Monday, December 23, 2024
HomeTechnologyஹேக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை மீட்டெடுக்க..

ஹேக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை மீட்டெடுக்க..

How to retrieve hacked  facebook account

பேஸ்புக்….

பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை என்னத் தெரியுமா? சுமார் 800 மில்லியன் பயனர்கள். இத்தனைப் பேர்கள் பயன்படுத்தும் சமூகதளமான பேஸ்புக்கில் எத்தனை கோல்மால்கள் நடக்கிறது தெரியுமா? சுமார் 700,000 த்திற்குமேலாக என பேஸ்புக் தனது அறிவிக்கையில் அறிவித்தருக்கிறது.

சரி. இந்த தகவல்கள் எல்லாம் எதற்காக என கேட்கிறீர்களா? இருக்கு நண்பர்களே.. நிச்சயம் நீங்களும் ஒரு பேஸ்புக் பயனாளராக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இணையத்தில் ஒரு கொம்பன் இருப்பானானால் அவனுக்கும் ஒரு கொம்பாதி கொம்பன் இருக்கிறான்.

நாம் எச்சரிக்கையாக இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு ஒரு புதிய பாஸ்வேர்ட்டை தேர்ந்தெடுத்து கொடுத்து வைத்திருப்போம். ஆனால் அவற்றையெல்லாம் சர்வ சாதாரணமாக புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திருடிவிடுகிறார்களாம். இதை நான் சொல்ல்லீங்க… Face Book தான் சொல்கிறது.

சரி.. உங்க பேஸ்புக் கணக்கை யாரோ hack பண்ணிட்டாங்க.. உங்களோட கணக்கை முடக்கிட்டாங்க.. என்ன செய்ய?

அதற்கான வழிமுறைகளை சொல்வதுதான் இந்த பதிவு.. அதற்குத்தான் இத்தனை நீட்டி முழக்கிட்டு வர்றேன். பேஸ்புக் இப்படிப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்க வழிமுறைகளை FACE BOOK தளத்திலேயே கொடுத்திருக்காங்க..
நேரடியாக பேஸ்புக் தளத்திற்கு செல்லாமல் இந்த இணைப்பில் செல்லுங்கள்.

https://www.facebook.com/hacked

கீழே படத்திலிருப்பதைப் போன்ற பெட்டித் திறக்கும். அதில் My Account is compromised என்பதை அழுத்தவும்.

அடுத்து ஒரு பெட்டித் திறக்கும்.

அதில்…

உங்கள் பேஸ்புக் கணக்கைத் திரும்ப பெற பல வழிகளைக் கொடுத்திருப்பார்கள். உங்களுக்குப் பிடித்தமான வழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். இப் பதிவில் இ-மெயில் மூலம் பேஸ்புக் கணக்கை மீட்பது பற்றிப் பார்ப்போம்.

அதில் உங்கள் E-mail id கொடுத்து Search என்ற பட்டனை அழுத்தவும். இப்போது மற்றொரு பெட்டித் தோன்றும். அதில் நீங்கள் உள்ளிட்ட இ-மெயில் கணக்கில் உள்ள பேஸ்புக் கணக்கைக் காட்டும். அதில் உங்களுடைய பேஸ்புக்கிற்கான இறுதியாக நீங்கள் பயன்படுத்தி Password -ஐக் கொடுங்கள்.

தற்போது continue என்பதை அழுத்துங்கள். இப்போது மற்றுமொரு பெட்டித் தோன்றும். இதில் உங்கள் கணக்கை மீட்க Send codes and login to gmail என்பதை அழுத்துவதன் மூலம் உங்கள் மின்னஞ்சலுக்கு தேவையான கோடிங்கை அனுப்பிவிடும்.

Send codes and login to gmail என்பதை அழுத்திவிட்டீர்களா? இப்போது மேல் எழுந்து வரும் பெட்டியில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியையும், மின்னஞ்சலுக்கான பாஸ்வேர்டையும் கொடுத்து Allow என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்போது உங்களுக்கான பேஸ்புக் அக்கவுண்டை மீட்பதற்கான புதிய பாஸ்வேர்ட் கொடுப்பதற்கான பெட்டித் தோன்றும். அதில் NEW PASSWORD, CONFIRM PASSWORD என்பதில் ஒரேமாதிரியான புதிய பாஸ்வேர்ட் கொடுத்து , இறுதியாக Change பாஸ்வேர்ட் என்பதைச் சொடுக்கிவிடுங்கள். முடிந்தது. இனி உங்கள் பேஸ்புக் கணக்கைத் மீளத் திரும்ப பெற்றுவிட்டீர்கள்..

உங்களுக்கோ.. அல்லது உங்கள் நண்பர்களுக்கு இவ்வாறு பேஸ்புக் கணக்கு திருடுபோனாலோ, HACk செய்யப்பட்டாலோ இந்த வழிமுறையைப் பின்பற்றுங்கள்.. நிச்சயம் உங்கள் பேஸ்புக் கணக்கை திரும்ப பெறமுடியும். என்ன நண்பர்களே.. இந்தப் பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்ததா?

கருத்துரையில சொல்லுங்க….

நன்றி நண்பர்களே..!

RELATED ARTICLES

3 COMMENTS

Comments are closed.

Most Popular

Recent Comments