களுக்கு சென்று பார்வையிடலாம்.
இந்த அருமையான சேவையை செய்துகொண்டிருக்கும் தளத்திற்கான சுட்டி : http://www.soovle.com/
புதிய தகவல் ! நன்றி நண்பரே !
nice
nice
tnk u .stay updated