Increase your system speed |
வாங்கிய புதிதில் கணினியில் வேகம் சூப்பராக இருக்கும்..அதுவே நாளாக நாளாக குறைந்துவிடும்.. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
இந்த காரணங்களை எல்லாம் மற்றொரு பதிவில் பார்ப்போம். தற்போது மென்பொருள் எதுவும் பயன்படுத்தாமலேயே கணினியின் வேகத்தை அதிகரிப்பது எப்படி? என்பதைப் பார்ப்போம்.
நீங்கள் விண்டோஸ் XP பயன்படுத்துபவர்கள் என்றால்…
Start=>Programs=>Run
நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள் என்றால்…
Start=>Programs=>Search=>Run தேர்ந்தெடுக்கவும்.
ஆக… நீங்கள் Run Window வைத் திறக்க வேண்டும். இதற்கு குறுக்கிவிசை Star+R அழுத்தினாலே Run Window திறந்துகொள்ளும். இப்போது அதில் gpedit.msc என தட்டச்சிடுங்கள். புதிதாக ஒரு window open ஆகும். அதில்
Computer Configuration==>Administrative Templates==>Network==>Qos Packet Scheduler==>Limit Reservable Bandwidth என்ற வரிசையில் செல்லவும். இப்போது Not Configured என்பதில் டிக் மார்க் இருப்பதை கவனியுங்கள்.
இதை Enable என மாற்றிவிட்டு , Bandwith -ஐ 20 லிருந்து 0 க்கு மாற்றம் செய்துவிடுங்கள்.. அவ்வளவுதான்.. இனி உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்து பரிசோதித்துப் பாருங்கள்.. கணினி முன்பைவிட வேகமாக இயங்குவதை உணர முடியும்.
இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்ததா? கருத்துரையில் சொல்லுங்கள்.. நன்றி நண்பர்களே..!
தகவலுக்கு நன்றி!
பயனுள்ள தகவல்… நன்றி…
என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?
பயனுள்ள தகவல்… நன்றி…
அது ஏங்க '0' போடுறோம்? நான் வேற ஒரு பதிவுல படிச்சேன், '4' போடணும்னு. அவர்ட்டயும் கேட்டேன், அவரும் இதுவர சொல்லல!
This comment has been removed by the author.
windows cannot find gpedit.msc என வருகிறது
தங்களின் இயங்கு தளத்தில் ஏதேனும் பிரச்சினை இருக்கலாம். முதலில் தங்கள் இயங்குதளம் விண்டோஸ் XP / 7 (அநேக மக்கள் பயன்படுத்துவது) எனில், அது PROFESSIONAL / ULTIMATE என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இல்லையெனில் அந்த வசதி கிடைக்கப் பெற மாட்டாது. அதற்கான தகுதி எனில், எதற்கும் வைரஸ் எதிர்ப்பானை இயக்கி, வைரஸ் உள்ளதா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்!
முக்கியமான ஒன்று, இந்தப் பதிவின் நோக்கம் WIRED CONNECTIONS'க்கு மட்டுமே எனத் தோன்றுகிறது. DATA CARDS அமைப்புகளுக்குப் பொருந்தாது போலும்! 🙂