Monday, December 23, 2024
Homecomputer tipsHidden கொடுத்த போல்டரை மீண்டும் தோன்றச் செய்வது எப்படி?

Hidden கொடுத்த போல்டரை மீண்டும் தோன்றச் செய்வது எப்படி?

How to re appear the hidden folder

Hidden கொடுத்த போல்டரை மீண்டும் தோன்றச் செய்வது எப்படி? (Restoring hidden files) இதுதான் பதிவின் தலைப்பு. இது மிக சுலபமானதுதான். ஒரு சில வழிமுறைகளை பின்பற்றினால், விரைவாக ஹைட் செய்யப்பட்ட போல்டர் மற்றும் கோப்புகளை மீண்டும் தோன்றச் செய்யலாம்.

ஹிடன் கொடுக்கப்பட்ட கோப்புகள் மற்றும் போல்டர்களை தோன்றச் செய்யும் படிமுறைகள் கீழே  கொடுக்கப்பட்டுள்ளன.

  • உங்கள் கணினியில் Folder Options செல்லுங்கள்..
  • அதில் view டேப் கிளிக் செய்யுங்கள்.
  • அதில் தோன்றும் Addvanced settings -ல் உள்ள Hidden files and Folders என்பதை கிளிக் செய்துகொள்ளுங்கள்.
  • தோன்றும் பெட்டியில் இரு வேறு options இருக்கும்.
  • அதில் show hidden files, folders,drives.. என்னும் வசதியை தேர்வு செய்துவிட்டு Apply, ok கொடுக்கவும். அவ்வளவுதான். இனி நீங்கள் Hidden செய்த அனைத்து கோப்புகள் மற்றும் கோப்புறைகள் தோன்றிடும்.

கீழுள்ள வீடியோவில் எளிமையாக விளக்கி காட்டப்பட்டிருக்கிறது. பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 

இப்போது நீங்கள் மறைத்து வைத்திருந்த அனைத்து போல்டர்களும் மீண்டும் தோன்றும். மிக எளிதான செயல்முறை இது.. முயற்சித்துப் பாருங்கள்.. என்னுடைய வாழ்த்துகள்..!
Tags: Hidden Folder, Reappear Folder, Reappear folder and files, How to, Computer tips.

RELATED ARTICLES

4 COMMENTS

  1. நன்றி தனபாலன் அவர்கள்.. ஒவ்வொரு வலைப்பூவில் தங்களின் கருத்துரையைப் பார்க்கும்போது மகிழ்ச்சி உண்டாகிறது. உலகில் மிகச் சிறந்த பணி எது என்றால் ஒருவரை ஊக்கப்படுத்துவதே ஆகும். அந்தப் பணியை சிறப்புற தவறாமல் செய்து வருகிறீர்கள்.. தங்களுக்கு எனது நன்றி.

  2. நல்ல பயனுல்ள்ள தகவல்கள்

    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Comments are closed.

Most Popular

Recent Comments