Friday, January 24, 2025
HomeFree softwareஅடடே..! ஐபோனில் இது புதுசு..!!

அடடே..! ஐபோனில் இது புதுசு..!!

வணக்கம் நண்பர்களே..!
நீங்கள் உடனடியாக ஒரு முடிவெடுத்து, அதைச் செயல்படுத்துவீர்களா? அல்லது ஒரு முடிவெடுக்க குடும்ப நபர்கள், அல்லது நண்பர்களுடன் கலந்துரையாடுவீர்களா?
சரி.. பெரும்பாலான நண்பர்கள் இரண்டாவது வாய்ப்பையே பயன்படுத்திக்கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். தான்தோன்றித் தனமாக முடிவெடுத்து தோல்வியில் முடிவதைக் காட்டிலும், மற்றவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்து பொறுமையாக முடிவெடுப்பதால் வெற்றி அடையலாம். இது பெரும்பாலும் வெற்றியிலேயே முடியும்.

விஷயம் அதுவல்ல.. தற்போதைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் என்னவாக வளர்ந்து நிற்கிறது பாருங்கள்.. உங்களிடம் இருக்க வேண்டியது ஒரே ஒரு ஐபோன்(iPhone) மட்டுமே..!
நீங்கள் ஏதாவது முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியதிருப்பின் உங்கள் நண்பர்களுக்குத் தெரிவிப்பதற்காகவே ஒரு செயலி இருக்கிறது நண்பர்களே..! அதைப் பற்றித்தான் இந்தப் பதிவு..
இந்த செயலியை நீங்கள் தரவிறக்கி நிறுவிக்கொண்டால் போதும். ஏதேனும் சந்தேகம் அல்லது முடிவு எடுக்க நீங்கள் விரும்பும்போது இதன் மூலம் தகவல்கள் உங்கள் நண்பர்களுக்கு அனுப்ப முடியும்.
அவர்களின் பதிலையும் உடனடியாக பெற முடியும். இதற்கு அவர்களிடம் ஐபோன் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சாதாரணமாக ஒரு SMS பெறக்கூடிய செல்போன் இருந்தாலே போதுமானது. நீங்கள் உங்கள் ஐபோனில் இந்த அற்புத செயலி(application) மூலம் தகவல்களை அவர்களுக்கு அனுப்பினால் போதும். அவர்கள் அனுப்பும் பதிலும் உடனடியாக இந்த செயலியில் வந்துவிடும்.
இனி நீங்கள் தயங்காமல் முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். பாடத்தில் ஏதேனும் சந்தேகம் என்றாலும் இந்த முறையைப் பயன்படுத்திய எளிதாக சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள முடியும்.
இந்த பயனுள்ள செயலியைத் தரவிறக்க இங்கு செல்லவும்.
RELATED ARTICLES

1 COMMENT

Comments are closed.

Most Popular

Recent Comments