Tuesday, December 24, 2024
HomeFree softwareஒரு மென்பொருள் பயன்படுத்தி அனைத்து புரோகிராம்களையும் திறக்க

ஒரு மென்பொருள் பயன்படுத்தி அனைத்து புரோகிராம்களையும் திறக்க

ஒரே ஒரு மென்பொருளை உங்கள் கணினியின் இன்ஸ்டால் செய்வதன் மூலம் கம்ப்யூட்டரில் உள்ள அத்தனை புரோகிராம்களையும் அதன் ஊடாக திறக்கச் செய்ய முடியும்.

 ஆச்சர்யமாக இருக்கிறதா? எனக்கும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. இந்த மென்பொருளை இணையத்தில் பார்க்கும் வரை. பயன்படுத்திப் பார்த்தவுடனேயே மென்பொருள் செய்யும் வேலைகள் எத்தனை எத்தனை? என்று என்னுள் நினைத்துக்கொண்டேன்.

ஒவ்வொரு கோப்பைத் திறக்க அதற்கென மென்பொருள் இருக்கும்போது இந்த மென்பொருள் எதற்கு? என்கிறீர்களா? இதுவும் நல்ல கேள்விதான்.

ஒரு புதிய கோப்பை நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள். அதே கோப்பை உங்கள் நண்பர்களுக்கும் பகிரந்தளிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்தக் கோப்புக்குரிய மென்பொருள் உங்கள் நண்பர்களின் கணினிகளில் இருந்தால் மட்டுமே அதைத் திறந்து பார்க்க முடியும்.

உதாரணம் Photoshop கோப்பு ஒன்றை உங்கள் நண்பருக்கு கொடுக்கறீர்கள். ஆனால் அவர் கணினியில் அந்த கோப்பைத் திறக்க Photoshop Software இல்லை..!

அந்த மாதிரியான தருணங்களில்தான் இந்த மென்பொருள் உங்களுக்கு கைக்கொடுக்கும். இதேபோல உங்கள் கணினிகளிலோ அல்லது உங்கள் நண்பர்களின் கம்ப்யூட்டர்களிலோ இதுபோன்று கோப்புக்குரிய மென்பொருள் இல்லாதபோது இந்த மென்பொருளைப் பயன்படுத்தி கோப்புகளைத் திறந்து பார்க்க முடியும்.

open freely software can open these type of files
ஒரே மென்பொருள் (Open Freely ) திறக்கும் கோப்பு வகைகள்

இந்த மென்பொருள் மூலம் பவர்பாய்ண்ட், எம்.எஸ். வேர்ட், எக்செல் (PPT, MS-WORD, EXCEL) போன்ற எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் கோப்புகளையும் திறந்து பார்க்க முடியும்.

சில சமயம் உங்கள் கணினிகளில் உள்ள மென்பொருள்கள் கூட கோப்புகளை திறக்க முடியாமல் சண்டித்தனம் செய்யலாம். அதுபோன்ற சமயங்களிலும் இந்த மென்பொருள் உங்களுக்கு துணை செய்யும். இம்மென்பொருளின் மூலம் கோப்புகளைத் திறக்க இதிலுள்ள browse கட்டளையைப் பயன்படுத்தி கோப்புகளைத் திறந்திட முடியும்.

Portable Document என்ற PDF கோப்புகளையும் இம்மென்பொருள் கொண்டு திறந்து பார்க்க முடியும். OPen Freely என்ற இந்த மென்பொருள் நூற்றுக்கும் அதிகமான கோப்புகளை திறந்துப்பார்க்க உதவுகிறது. இத்தனை வசதி மிக்க மென்பொருள் முழுவதும் இலவசமாக அளிக்கப்படுகிறது.

தேவையானவர்கள் கீழுள்ள டவுன்லோட் பட்டனைக் கிளிக் செய்து தரவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்.

பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் இந்த மென்பொருள் நிச்சயம் அனைவருக்கும் தேவையான ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மென்பொருளில் உள்ள சிறப்பம்சங்கள்:

  • Video Player ஆக இதைப் பயன்படுத்த முடியும்.
  • இதன் மூலம் திறந்த கோப்புகளை Print செய்யும் வசதி
  • ரேர், ஜிப் கோப்புகளை திறப்பதோடு, அவற்றை சுருக்கியும், விரித்தும் பெறலாம் என்பது கூடுதல் வசதி.
  • மேற்குறிப்பிட்ட Microsoft Office கோப்புகளை திறந்து பார்ப்பதோடு அந்தக் கோப்புகளை எடிட் கூட செய்ய முடியும். மேலும் பல வசதிகள் அடங்கியுள்ள இக்கோப்பைத் தரவிறக்கப் பயன்படுத்திப் பாருங்கள்.

மேலும் இந்த மென்பொருள் கூடுதலாக என்னென்ன வகையான கோப்புகளைத் திறக்கும் என்பதை மென்பொருளின் தளத்தில் பட்டியலிட்டிருக்கிறார்கள். அவைகள் கீழே:

Open Freely Supported Formats

Image Files
RAW Images
ARW, CF2, CR2, CRW, DNG, ERF, MEF, MRW, NEF, ORF, PEF, RAF, RAW, SR2, X3F
Icons
ICO

Photoshop Documents
PSD
Pictures
SVG, JPEG, JPG, PNG, GIF, BMP, TIFF, TIF
Windows System Files

Windows Files
EXE, DLL, BPL, SCR, CPL, OCX

Microsoft Office Files
Microsoft Word Documents
DOC, DOCX
Microsoft Excel Documents
XLS, XLSX, CSV
Microsoft PowerPoint Documents
PPT, PPTX, PPS
Microsoft Outlook Files
MSG, EML, VCF
Microsoft Word Templates
DOT, DOTX

Documents
Microsoft Works Files
WPS
Text Files
TXT, BAT, CFG, LOG, INI, REG, QIF, ICA
SRT Subtitles
SRT
Apple Pages
PAGES
Open XML Paper
XPS
PDF Documents
PDF
Rich Text Format Documents
RTF
Open Office Documents
ODT
WordPerfect Files
WPD

XML Files
XML, RESX

Media Files
Media Files
WMV, AVI, FLV, MPG, MPEG, MOV, MP4, MP3, MID, WAV, MKV, 3GP, FLAC, WMA, OGG
Flash animations
SWF

Archive Files

Compressed Files
7z, ZIP, RAR, GZ, TAR, TGZ, JAR, DEB
XPInstall Files
XPI
Torrent Files
TORRENT
Code Files

Code Files
JSP, JSP, VB, C, CS, JAVA, JS, PHP, SQL, CSS, ASP, ASPX
Google Earth Files
KML

Thanks & Source: http://openfreely.com

நன்றி நண்பர்களே..!

one software to open all program

RELATED ARTICLES

2 COMMENTS

Comments are closed.

Most Popular

Recent Comments