Monday, December 23, 2024
HomeFree softwareவிதவிதமான ரிங்டோன்களை உருவாக்க புதிய ringtone maker...

விதவிதமான ரிங்டோன்களை உருவாக்க புதிய ringtone maker…

செல்போன்கள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை இப்போது அபரிமிதமாக வளர்ந்து கொண்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் மூன்று முதல் நான்கு செல்போன்கள் இருப்பதை காண முடிகிறது. ஒருவருக்கு இரண்டு முதல் மூன்று செல்பேசிகளும் வைத்திருப்பதை ஒரு சில இடங்களில் காணமுடியும்.

ஒரு சிலர் அவர்களின் செல்போனில் விதவிதமான ரிங்டோன்கள் வைத்து அசத்துவார்கள். புதிய புதிய பாடல்களை Ringtone வைத்து கலக்குவார்கள்.

Free Ringtone maker for your mobile phone

அதே போன்று நீங்களும் புதுபுது ரிங்டோன்களை வைக்க வேண்டுமா? உங்களுக்காக ஒரு புதிய இலவச மென்பொருள் (Free software)உள்ளது.

கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்து மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இதை நீங்கள் கணணியில் நிறுவத் தேவையில்லை. நேரடியாக இயக்கலாம்.

நிறுவியவுடன் மென்பொருளைத் திறந்து கொள்ளுங்கள். பிறகு ஒரு விண்டோ வரும். அதில் உள்ள Choose a Song from Computer என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.

ரிங் டோனாக மாற்ற வேண்டிய பாடலை தேர்வு செய்து கொள்ளவும். அடுத்து உங்களுக்கு இன்னொரு window திறக்கும். அதில் ரிங்டோனாக மாற்ற விரும்பும் பகுதியை மட்டும் தேர்வு செய்து கொண்டு Next என்ற பட்டனை அழுத்துங்கள்..

அடுத்து உங்களுடைய Ringtone சேமிக்கப்பட வேண்டிய இடத்தை கேட்கும். அதை தேர்வு செய்து விட்டால் போதும், அடுத்த சில வினாடிகளில் உங்களுடைய புதிய ரிங்டோன் ரெடியாகிவிடும்.

இணையதள முகவரி: http://www.musetips.com/downloads/RingtoneMakerSetup.exe

இனி நீங்களும் உங்களுடைய மொபைலில் புது புது ரிங்டோன் வைத்து கலக்குங்க…!!!! நன்றி நண்பர்களே..!!!!  

RELATED ARTICLES

1 COMMENT

Comments are closed.

Most Popular

Recent Comments