
நீங்கள் பேஸ்புக் தளத்தில் ஒரு பத்து குழுமத்தில் சேர்ந்திருக்கிறீர்கள் என்றால் அந்த பத்து குழுமத்திற்கும்(Groups), ஒவ்வொரு குழுமமாக(Groups) சென்றுதான் உங்களது பதிவுகளைப் பகிர்ந்திருப்பீர்கள்.
இந்த பயனுள்ள அப்ளிகேஷனைப் பயன்படுத்த இங்கு செல்லவும்.
- Goto APP என்பதைக் கிளிக் செய்யவும்.
- அடுத்து தோன்றும் பெட்டியில் allow என்பதை கிளிக் செய்து அனுமதியுங்கள்.
- இப்போது Share your Status on Multiple Groups என்ற தலைப்பின் கீழ் ஒரு பெட்டித் தோன்றும்.
- அதில் உங்களுடைய பதிவிற்கான விபரம்,
- பதிவிற்கான இணைப்பு சுட்டி,
- அதற்கடுத்து பதிவில் இடம்பெற்றுள்ள படத்திற்கான இணைப்புச் சுட்டி ஆகியவற்றைக் கொடுக்கவும்.
- இவையனைத்தையும் சரியாக கொடுத்துவிட்டு கீழிருக்கும் Select ALL என்பதில் டிக் மார்க் ஏற்படுத்தவும்.
- இப்போது நீங்கள் இணைந்திருக்கும் அனைத்து Groupsகளும் தேர்வாகி இருக்கும்.
- இறுதியாக அந்தப் பக்கத்தின் கடைசியில் இருக்கும் Post என்ற பட்டனைச் சொடுக்கினால் போதும். உங்கள் விருப்பப்படி நீங்கள் இணைந்திருக்கும் அனைத்து குரூப்களுக்கும் பதிவானது நொடியில் பகிரப்பட்டுவிடும்.
இனி ஒவ்வொரு குரூப்பாகச் சென்று உங்கள் பதிவுகளையோ, கருத்துகளையோ பகிர அவசியமே இல்லை.
இந்தப்பதிவானது ஆங்கிலத்தளமான http://www.usefultricks.in என்ற தளத்திலிருந்து தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிடப்பட்டிருக்கிறது. பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொடர்புகொள்ளவும். நன்றி.
நன்றி நண்பர்களே…!!!
பகிர்வுக்கு நன்றி நண்பா ..!