Sunday, January 12, 2025
Homecomputer tipsகம்ப்யூட்டர் வேகமாக துவங்கிட | Quick Startup

கம்ப்யூட்டர் வேகமாக துவங்கிட | Quick Startup

திடீர்னு என்னுடைய கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆக ரொம்ப நேரமெடுத்துக்கொண்டது.  எனக்கு ஒரு சந்தேகம்.. நல்ல configuration உடைய என்னுடைய கணினிக்கு இன்று என்ன வந்தது?

என்னுடைய பொறுமையை சோதித்தது. வெறுப்பில் கணினியை அணைத்துவிட்டு சென்று விட்டேன்.

சிறிது நேரம் கழித்து இதற்கு என்னதான் வழி? என சிந்தித்தவாறு இணையத்தில் தேடினேன்.  இணையத்தில் அதற்குரிய வழி ஒன்றை கண்டுபிடித்தேன். உங்களுக்கும் பயன்படும் என்று பகிர்கிறேன்..

உங்களுக்கு இப்படிப்பட்ட அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா? நன்றாக, விரைவாக Start ஆன கம்ப்யூட்டர், மெதுவாக Start ஆகி கடுப்பைக் கிளப்பியிருக்கிறதா? இதோ அதற்கான தீர்வு..!

  1. முதல்ல NotePad திறந்துக்கோங்க.அதுல..
  2. del c:windowsprefetchntosboot-*.* /q அப்படின்னு தப்பில்லாம் அடிங்க..
  3. இப்படி டைப்பண்ணினதை ntosboot.bat ங்கிற பேர்ல C: யில சேமிச்சு வச்சுங்கோங்க.
  4. அப்புறம் Start பட்டன் கிளிக் பண்ணுங்க..
  5. அது Run கொடுங்க.. இல்லேன்னா சுலபமான வழி ஒன்னு இருக்கு. windows start button + R கிளிக் பண்ணீங்கன்னா Run ஓப்பனாகிக்கும்.
  6. Run box -ல gpedit.msc அப்படின்னு அடிங்க..
  7. அடுத்த வர்ற Computer Configuration னை double click பண்ணுங்க..
  8. அப்புறம் Windows Settings -ஐ double click குங்க..
  9. அப்புறம் Shutdown ன்னு ஒரு ஆப்சன் இருக்கும். இருக்கா? ம்.. அதை கிளிக் பண்ணுங்க..
  10. அப்புறம் புதுசா ஒரு பெட்டி வரும். அதில் இருக்கிற Add button கிளிக் பண்ணுங்க..
  11. அப்புறம் அங்கிருக்கிற Browse பட்டனை கிளிக் பண்ணி இதுக்கு முன்னாடி நாம ntosboot.bat ங்கிற ஒரு பைலை சேமிச்சோம் இல்லையா? அதை திறந்துங்கோங்க..
  12. திறந்துட்டீங்களா? இப்போ ஓ.கே. கொடுங்க.. மறுபடியும் Apply கிளிக் பண்ணிட்டு ஓ.கே கொடுத்துடுங்க..
  13. மறுபடியும் ரன் (Run)போங்க.. அதில devmgmt.msc ன்னு தட்டச்சு செஞ்சு enter தட்டுங்க..
  14. அப்புறம் வர்ற விண்டோவில IDE ATA/ATAPI controllers ஒன்னு இருக்கும். அதை டபுள் கிளிக் பண்ணுங்க.. அதுல Primary IDE Channel ன்னு இருக்கும். இருக்கா? அதில ரைட்கிளிக் பண்ணுங்க.. properties போங்க.. அதுல Advanced Settings கிளிக் பண்ணி none கொடுங்க..
  15. அதுக்கடுத்து Secondary IDE channel ஒன்று இருக்கும். இதிலேயே முன்ன செஞ்ச மாதிரி Advanced Settings கிளிக் பண்ணி none கொடுங்க..

இதையெல்லாத்தையும் நீங்க ஒரு ஸ்டெப் விடாம சரியா செஞ்சீங்கன்னா.. உங்களுக்கு மாற்றம் தெரியும்.. எல்லாத்தையும் சரியா முடிச்சிட்டீங்களா? இப்போ உங்களோட கம்ப்யூட்டரை Rboot பண்ணுங்க.. அதாவது restart கொடுங்க.. இப்போ சீக்கிரமா உங்களோட கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும்..

என்னது ஆகலியா? அப்படின்னா மறுபடியும் ஆரம்பத்திலிருந்து செஞ்சு பாருங்கள்.. ஒரு ஸ்டெப் விடாம, தப்பில்லாம செஞ்சா நிச்சயம் உங்களோட கம்ப்யூட்டர் முன்பை விட வேகமாக ஸ்டார்ட் ஆகும்..

என்னோட கம்ப்யூட்டரை இப்படிதான் வேகமாக ஸ்டார்ட் பண்ணினேன்.. நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.. அதுக்காக நல்லா இயங்குகிற கம்ப்யூட்டரில் எல்லாம் இப்படி செய்து பார்க்க கூடாது.. சரிங்களா?

RELATED ARTICLES

3 COMMENTS

  1. விளக்கமா சொல்லிக்கிட்டே வந்தீங்க… நன்றி..
    அதென்ன… ///
    நல்லா இயங்குகிற கம்ப்யூட்டரில் எல்லாம் இப்படி செய்து பார்க்க கூடாது /// என்று…
    அதெப்படிங்க கண்டுப்பிடிக்கிறது…? ஹா… ஹா.. நன்றி நண்பரே …

  2. விரைவாக பூட் ஆகும் கம்ப்யூட்டரில் தேவையில்லாமல் இதை ஏன் செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பதற்காகவே அவ்வாறு கூறியிருந்தேன்.. ஹா..ஹா…! சிலர் நன்றாக, விரைவாக செயல்படும் கணினியில் கூட செய்துபார்க்கலாமே என்று செய்வார்கள்.. அத்தகையவர்களுக்கு கொடுத்த குறிப்பு அது.. வருகைக்கு மிக்க நன்றி தனபாலன் அவர்களே..! தங்களின் தளத்தை நான் வாசித்திருக்கிறேன். வாழ்க்கைக்கு தேவையான பதிவுகளை பதிவிடுகிறீர்கள்.. தொடருங்கள் உங்கள் சேவையை..!

Comments are closed.

Most Popular

Recent Comments