Monday, December 23, 2024
HomeAndroidஆண்ட்ராய்ட் என்றால் என்ன? ஆண்ட்ராய் மொபைல்களில் அது எப்படி செயல்படுகிறது?

ஆண்ட்ராய்ட் என்றால் என்ன? ஆண்ட்ராய் மொபைல்களில் அது எப்படி செயல்படுகிறது?

வணக்கம் நண்பர்களே.. கடந்த பதிவில் Ipad என்றால் என்ன என்று பார்த்தோம். படிக்காதவர்கள் இணைப்பைச் சொடுக்கு முழுவதும் படித்துவிடுங்கள். தற்போது வளர்ந்துவரும் தொழில்நுட்பத்துறையில் மிகவும் முன்னணியில் இருப்பது மொபைல்துறை என்றால் அது மிகையாகாது. காரணம்.. கடந்த பதிவில் சொன்னதைப் போன்றதுதான்.. போட்டி. வாடிக்கையாளர்களை நிறுவனங்கள் போட்டி போட்டு தன்னுடைய தயாரிப்புகளை சந்தையில் விற்பனைக்கு வைக்கின்றன.

google android application
ஆண்ட்ராய்ட் இயங்குதளம்


நம்முடைய இளைஞர்களும் தினம் ஒரு புது மாடல் என்று புதிதாக புறப்பட்டு வரும் புதிய மாடல் வகைப் போன்களை வாங்கி மகிழ்ச்சியடைகிறார்கள்.

எத்தனையோ வித்தைகளை இணையத்தில் செய்து தற்போது முன்னணயில் இருக்கும் கூகிள் நிறுவனம் தனது மற்றொரு அத்தியாயமாக இந்த ஆன்ட்ராய்ட் எனும் இயங்குதளத்தை உருவாக்கி, அதை மொபைல் பயன்பாட்டுக்கென வெளியிட்டு, தானும் மொபைல் சந்தையில் நுழைந்தது.

சுருக்கமாக ஆன்ட்ராய்ட் என்பது ஒரு இயங்குதளம். இது தற்போது புதியதாக வெளிவந்திருக்கும் Tablet PC, புதுவித மொபைல் போன்களுக்கான இயங்குதளமாகும். கணினியில் எப்படி OS இயங்குதளம் செயல்படுகிறதோ.. அதைப் போன்றே மொபைல்களுக்கான இயங்குதளமாக ஆன்ட்ராய்ட் செயல்படுகிறது. மொபைல், மற்றும் Tablet PCக்களில் தற்போது பயன்படுத்தப்படுவது ஆன்ட்ராய் இயங்குதளம்.

ஆன்ட்ராய்ட் மார்க்கெட்:
(Android Market)
ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்யப் பயனுள்ள சந்தை இதுவாகும். நாம் காய்கறி மார்க்கெட்டில் காய்கள் வாங்குவதைப்போல Android market – ஆன்ட்ராய்ட் பயன்பாடுகளை (Android applications)பணம் கொடுத்துப் பெற முடியும்.

சரி.. இந்த ஆன்ட்ராய்ட் இயங்குதளம் எத்தனை பதிப்புகளைக் கண்டிருக்கிறது? அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

1. cupcake (Android 1.5)
2. Donut (Android 1.6)
3. Eclair (Android 2.0/2.1)
4. Gingerbread (Android 2.3)
5. HoneyComb (Android 3.0)
6. Ice Cream Sandwich (Android 4.0)

android mobile
ஆண்ட்ராய்ட் மொபைல்

கூகிள் ஆன்ட்ராய் அப்ளிகேஷன்ஸ் ஒவ்வொன்றிற்கும் இனிப்பு உணவு வகைகளின் பெயரை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

1. Mobile-ன் முகப்புப் பக்கத்தை உங்கள் விருப்பப்படி வைத்துக்கொள்ளலாம். அதாவது நமக்குத் தேவையான விட்ஜெட்கள் முகப்பு பக்கத்தில் வைத்துக்கொள்ள முடியும். (Customize home screen)
2. நமக்கு வரும் எஸ்.எம்.எஸ். கள் threaded sms முறையில் இருக்கும். ஒருவர் அனுப்பும் எஸ்.எம்.எஸ் ஆனது தொடர்ந்து சங்கிலி முறையில் இணைக்கப்பட்டிருக்கும்.
3. இதிலுள்ள சிறப்பு பயன் Screenshot தான். மொபைல் திரையில் உள்ளதை கணினியில் screen shot எடுப்பதைப் போன்றே Screen Shot எடுக்கலாம்.
4. மற்றொரு அதிசய அப்ளிகேஷன் வாய்ஸ் ஆக்சன்(Voice Action) ஆகும். இந்த அப்ளிகேஷன் மூலம் உங்கள் வாய்ஸ் மூலமே மொபைலை கையாள முடியும். தமிழுக்கு இது ஏற்றதல்ல. ஆங்கில மொழி பேசுபவர்களுக்கு ஏற்ற அப்ளிகேஷன் இது.
5. பொதுவாக எல்லாம ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் google aps நிறுவப்பட்டிருக்கும்.
6. கணினியில் நாம் பயன்படுத்தும் பிரௌசர் போலவே இதிலுள்ள பிரவௌசர் செயலாற்றுகிறது. You tube video க்களை காண பிளாஷ் வசதி இதில் அடங்கியிருக்கிறது.

தகவல் மற்றும் படங்கள் உதவி: விக்கி பீடியா.

RELATED ARTICLES

4 COMMENTS

Comments are closed.

Most Popular

Recent Comments