Monday, December 23, 2024
HomeMAKE MONEY ONLINEதமிழ் வலைப் பூக்களிலும் வருமானம் ஈட்டலாம்

தமிழ் வலைப் பூக்களிலும் வருமானம் ஈட்டலாம்

வணக்கம் அன்பு நெஞ்சங்களே…!

தமிழ் எங்கள் மூச்சு.. தமிழ் எங்கள் பேச்சு, தமிழ் எங்கள் உயிர் என்பன போன்ற வார்த்தைகளை வைத்துக்கொண்டே காலமெல்லாம் அரசியல் நடத்தி, அரசியல் செய்து பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளைப் போன்றதொரு செயல் இதுவல்ல..

தமிழ்தளங்களுக்கு விளம்பரங்களைப் பெற்றுத் தரும் ஒரு அரிய வாய்ப்பை செய்து தர முனைந்திருக்கும் தளத்தைப் பற்றியதொரு பதிவு இது.


பெரும்பாலான தமிழ்த்தளங்களுக்கு Google உட்பட முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்கள் (ad sense)கிடைப்பது என்பது குதிரைக் கொம்புதான். இந்த சூழ்நிலைகளைத் தவிர்த்து நன்றாக எழுதக்கூடிய பதிவர்களின் வலையில் விளம்பரங்களை வெளியிட்டு, அதன்மூலம் வருவாயை ஈட்டக்கூடிய வழிமுறைகளை செய்து தருகிறது இந்த தளம்..

மக்கள் சந்தை.காம்.

இந்ததளத்தைப் பற்றிய பதிவுகள் ஒன்றிரண்டு இணையத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை பதிவர் திருவிழாவில் (Chennai bloggers meeting) இந்த தளத்தின் நிறுவனர் அதில் உரையாற்றுகிறார். எப்படி தமிழ் வலைப்பதிவுகளுக்கு விளம்பரங்களைக் கொடுத்து, அதற்கான வருவாயை பெற்றுத் தருவது என்பது குறித்த விளக்க உரை அவ்விழாவில் இடம்பெறப்போகிறது..

பதிவெழுது பணத்தைப் பிடி

இதன் சார்பு இணையதளமான தொழிற்களத்தில் பதிவர்கள் தொழில்நுட்ப்ப் பதிவுகள் போன்ற பயனுள்ள பதிவுகளை எழுதியும் வருமான வாய்ப்பை பெறலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. உங்களுக்கு வலைப்பூவின் மூலம் வருமானம் ஈட்டக்கூடிய ஆர்வமிருந்தால் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.


இதுகுறித்த பதிவுகளை முன்னணி வலைப்பதிவர்களும் எழுதிவருகிறார்கள் என்றாலும் நமது தள வாசகர்களுக்காகவும் இப்பதிவை வெளியிடுவதில் சுப்புடுவாகிய எனக்கு மிக்க மகிழ்ச்சி…

இந்தப் பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கருத்துரையின் வாயிலாக தெரிவியுங்கள்.. நன்றி நண்பர்களே..!
RELATED ARTICLES

7 COMMENTS

  1. வணக்கம் நண்பரே!

    உங்களுடைய பதிவுகள் இலங்கைத்தமிழர்கள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் நிர்வாகியாவதன் மூலம் இணைக்கலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை rss4sk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்து நிர்வாகியாகுங்கள். கூகிள்சிறியில் சேர்க்கப்படும் பதிவுகள் தன்னியக்கமுறையில் டிவிட்டர்,பேஸ்புக்,லிங்டின் போன்ற சமூக தளங்களில் பிரசுரமாகி அதிக வாசகர்களை சென்றடையும்.

    தங்கள் மின்னஞ்சலை எதிர்பார்த்து
    யாழ் மஞ்சு

  2. நல்ல பயனுள்ள பதிவு தமிழில்.. நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.. தொடருங்கள் இந்த பயணத்தை.
    எனக்கு ஒரு சந்தேகம் உண்டு .. தீர்துவையுங்கள்.
    நாம் ஆன்லைனில் பார்க்கும் தளங்களை (வீட்டு கம்ப்யூட்டர் ல் இருந்து )
    பிறர் அறிய முடியுமா?..உதரணமாக
    ஏதாவது torrents டவுன்லோட் செய்தால், அதை பிறர் அறிய முடியுமா?
    நெட்வொர்க் serverl ல் அது store ஆகுமா? அல்லது நாம் பார்க்கும் தளங்களை பற்றிய
    விவரங்கள் ( நெட்வொர்க் மூலமாக) வேறு யாராவது வேவு பார்க்க முடியுமா?
    நாம் history delete செய்துவிட்டாலும், நெட்வொர்க் servers எதிலாவது store ஆகி இருக்குமா?
    பதிலை தங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன்.. நன்றிகளுடன். தங்கள் மெயில் id இருந்தால் நான் மெயில் ல் வருகிரேன்..

  3. நீங்கள் கேட்ட கேள்விகளனைத்திற்கு சாத்தியங்கள் உள்ளது. பிறர் நம் அனுமதியில்லாமலேயே நம்மை வேவு பார்க்கலாம். தொழில்நுட்ப அறிவு கொண்டோர்கள் இவற்றை எளிதில் செய்ய முடியும். வருகைக்கு மிக்க நன்றி திரு. Sivi சார்.

  4. அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளும், நன்றிகளும்.. ! தொடர்ச்சியாக உங்களுடைய ஊக்கமிகு கருத்துகளை எழுதி என்னை நிறைய எழுத தூண்டும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றி..!

Comments are closed.

Most Popular

Recent Comments