Monday, December 23, 2024
HomeTechnologyஉங்கள் கணினியில் போல்டரை மறைக்க 3 ட்ரிக்ஸ்

உங்கள் கணினியில் போல்டரை மறைக்க 3 ட்ரிக்ஸ்

உங்கள் கணினியில் போல்டரை மறைக்கும் ட்ரிக்ஸ்..

உங்கள் கணினியில் ஒரு கோப்புறையை மறைக்க இந்த ட்ரிக் உபயோகமாக இருக்கும். பெரும்பாலானவர்களுக்குத் இது தெரியும். புதியவர்களுக்காக இந்த பதிவு.

ஒரு போல்டரை மறைக்க அந்த போல்டரின் மீது ரைட் கிளிக் செய்து, தோன்றும் விண்டோவில் Properties கிளிக் செய்ய வேண்டும். அதில் கீழே உள்ள Hidden என்ற டிக் பாக்சில் டிக் மார்க்கை ஏற்படுத்திவிட்டு, Apply, OK கொடுத்தால் அந்த போல்டர் மறைந்துவிடும்.

மறைக்கப்பட்ட போல்டரை மீண்டும் தோன்றச் செய்வது எப்படி?

  • Start Button அழுத்தி, கன்ட்ரோல் பேனல் செல்லவும்.
  • அங்கு Appearnce and Personalization என்பதில் கிளிக் செய்யவும்.
  • அதில் Folder Option – ல் Show Hidden files and Folders என்பைத கிளிக் செய்யவும்.
  • அங்கு தோன்றும் பெட்டியில் show hidden files and folders and drives என்பதை கிளிக் செய்து OK கொடுக்கவும்.

show hidden files and folders and drives

அவ்வளவுதான். நீங்கள் மறைத்து வைத்த போல்டர் மீண்டும் தோன்றிவிடும்.

போல்டரை மறைக்க மற்றுமொரு வழி: 

இது சற்று பாதுகாப்பாக இருக்கும். இந்த முறையில் நீங்கள் தேர்வு செய்யும் போல்டரானது முற்றிலும் மறைக்கப்பட்டுவிடும். இந்த முறையில் மறைக்கப்படும் Folder யாராலும் கண்டறிய முடியாது.

போல்டர் இருக்கும் இடத்தை சரியாக நினைவு வைத்து அதை பயன்படுத்த வேண்டும். ஒரு வேளை நீங்களே மறந்துவிட்டால் கூட அந்த போல்டரை நீங்கள் மீண்டும் தேடிப்பெறுவது கடினம்.

யாருமே பார்க்கமுடியாதபடி போல்டர் அமைக்க:

உங்கள் போல்டரின் மீது ரைட் கிளிக் (Right click) செய்யுங்கள். தோன்றும் விண்டோவில் Properties என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது தோன்றும் விண்டோவில் General, Sharing, Security, Previous version, மற்றும் Customize என்ற வரிசையில் Tabs இருக்கும். அதில் Customize என்பதை கிளிக் செய்தால் கீழ்க்காணும் விண்டோ திறக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ளது போல இருக்கும்.


அதில் Change Icon என்பதைக் கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் இவ்வாறு எந்த வொரு ஐகானும் இல்லாமல் தோற்றமளிக்கும். மூன்று வெற்று இடங்கள் இதில் இருக்கும். இதில் ஏதாவது ஒன்றில் கிளிக் செய்து ok கொடுத்துவிடுங்கள்.

இப்போது Apply என்பதை Click என்பதை கிளிக் செய்து ok கொடுங்கள்.. இப்போது உங்கள் போல்டரானது எந்த ஒரு ஐகானும் இல்லாமல் வெறும் பெயருடன் மட்டுமே இருக்கும்.

இந்தப் பெயரும் வேண்டாம்… முழுமையாக மறைக்க வேண்டும் என்றால்… ஐகான் இல்லாத போல்டரை செலக்ட் செய்துகொள்ளவும். பிறகு F2 என்பதை கிளிக் செய்யுங்கள். போல்டருக்கு Rename கொடுக்க ஷார்ட் கட் F2. எனவே F2 என்பதை கிளிக்செய்தால் பெயர்மாற்றலாம்.

உங்கள் கணினியில் உள்ள விசைப்பலகையில் Alt விசையை அழுத்திக்கொண்டு 0160 என தட்டச்சு செய்யவும். உடனே பெயரானது மறைந்துவிடும். இப்போது முற்றிலும் உங்கள் கோப்புறை மறைக்கப்பட்டுவிடும்.

போல்டர் இருக்கும் இடத்தில் கிளிக் செய்துபார்த்தால்தான் போல்டர் செலக்ட் ஆகும். ஆனால் போல்டர் ஐகானோ, போல்டரின் பெயரோ கண்ணுக்குத் தெரியாது. இதனால் பலரும் பயன்படுத்தும் பொதுக் கணினிகளில் உங்களுடைய கோப்புகளை மற்றவர்கள் அவ்வளவு சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாது.
  
இந்தப் பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்ததா? 

உங்கள் கருத்துகளை மறக்காமல்…பகிருங்கள்…

RELATED ARTICLES

10 COMMENTS

  1. வணக்கம் நண்பரே!

    உங்களுடைய பதிவுகள் இலங்கைத்தமிழர்கள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் நிர்வாகியாவதன் மூலம் இணைக்கலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை rss4sk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்து நிர்வாகியாகுங்கள். கூகிள்சிறியில் சேர்க்கப்படும் பதிவுகள் தன்னியக்கமுறையில் டிவிட்டர்,பேஸ்புக்,லிங்டின் போன்ற சமூக தளங்களில் பிரசுரமாகி அதிக வாசகர்களை சென்றடையும்.

    தங்கள் மின்னஞ்சலை எதிர்பார்த்து
    யாழ் மஞ்சு

  2. hidden koduthu maraithu vitten..aanal antha folderai thirumba yedupathu epadi???antha folder marainthathal unhidden koduka mudiya villai..plz ans………

  3. மீண்டும் போல்டர் இருக்கும் இடத்தை கிளிக் செய்து, அதற்கு ரீநேம் செய்துவிடுங்கள். அவ்வளவுதான்.. போல்டர் இருக்கும் இடத்தை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

Comments are closed.

Most Popular

Recent Comments