Friday, January 24, 2025
Homeblogger tipsவங்கி கணக்குகளின் ரகசிய கடவுச்சொற்களைப் பாதுகாக்க

வங்கி கணக்குகளின் ரகசிய கடவுச்சொற்களைப் பாதுகாக்க

வணக்கம் நண்பர்களே..!

Technology வளர வளர வசதிகளும் அதிகரிக்கவே செய்கிறது. இதை மறுப்பதற்கில்லை. இந்த டெக்னாலஜி நூறு சதவிகிதம் பாதுகாப்பானதுதானா?

இதில்தான் நமக்கு பிரச்னையே இருக்கிறது. துன்பம் போய் இன்பம் வருவதுபோல.. நன்மை போய் தீமையும் சில சமயம் தொழில்நுட்பத்தில் வரவே செய்கிறது. குறிப்பாக சொல்வதென்றால் நம்முடைய இன்றையப் பதிவான ஆன்லைன் பேங்கிங் பாஸ்வேர்ட் பாதுகாப்பது எப்படி? (How to Protect online banking password) இந்த குழப்பங்களை, ஏமாற்றங்களை தீர்க்கும் வழிமுறைகளை உங்களுக்கு கொடுக்கும் என்று நம்புகிறேன். பதிவிற்குள் செல்வோம்.


ஆம் நண்பர்களே..! இணையத்தில் பல்வேறு விதமான திருட்டுகள் (Various types of Internet piracy ) நடந்துகொண்டிருக்கின்றன. இதை மறுப்பதற்கில்லை. ஆனால் இவற்றிலிருந்து நம்மை எளிதாக பாதுகாத்துக்கொள்ள முடியும். எப்படி?

protect internet banking information

வெளியிடங்களுக்குச் சென்று உங்கள் சொந்த தகவல்களை கணினிகளில் பகிராதீர்கள்.
அலுவலகம்(Office), பிரௌசிங் சென்டர்(Browsing center) போன்ற பொது இடங்களில், பலர் பயன்படுத்தக்கூடிய கணினிகளில் உங்களுடைய பேங்க் அக்கவுண்ட், கிரடிட் கார்ட் தகவல்கள், டெபிட் கார்ட் தகவல்கள், இணையத்தில் பொருட்கள் வாங்குவது (Bank account information, credit card information, debit card information, online shopping) போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

இவ்வாறு ஆன்லைன் பர்சேஸ் (Online Purchase) செய்யும்போது நீங்கள் கொடுக்கும் உங்களுடைய கடனட்டை, டெபிட்கார்ட் (Credit card, debit card) போன்ற தகவல்கள் அந்த கணினிகளில் சேமிக்கப்படும்.
இத்தகவல்களை பிறர் பயன்படுத்த(misuse) வாய்ப்பிருக்கிறது. இதனால் உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை அவர்கள் எளிதில் எடுக்க முடியும்.

மேலும் கணினிகளில் கீ லாகர்ஸ் என்ற மென்பொருளை (Keylogger software) நிறுவுதன் மூலம் உங்கள் தகவல்களை அவைப் பெற்று, உரியவர்களுக்கு அனுப்பி வைத்துவிடும். அல்லது கணினியிலிருந்து அந்த தகவல்கள் பிறர் எளிதாக திருடி பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம்.

இவற்றைத் தடுப்பது எப்படி?

1. கீலாகர்ஸ் போன்ற மென்பொருள்கள் நீங்கள் உள்ளிடும் பாஸ்வேர்ட்டை ஒன்று விடாமல் கிரகித்து அவற்றை அப்படியே சேமித்துவிடும். இவற்றிலிருந்து தப்பிக்க முதலில் நீங்கள் உள்ளிடும் யூசர் நேம் பாஸ்வேர்ட் போன்றவற்றிற்கிடையே கூடுதலாக எழுத்துகளைச் சேர்த்து தட்டச்சு செய்துவிட்டு, பிறகு தேவையில்லாத எழுத்துகளை டெலீட் செய்யலாம்.
2. அடுத்து செய்ய வேண்டியது நீங்கள் உபயோகிக்கும் வங்கித்தளத்தின் முகவரியை (url)கவனிப்பது. அதில் https என ஆரம்பித்தால் உங்கள் வங்கித் தளம் பாதுகாப்பானது என்று பொருள். இதில் நம்பி உங்கள் வங்கிக் கணக்குகள் பற்றிய விபரங்களை உள்ளிடலாம்.
3. http எனத்தொடங்கியிருந்தால் நிச்சயம் அத்தளத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியே! அதில் உங்களைப் பற்றிய தகவல்களை உள்ளிடும்போது மற்றவர்கள் உங்கள் தகவல்களை அணுக அதிக வாய்ப்பிருக்கிறது. எனவே மறக்காமல் இதை கவனியுங்கள்.
5. அதேபோல் நீங்கள் பயன்படுத்தும் தளமானது வேறொரு தளத்திற்கு Redirect செய்யப்படுகிறதா என்பதையும் நன்கு கவனிக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் வங்கிக் கணக்குகளைப் பற்றிய தகவல்கள் மற்றவர்களால் திருடப்பட்டு, உங்கள் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தையும் திருடிவிடுவார்கள்.

இதுபோல செய்வதற்கு உலகளவில் நிறைய சைபர் கிரைம் திருடர் (Cyber ​​Crime pirates) இருக்கிறார்கள். இவர்கள் தொழில்நுட்பத்தில் புலியாக இருப்பார்கள். இவர்கள் தொழில்நுட்பம் தெரிந்து திருடர்கள்.இவர்களிடமிருந்து தப்பிப்பது எளிதான காரியமல்ல.. எனவே எந்த ஒரு கவர்ச்சி மிக்க விளம்பரங்களையோ, போலியான தளங்களின் கவர்ச்சியிலோ மயங்க வேண்டாம். அத்தளங்கள் உங்களை அழைத்துச்சென்று, உங்கள் தகவல்களை(Data) முழுவதும் பெற்றுக்கொண்டு  உங்களை ஏமாற்றிவிடும். எச்சரிக்கையுடன் இருப்பதே நல்லது.

மற்றுமொரு திருட்டு வழி:

அச்சு அசலாக அப்படியே நீங்கள் பயன்படுத்தும் வங்கித்தளத்தைப் போன்றே வடிவமைக்கப்பெற்ற போலியான தளம். இதில் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் நீங்கள் அத்தளத்திற்குரிய URL-ல் ஏதேனும் ஒரு எழுத்து மட்டுமே மாற்றியமைக்கப்பட்டிருக்கும். அதாவது WWW.HDFC.COM என்ற வங்கித்தளத்தினைப் போன்றே வடிவமைக்கப்பட்ட போலியான தளத்தில் WWW.HDEC.COM என்பது போன்ற தள முகவரி இருக்கும். இதில் ஒரு எழுத்து மட்டுமே வித்தியாசப்பட்டிருக்கும். நன்றாக கவனிக்காமல் அத்தளத்தில் உங்கள் வங்கிக் கணக்குகளைப் பற்றிய விபரங்களை உள்ளிட்டீர்களெனில் உங்கள் தகவல்கள் அத்தளத்தின் சர்வரில் சேமிக்கப்பட்டுவிடும். பிறகு தளத்திற்குரியவர்கள் அத்தகவல்களைப் பெற்று உங்களுடைய தகவல்களை பயன்படுத்தி, வேறு தகாத செயல்களுக்கு பயன்படுத்திக்கொள்வார்கள். Online Banking, money transferring போன்ற செயல்களை உங்கள் கணக்கிலுள்ள பணத்திலிருந்தே செய்து அவர்கள் பலனடைவார்கள். இத்தகைய திருட்டு முறைக்கு ஆங்கிலத்தில் Phishing என்று சொல்வார்கள்.

இக்காலத்தில் தேவை கவனம். ஒரு நொடி கவனம் பிசகினாலும் ஒரே அடியாய் அடித்து துவம்சம் செய்து விட்டு, இருந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டுப் போகும் காலமிது… இணைய உலகில் சொல்லவும் வேண்டுமா என்ன?

அதனால் நண்பர்களே.. இணையத்தில் இதுபோன்ற விடயங்களில் (money transfer, online banking, online purchase) ஈடுபடுபவர்கள் எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுங்கள். உங்கள் பணத்தை உங்களுடையதாகவே வைத்துக்கொள்ளுங்கள்..!

மிக்க நன்றி. அடுத்தப் பதிவில் சந்திப்போம்.

– சுப்புடு
RELATED ARTICLES

3 COMMENTS

Comments are closed.

Most Popular

Recent Comments