Monday, December 23, 2024
HomeFree softwareஇணையத்தில் பாதுகாப்பாக உலவ Private Browsing...

இணையத்தில் பாதுகாப்பாக உலவ Private Browsing…

private browsing வணக்கம் நண்பர்களே.. ! இணையத்தில் உலவும்போது பாதுகாப்பில்லை எனில் அவ்வளவுதான். எளிதாக நமது தகவல்களைத் திருடி, மற்றவர்கள் தவறாக பயன்படுத்த முயற்சிக்க கூடும்.
உங்களுடைய சொந்தக் கணினி அல்லாது, மற்றவர்கள் கணினி அல்லது இன்டர்நெட் பிரவுசிங் சென்டர்களில் நீங்கள் Browsing செய்யும்போது எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. இதற்குத்தான் முன்னணி பிரௌசர்களாக Internet Explorer, Google Chrome, Fire Fox போன்ற வலைஉலவிகளில் ஓர் அற்புதமான வசதியைக் கொடுத்திருக்கின்றனர்.

இந்த வசதியின் பெயர்தான் Private Browsing
இந்த வசதியைப் பயன்படுத்தி இணையத்தில் உலவும்போது உங்களுடைய தகவல்கள், உலவியிலோ அல்லது உங்கள் கணினியிலோ சேமிக்கப்படாது.இதனால் மற்றவர்கள் உங்கள் தகவல்களை எளிதாக திருடி எடுத்துப் பயன்படுத்த முடியாது.
இந்த வசதியை ஒவ்வொரு வலைஉலவியிலும் பெறுவது எப்படி எனப் பார்ப்போம்.
நீங்கள் IE (Internet Explorer) உபயோகிப்பாளரென்றால்..

உங்கள் பிரௌசரின் Tools மெனுவில் சென்று In Private Browsing என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது ctrl+Shift+P என்பதை சொடுக்கிச் செல்லவும்.

அவ்வாறு செல்லும்போது உங்களுடைய பிரௌசரின் விண்டோ இவ்வாறு மாறிவிடும். இனி நீங்கள் வழக்கம்போல் வலையில் பாதுகாப்பாக உலவலாம்.
Private Browsing in IE
நீங்கள் Mozila Firefox-உபயோகிப்பாளரென்றால்..
உங்கள் Firefox Browser-ல் Tools மெனுவில் Private Browsing என்பதை கிளிக் செய்யுங்கள். அல்லது Ctrl+shift+P என்பதைச் சொடுக்குங்கள்.
Private Browsing in Firefox
பிறகு தோன்றும் விண்டோவில் பாதுகாப்பாக உலவுங்கள்..
நீங்கள் Google Chrome உபயோகிப்பாளரென்றால்..
வலது மேல்மூளையில் Spanner போன்ற Settings பட்டனைக் கிளிக் செய்து அதில்
New incognito window என்பதை கிளிக் செய்து பயன்படுத்தலாம். அல்லது இதற்கான Short cut key யான Ctrl+Shift+N என்பதை அழுத்தியும் பயன்படுத்தலாம். 
Private Browsing in Google chrome
இவ்வாறு தற்போது புதியதாக வெளிந்துள்ள Safari, Opera போன்ற பல இணைய உலவிகளிலும் Private Browsing வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றனர். நன்றி நண்பர்களே..!!!
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா? 
RELATED ARTICLES

2 COMMENTS

  1. இதுவல்லவா நமக்கு வேண்டும்! எருமை, ச்சீ, அருமை!

    வேண்டிய தகவல். தங்கள் பதிவைப் படிக்காத எனது நண்பர்களுக்கும் இந்த தகவலை தங்கள் சார்பில் பகிர்ந்து கொள்கிறேன்!

Comments are closed.

Most Popular

Recent Comments