Monday, December 23, 2024
HomeFree softwareவீடியோக்களை விரைவாக டவுன்லோட் செய்ய - vdownloader

வீடியோக்களை விரைவாக டவுன்லோட் செய்ய – vdownloader

வணக்கம் நண்பர்களே.. இணையத்தில் வீடியோ பார்ப்பது என்பது நமக்குப் பிடித்தமான செயல்தான். ஆனால் அவற்றை தரவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு நேரமிருக்கும்போது பார்த்தால் இன்னும் கூடுதல் வசதி கிடைக்கும். நான் நினைக்கும் நேரத்தில் போட்டுப் பார்த்துக்கொள்ளலாம். கல்வித் தொடர்புடைய வீடியோக்கள் (Education related videos) என்றால் அடிக்கடிப் பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கும் இதுபோன்ற வீடியோக்களை தரவிறக்கம் செய்து தந்து வீட்டிலிருக்கும் டி.வி. யில் DvD Player-லும் போட்டு காட்டலாம்.

youtube download software - vdownloader
வீடியோ டவுன்லோட் சாப்ட்வேர்

எனவேதான் இணையத்தில் இருக்கும் வீடியோக்களை டவுன்லோட் செய்யக்கூடிய தேவைகள் இப்போது அதிகம் இருக்கிறது (video download on internet). இதற்காகவே சிறப்புத் தன்மைகள் கொண்ட மென்பொருளைப்( Special Software for video downloads) பற்றி இப்பதிவில் பார்க்கவிருக்கிறோம்.  அது என்ன சிறப்பு என்றால்..

அனைத்துவிதமான தளங்களிலிருந்தும் வீடியோக்களை இம்மென்பொருள் மூலம் டவுன்லோட் செய்துகொள்வதுதான். இதுதான் கூடுதல் சிறப்பு.

vdownloader installation
video download software – vdownloader

செய்திகளை தெளிவாக பார்த்தறிய பயன்படுவது இந்த வீடியோக்கள். கல்வி சார்ந்த வீடியோக்கள், தொழில்நுட்பம் சார்ந்த வீடியோக்கள், சினிமா, பாடல்கள், பல்வேறுபட்ட நிகழ்ச்சிகள், சிரிப்பு வீடியோக்கள் (Educational videos, technology videos, movies, music, variety shows, laughter videos) என பல்வேறுவகைப்பட்ட வீடியோக்களை இம்மென்பொருளின் மூலம் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

வீடியோக்களுக்கென பிரத்யேகமாக உள்ள தளங்களில் முதன்மையானது யூடியூப் (Special Video site YouTube). இந்த யூடியூப் தளத்திலிருந்து வீடியோக்களைப் பார்க்கவே முடியும். இதில் உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் வசதி (Download facility) (Download option) இந்த தளத்தில் இல்லை. ஆனால் பல்வேறுபட்ட மென்பொருள்களைப் பயன்படுத்தி தற்போது யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்கின்றனர்.

இவ்வாறான மென்பொருள்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற  வீடியோ டவுன்லோட் மென்பொருள் vDownloader. இந்த மென்பொருளைப் பயன்படுத்தி Youtube மட்டுமல்லாமல் பல்வேறுபட்ட தளங்களிலிருந்து உங்களுக்குப் பிடித்தமான வீடியோக்களை டவுன்லோட் செய்துகொள்ள முடியும்.

மென்பொருள் தரவிறக்க சுட்டி: 

 

இந்த மென்பொருளைப் பயன்படுத்தி இணையத்தில் அனைத்துவிதமான வீடியோக்களையும் டவுன்லோட் செய்து மகிழுங்கள்.. நன்றி நண்பரகளே..!

#videodownloader #onlinevideodownloader #freevideodownloaderonline #howtodownloadvideoonline
RELATED ARTICLES

2 COMMENTS

  1. நண்பா என்னுடைய தளத்தின் லிங்க் உள்ளது உன்னுடைய பதிவிற்கும் என்னுடைய தளத்தின் லிங்க் விற்கும் சம்மந்தமே இல்லையே நண்பா எனக்கு புரிய வில்லை :)- :)- :)-

    இருந்தாலும் கொஞ்சம் சந்தோசம் உன்னுடைய தளத்தில் இருந்து வந்து என்னுடைய தளத்தில் ஓரு பத்து பக்கம் பார்க்க பட்டுள்ளது நன்றி நன்றி

  2. தவறான இணைப்பு வழங்கியமைக்கு மன்னிக்கவும். தற்பொழுது சரியான தரவிறக்க இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி திரு ஆசாத் அவர்களே..!

Comments are closed.

Most Popular

Recent Comments