இன்றைய பதிவுக்கு வருவோம்.. இந்த வார்ப்புருவில் இருக்கும் அனைத்து Menu விற்கான பதிவுகளை இனி சாப்ட்வேர் சாப்ஸ்-ல் நீங்கள் எதிர்பார்க்கலாம்.
முதலாவதாக இருக்கும் Ipad என்ற மெனுவிற்கான பதிவை இன்று பார்ப்போம்.
The NesApple Ipad |
ஐபேட் என்றால் தெரியாதா எங்களுக்கு? என்கிறீர்களா..? நீங்கள் Ipad என்றால் என்ன என்று தெரிந்து வைத்திருப்பீர்கள்.. ஆனால் புதியவர்களுக்கு.. புதிதாக வரும் வாசகர்களுக்கு, Ipad -ஐப் பற்றி அடிப்படையே தெரியாதவர்களுக்கு இந்த கேள்வியும் அதற்கான பதிலும் உதவும்.
ஐபேட் என்பது மனிதனுடைய தேவைகளை மிக விரைவாக பூர்த்தி செய்ய கண்டுப்பிடிக்கப்பட்ட Electronic சாதனங்களில் ஒன்று. இதில் முக்கியக் கண்டுபிடிப்பான கணினியின் ஒத்தப் பண்பைப் பெற்று வழிமுறையில் தாயாரிக்கப்பட்டதுதான் ஐபேட். கம்ப்யூட்டர் டிஜிட்ஸ் போன்ற தரவுகளை உள்வாங்கி, முறையாக கோர்த்து உருவாக்கப் பட்ட Instructions களை செயல்படுத்தும் ஒரு ஏவளனாக இருப்பதுதான் ஐபேட்(Ipad). Laptop, Note Book computer, Personal Computer என்ற வரிசையில் புதிதாக வெளிவந்து, மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதுதான் இந்த Ipad. இதற்கு தமிழில் “சிலேட்டுக் கணினி” என பெயர் வைத்துள்ளனர்.
Ipad – பெயர்க் காரணம்:
PDA என்ற சொல் முதன் முதலாக Las Vegas என்ற இடத்தில் நடைப்பெற்ற Consumer electronic Exhibition – ல் ஆப்பிள் கம்ப்யூட்டர் (Apple Computer) நிறுவனத்தின் Chief Executive Johns Kelly யால் Apple Newton என்று அழைக்கப்பட்ட உலகின் முதல் Palmtop அறிமுகம் செய்யப்பட்டது.
இதற்குப் பிறகுதான் Nokia நிறுவனம் 1996-ம் ஆண்டு 9000 communicator என்ற முதல் PDA செயல்திறன் கொண்ட கையடக்கத் தொலைபேசியை அறிமுகப்படுத்தியது.
இந்த PDA செயல்திறன் கொண்ட தொலைப்பேசிகள் காலப்போக்கில் மனிதனின் ரசனைக்கும், தேவைக்கும் ஏற்ப பல்வேறு வடிவங்களுடன் மாற்றி அமைக்கப்பட்டு Smart Phone என்ற வடிவில் மார்க்கெட்டில் விற்பனைக்கு விடப்பட்டு, தற்போது பயன்பாட்டில் உள்ளது.
பல மில்லியன் கணக்காக இந்த Smart Phone-கள் விற்பனையில் சாதனைப் படைத்து வருகிறது. இதுபோலவே தொலைபேசி செயல்திறன் அற்ற PDA வகை கணினிகளும் ஐந்து மில்லியனுக்கும் மேலாக விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது. தொழில்நுட்பத்தின் அதி நவீன வளர்ச்சியைப் பார்த்தீர்களா?
இந்த வீடியோவையும் பாருங்க:
PDA -க்களின் சிறப்பியல்புகள்:
இதில் DATA க்களை உள்ளீடு செய்வதற்கான டச் ஸ்கிரீன்(Touch Pad), Memory Stick, Memory Slot, blue Tooth, போன்றவைகள் இடம்பெற்றிருக்கின்றன. இதோடு மட்டுமல்லாமல், Address Book, E-Mail, Memo, Web Browser, To Do List, Appoinment Calendar ஆகிய கூடுதல் வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
மேற்கூறிய வசிதகளை கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்:
1. Touch Screen
பயனாளரின் எளிதான பயன்பாட்டுக்காகவே(user Interaction ) இந்த டச் ஸ்கிரீன் (Touch Screen) இதில் அமைக்கப்பட்டுள்ளது. குறுக்குவிசைகள் இதில் குறைவு. (One or two shortcuts). இதிலுள்ள முக்கியமான, எளிதான பயன் இதிலுள்ள தொடுதிரையில் விரல்களால் தொட்டு நகர்த்துவடன் மூலமே இந்த Apps எளிதாகப் பயன்படுத்தலாம் என்பதுதான்.
the new ipad |
2. எழுத்துக்களை உள்ளிடுவதற்கு:
- Ipad -ல் எழுத்துகளை உள்ளிடுவதற்கு Virtual keyboard உள்ளது. இதில் Screen எழுத்துக்கள் தெரியும். எழுத்துக்களை தொடுவதன் மூலம் எழுத்துக்கள் உள்ளிடப்படுகிறது.
- BlueTooth மற்றும் Infrared மூலம் இணைக்கப்பட்ட External keyboard மூலமும் எழுத்துகளை உள்ளிடலாம்.
- எழுத்துகளை கைவிரால் எழுதினால் அது தானாகவே எழுத்துகளைப் புரிந்துகொண்டுவிடும். இந்த முறைக்கு Hand Writting Recognition என்று பெயர். இவ்வாறு நாம் Screen-ல் எழுதுவதை PDAக்கள் எழுத்துக்களாக மாற்றுகின்றது. புதிதாக வந்துள்ள Apple iPhone, Apple I pad touch, LCD R போன்றவைகள் தொடுதிரை(Touch Screen)நுட்பத்துடன் வெளிவந்து விற்பனை செய்யப்படுகிறது.
புதிய PAD க்களில் Wireless Connectivity வசதியுடன் வெளிவருகிறது. இதில் keyboard, GPS, Head Set போன்றவற்றை இணைக்கும் வசதிகள் உள்ளன. Apple Ipad touch -ல் கூடுதலாக வசதிகள் இருக்கின்றன. இதில் wireless wide area networks வசதி உள்ளடங்கி இருப்பதால் எளிதாக இணைப்புகளை ஏற்படுத்தலாம்.
ipad, Iphone , ipad touch ஆகிய சாதனங்களிலிருந்து wireless மூலம் Data மற்றும் கோப்புகளை (Files) டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கு (Desktop computer) பரிமாறும் வசதியும் உள்ளது. இந்த வசதிக்குப் பெயர் Wireless synchronization .
வாகனத்தை செலுத்துவதற்கு தேவையான வழிமுறைகளை திரையில் காட்டும் சாதனமாகவும்(GPS)இது பயன்படுகிறது. தற்போது உற்பத்தி செய்யப்பட்டு வரும் Deluxe Bus களில் இவைப் பொருத்தப்பட்டு விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த தொழில்நுட்பத்திற்கு பெயர் Auto Mobile Navigation.
அரசுத்துறை நிறுவனங்கள், சில வர்த்தக நிறுவனங்கள் EnterPrise Digital Assistants என்றழைக்கப்படும் PDA க்களை பயன்படுத்துகிறார்கள். இதில் வர்த்த தேவைகளுக்குப் பயன்படும் பார்கோட் ரீடர்(Bar code Reader), Magnetic Stripe Card Reader, Identification Reader போன்ற இயல்களையும் பெற்றிருக்கின்றன. கூடுதலாக ACCESS CONTROL SECURITY, BAGGAGE DELIVERY, CAPITAL ASSET MAINTENANCE, HOSPITAL RECORD KEEPING, PARKING ENFORCEMENT, READING, RESTAURANT WIRELESS WAITRESS, UTILITY METER , WARE HOUSE, SUPPLY LINE CHAIN MANAGEMENT இதுபோன்ற தேவைகளுக்கும் பயன்படுகின்றது.
Ipad -ல் உள்ள வசதிகள்
the new ipads |
PALM TOP COMPUTER அல்லது PERSONAL DIGITAL ASSISTAN (PDA) என்ற வகையைச் சேர்ந்தது இந்த ஐபேட். இது சாதாரணமாக நாம் பயன்படுத்தும் கணினியின் தோற்றத்தை கொண்டிருப்பதால், இதில் Web browser, Medai Player, Internet, Intranet, Wide area networks, WiFi போன்ற வசதிகளை இதனுள்ளே கொண்டுள்ளது.
மருத்துவத்தில் பயன்பாடு(Ipad in medicine):
நோயாளிகளின் கடந்த கால நோய்கள் தொடர்பான Data-க்களைப் பெற்று, அதற்கேற்ப அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், அதற்கேற்ற மருந்து, சிகிச்சை விபரம், ஆகியவற்றை பதியவும், சிகிச்சை முறைகளை ஆராயவும் பயன்படுகிறது. குறிப்பாக Sensor Web Technology உதவியோடு உடல் உணர்வலைகளின் வழியாக உடல்நிலையைக் கண்காணிக்கவும், நீரிழிவு, இழுப்பு (Epilepsy) போன்ற நோய்களின் அறிகுறிகளை கண்டிறந்து மருத்துவ ஆலோசனைகள் உடனடியாக பெற்றுக்கொள்ளவும் இந்த தொழில்நுட்பம் பயன்படுகிறது. மேலும் மருத்துவ செய்திகள் (Medical News), Drugs Data page போன்றவற்றிற்கும் இந்த PDAக்கள் பயன்படுகிறது.
கல்வித்துறையில் Ipad:
தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி கல்வித்துறையிலும் கோலோச்சுகிறது. ஆசிரியரின் உரையை தட்டச்சிடவும், விரைவுரையாளர் கூறும் விரிவுரையை பதிவு செய்து வைக்கவும், தேவையானபோது மீண்டும் அதை கேட்கவும், இத்தகைய தொழில்நுட்பங்கள்(PDA) பயன்படுகிறது. இதுமட்டுமல்ல பாடநூல் சுமைகளை குறைக்கும்பொருட்டும், இணையத்தின் வழியாக தற்போது பாடநூல்களை வெளியிடுகின்றனர். தேவைப்படுவோர் இணையத்தில் தரவிறக்கம் செய்து இந்த தொழில்நுட்பத்துடன் இயங்கும் ஐபேடில் பதிந்துகொண்டு பயன்படுத்துகின்றனர். இதனால் பாடநூல் சுமை குறையும்.
ஆப்பிள் IPAd லிலும் E-book எனப்படும் இணைய நூல்களை, சாதாரணமாக நாம் பாட புத்தகங்களை திருப்புவதுபோல Touch sCreen விரலால் திருப்பலாம். எழுத்துக்களைப் பெரிதுப்படுத்திப் பார்ப்பது, Dictionary, word processing, Encyclopedia இதுபோன்ற வசதிகளையும் உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ளது.
பொழுது போக்கு அம்சங்கள்:(Entertainment in Ipad)
Mp3 Player இதில் உள்ளடக்கியுள்ளதால் இசை விரும்பிகளுக்கும் ஏற்றது. விளையாட்டுத் துறையிலும் இது பயன்படுகிறது. பார்முலா 1 போட்டிகளில் பங்குபெறுவோர்கள் வேகம், தூரம், நேரம் ஆகியவற்றை கணிக்க இதைப் பயன்படுத்துகிறார்கள். மேலும் Breathing gas mixer, decompression, under water divers போன்றவற்றிற்கும் PDA க்கள் பயன்படுகின்றன.
சாதாரண கணினிகள், லேட்டாப்களைவிட எடை, அளவு, செயல்திறன் ஆகிவற்றில் சிறப்பாக செயல்படுகிறது. இவற்றிலிருந்து ஒரே ஒரு வேறுபாடு optical Drive இல்லாததுதான். CD, DVD ஆகியவைற்றப் பயன்படுத்த முடியாத ஒன்றே இதிலிருக்கும் குறைபாடு. ஆப்பிள் நிறுவன தயாரிப்பான IPOD தற்போது விற்பனையில் விண்ணைத் தொட்டுக்கொண்டிருக்கிறது.
இத்தகைய ஆப்பிளின் ஐபேடில் ELECTRONIC MAIL, PHOTO IMAGES, VIDEOS, YOUTUBE, IPAD, I TUNES, NOTES, MEMO, CALENDER, CONTACTS,PRINT GAME CENTRE, I BOOKS போன்ற மேலதிக சிறப்பு வசதிகளையும் இதில் அமைத்துக்கொள்ளலாம். இத்தனை வசதிகளைக் கொண்ட IPad யாரேனும் விரும்பாமல் இருக்க முடியுமா என்ன?
என்னங்க கிளம்பிட்டீங்க…ஐபேட் வாங்கவா? சரி வாங்கிறதும் வாங்கறீங்க நல்லதா APPLE IPAD வாங்கிடுங்க.. இதுலதான் நிறைய லேட்டஸ்ட் விஷயங்கள் அடங்கியிருக்கு…!
ஐபேட் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொண்ட நீங்கள், புதிய நுட்பத்துடன் கூடிய அலைபேசி இயங்குதளமான ஆண்ட்ராய்ட் பற்றி அறிய, “ஆண்ட்ராய்ட் என்றால் என்ன? அது எப்படி இயங்குகிறது?” என்ற இப்பதிவை வாசித்து அறிந்துகொள்ளுங்கள்.
நன்றி நண்பர்களே..!
பகிர்வுக்கும் விளக்கத்திற்கும் மிக்க நன்றி!
தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி
வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!
தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்…..
ஆகஸ்ட் – 26-ல் சென்னை மாநகரில்…..
அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்…..
மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
95666 61214/95666 61215
9894124021
விரிவான விளக்கத்திற்கு நன்றி…
புதிய வார்ப்புரு நன்றாக உள்ளது…
தொடருங்கள்… வாழ்த்துக்கள்… நன்றி…
மிக அற்புதமான பதிவு.