Tuesday, December 24, 2024
Homecurrency convertorபணத்தின் மதிப்பைக் கண்டறியும் மென்பொருள்...

பணத்தின் மதிப்பைக் கண்டறியும் மென்பொருள்…

வணக்கம் நண்பர்களே…! நேற்று இடைவிடாத வேலைப்பளு காரணமாக பதிவெதுவும் எழுத முடியவில்லை. இன்றையப் பதிவில் பணத்தின் மதிப்பைக் கண்டறியும் மென்பொருளைப் பற்றிப் பார்ப்போம். பணத்தின் மதிப்பை ஏன் கண்டறிய வேண்டும். அதான் அதிலேயே நெம்பர் போட்டிருக்கிறதே என்கிறீர்களா?

free currency convertor
currency converting in mobile

பணத்தின் மதிப்பு என்பது இங்கே உலகளவில் பணத்தின் மதிப்பை (Globally, the value of money) குறிப்பதாகும். இன்று இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்காவின் டாலருக்கு(American Dollar) நிகராக எத்தனை ரூபாய் என்பதை கண்டறிவதாகும். இதே போல உலக நாடுகளின் பணமதிப்புகளுக்கு எதிரான (டாலர், யூரோ, யென் – Dollar, euro, yen) இந்திய ரூபாயின் மதிப்பு எவ்வளவு என்பதை கண்டறிய உதவுகிறது இம்மென்பொருள்.ஒவ்வொரு நாட்டிற்கும் உண்டான பணமதிப்பை மற்ற நாட்டின் பணமதிப்புகளோடு ஒப்பிட்டுக்கொள்ளலாம்.

நாளுக்கு நாள் பண மதிப்பில் ஏற்ற இறக்கம் கண்டு வரும் இந்த வேளையில் ரூபாயின் மதிப்பை உடனுக்குடன் கண்டறிய இந்த மென்பொருள் பயன்படும். அதாவது இன்று 54 ரூபாயாக இருக்கும் ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு நாளை 55 ரூபாயாக மாறலாம். அல்லது 53 ரூபாயாக குறையலாம்.

மின் வணிகம் (E-commerce ), பல்வேறு வகையான வியாபாரம் (Variety of business) செய்பவர்களுக்கு இந்த பணமதிப்பு மாற்றங்களை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. பணமதிப்பைத் (Value of Money) தெரிந்துகொண்டால், அதற்கேற்ப வணிக சூழ்நிலைகளை (Business environment) அமைத்துக்கொள்ளலாம். பணமதிப்பு மாற்றத்தை (Change in cash value ) உடனடியாக இவர்கள் கண்டுகொள்வது சிறிது கடினமான விஷயம். எனவேதான் இந்த desktop currency convertor -என்ற கரன்சி கன்வர்ட் மென்பொருள் (Currency Convertor software) உருவாக்கப்பட்டுள்ளது.

Desktop currency convertor மென்பொருளின் சிறப்பம்சங்கள்:

  1. உலகத்திலுள்ள 55 நாடுகளின் பணமதிப்பை உடனடியாக கூறிவிடும்.
  2. ஒவ்வொரு நிமிடமும் ஏற்படும் பணமாற்றத்தைத் தானாகவே அப்டேட் செய்துகொள்ளும். (automatic update)
  3. online – ல் மட்டுமல்ல offline mode -லும் செயல்படக்கூடியது.
  4. பயன்படுத்துவது மிகவும் எளிதானது.
  5. மென்பொருளைத் தரவிறக்க கீழிருக்கும் Download பட்டனை அமுக்கவும்.

மென்பொருள் தேவை இருப்பவர்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்திப் பாருங்கள். நன்றி நண்பர்களே..!

RELATED ARTICLES

1 COMMENT

Comments are closed.

Most Popular

Recent Comments